மாரிசன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

வழி பயணத்தில் நடக்கும் திரில்லர் படமாக வந்துள்ளது மாரீசன்.

பகத் பாஸில் தண்டனை அனுபவித்து விட்டு, சிறையில் இருந்து வெளி வருகிறார் வெளியே வந்தவர் ஒரு செல்போனை திருடிக் கொண்டு, ஒரு பைக்கை திருடிக் கொண்டு, நாகர்கோவிலில் இருக்கும் ஒரு மர்மமான வீட்டுக்குள் நுழைகிறார் அங்குதான் படத்தின் மிக திருப்புமுனையான காட்சி நடக்கிறது.

அங்கு வடிவேலு கைவிலங்கு பூட்டப்பட்டு ஞாபகமறதி உள்ளவராக இருக்கிறார்.
அவர் யார் என்பது படத்தின் முதல் சஸ்பென்ஸ்.

வடிவேலு ஒரு அல்சைமர் நோயாளி. பகத் பாஸில் வடிவேலுவை அந்த வீட்டை விட்டு வெளியே கூட்டி வருகிறார்.

ஒரு கட்டத்தில் ஏ டி எம் மில் இருந்து பணம் எடுக்கிறார் வடிவேலு. அதில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வடிவேலு எடுத்திருப்பதாக காட்ட இதனை ஃபகத் ஃபாசில் பார்த்து விடுகிறார். அந்த இடத்தில் இரண்டாவது சஸ்பென்சை வைத்திருக்கிறார் இயக்குனர்.

அதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என நினைத்து வடிவேலு வை, நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஃபகத் ஃபாசில் பைக்கில் அழைத்து வருகிறார்.

இந்தப் பயணத்தில் என்ன நடந்தது?

வழி முழுக்க சுவராஸ்யமான சம்பவம் நடக்கிறது

இறுதியில் வடிவேலுவிடம் இருந்து ஃபகத் ஃபாசிலுக்கு பணம் கிடைத்ததா,?
வடிவேலு யார்?

என்பதை இரண்டாம் பாதியில் திரில்லராக விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது
மாரிசன் “.

வடிவேலுவும் பாசிலும் வெவ்வேறு நிலப்பரப்புகள் வழியாக சாலைப் பயணத்தைத் தொடங்குவதும், அவர்கள் மாயாபஜார் திரைப்படத்தின் “ஆஹா இன்ப நிலவினிலே” பாடலைப் பாடுவதும் வாழ்க்கை ஒரு பயணம் என்று வடிவேலு தத்துவம் பேசுவது ரசிக்க வைக்கிறது. அதேபோல பாசில் வீட்டுக்கு வடிவேலு வந்த பிறகு சில திருப்புமுனையான காட்சிகள் நடக்கிறது.

பாசிலும், விவேக் பிரசன்னாவும் போடும் திட்டங்களை வடிவேலு எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரசியமான பகுதி. வடிவேலு ஒவ்வொரு முறையும் ஞாபகம் மறதியால் பாசிலை தயா என்றும், குமார் என்றும் அழைத்துக் குழப்புவது கதையின் முக்கியத்துவத்தை ஏற்படுகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து மனதை உருகவைத்து விடுகிறது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

நடிகர் நடிகைகள்:

வேலாயுதம் பிள்ளையாக வடிவேலு

அமைதியான நடிப்பின் மூலம், ஆழமான பார்வையில், அருமையாக நடித்திருக்கிறார் , எதுவும் பேசாமல் மௌனமாக தன் காரியத்திலேயே கண்ணாக இருந்து வெற்றியடைகிறார். அவர் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு அவர் யார்? என்று காட்டும் பொழுது அற்புதம்! வித்யாசமான கதாபாத்திரம் வெளுத்து வாங்கி இருக்கிறார் வைகை புயல்.

தயாவாக ஃபஹத் ஃபாசில்

தயாவாக ,பணத்துக்கு ஆசைப்பட்டு வடிவேல் உடன் பயணம் செய்யும் அந்த கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கிறது .

படம் முழுக்க துருதுருவென, வடிவேலு விடமிருந்து ஏ டி எம் கார்டை ஆட்டையை போட்டு தன் நண்பன் கனேஷுக்கு அதை அனுப்பி வைத்து ஃபுல் டீடைல்ஸ் கேட்பதாகட்டும், கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும் போது அவர் எடுக்கும் விஸ்வரூபம் ஆகட்டும் படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது .பகத் பாசில் இந்த கதாபாத்திரத்துக்கு அருமையாக பொருந்தி இருக்கிறார்.

காதல் இல்லை, டூயட் இல்லை, ஆனாலும் ராஜாங்கம் செய்திருக்கிறார்.

அவரின் கண்கள் பேசுகிறது உடல் மொழி நடிப்பு அற்புதமாக இருக்கிறது ஒரு திருடனாக எப்படி லாபகமாக நடிக்க வேண்டுமோ அதை எதார்த்தமாக செய்து தான் ஒரு சிறந்த நடிகன் என்று பெயர் பெற்று விடுகிறார் கமலஹாசனை பற்றி சொல்லும் பொழுது அவரைப் போல் மகா நடிப்பெல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லும் பொழுது கைதட்டல் .

பகத் பாஸில் தமிழ் சினிமாவிலும், மலையாள சினிமாவிலும், உச்சத்தில் இருக்கிறார் .எனவே இரண்டு மொழியிலும் இந்த படம் வெற்றி அடைவது உறுதி.

கோவை சரளா ஹரிதா பேகம்

என்ற கதா பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலுவும், கோவை சரளாவும், படத்தில் இருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது ஆனால் இதில் வித்தியாசமான வடிவேலு, வித்யாசமான கோவை சரளா ,என்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸராக கெத்தாக நடித்திருக்கிறார் கோவை சரளா.

அவர் வரும் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது கிளைமாக்ஸ், காட்சியில் , தனக்கு பேத்தி பிறந்து இருக்கிறாள். என்று குற்றவாளிக்கு இனிப்பு வழங்கும்போது கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்.

விவேக் பிரசன்னா கணேஷ் என்ற கதாபாத்திரத்தில்,

பகத் பாசில் நண்பனாக, வடிவேலு விடமிருந்து பணத்தை ஆட்டைய போடுவது இவரும் குறியாக இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி இவர் நடிப்பு விஸ்வரூபம் எடுக்கிறது விவேக் பிரசன்னா இந்த படத்தில் அசத்தியிருக்கிறார்.

சித்தாரா மீனாட்சி என்ற வேடத்தில் வருகிறார்

பள்ளியில் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தும் இவர் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்பதால் நாம் இதற்கு மேல் இதை விவரிக்க வேண்டாம். ஒரு நடிப்பு நன்றாக இருக்கிறது. சித்தாரா வரும் காட்சிகள் சூப்பராக இருக்கிறது

பி.எல். தேனப்பன்

கோவை சரளாவுடன் இணைந்து, குற்றவாளியை கண்டுபிடிக்கும் கிருஷ்ணகுமார் என்ற காவல் துறை அதிகாரியாக கச்சிமாக பொருந்தி இருக்கிறார்.

மற்றும் லிவிங்ஸ்டன்

வடிவேலுவுக்கு உதவி செய்யும் சாரி என்ற கதாபாத்திரத்தில், ஒரு காட்சிக்கு வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரேணுகா

பகத் பாசில் அம்மாவாக வருகிறார்.

சரவண சுப்பையா நீதிபதியாகவும்,

கிருஷ்ணா ஹரிதா டெலிபோன் ராஜா ஸ்ரீனிவாஸ் இவர்கள் எல்லோரும் படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது

தொழில்நுட்ப கலைஞர்கள் சுதீஷ் சங்கர் இயக்கத்தில்,

படம் தெளிவாக இருக்கிறது முதல் பாதி முழுவதும் பயணத்தில் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் மூலம் காமெடியும் கலகலப்புமாக, படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படத்தின் டெம்போவை உயர்த்தி ,அடுத்து என்ன நடக்கும்? என்ற ஆவலை தூண்டி இருக்கிறார்! வெல்டன் இயக்குனர் கதை ,திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்

வி. கிருஷ்ணமூர்த்தி இன்று நாட்டில் நடக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ,மனதுக்கு நெருக்கமான சில காட்சிகளை வைத்து தீர்வு சொல்லியிருக்கிறார்! பகத் பாஸில் கதாபாத்திரமும், வடிவேலு கதாபாத்திரம் ,படம் முழுக்க பயணம் செய்தாலும் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்கள் கிளைமாக்ஸ் காட்சி மனதுக்கு நிறைவைத் தருகிறது. வசனங்கள் ஆங்காங்கே மனதை டச் செய்கிறது.

கிரியேட்டிவ் டைரக்டர் ஆகவும் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய பங்குக்கு, படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார் . வாழ்த்துக்கள் சார்

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நேற்று ஒருவரை பார்த்தோம், என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. வடிவேலு பாடும் பாடல் உருக வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன்.

கலைச்செல்வன் சிவாஜியின், ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.

இரவு நேரத்திலும் ஹோட்டல் அறையிலும், அடர்ந்த காடுகளிலும், பகத் பாஸில் வீடாக காட்டும் அந்த கிராமத்திலும், திருவண்ணாமலைக்கு செல்லும் பயண பாதைகளும், ஏரிக்கரையோரம் வடிவேலுவும் பகத் பாசில் அமர்ந்து பாடும் காட்சிகளும், கேமரா அழகான ஓவியத்தை தீட்டி இருக்கிறது.

ஸ்ரீஜித் சாரங்க்

படத்தொகுப்பு படத்திற்கு மிக கச்சிதமாக இருக்கிறது. இடைவேளை வரை படம் மெதுவாக போவது போல் இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ரெக்கை கட்டி பறக்கிறது! அது படத்தொகுப்பாளரின் கைவண்ணம்.

மோகன் ராஜாவின், காஸ்டியூம் டிசைன் கச்சிதமாக இருக்கிறது. வடிவேலுவுக்கும்,
பகத் பாஸிலிக்கும், சித்தாராவுக்கும் ,

ஆடைகள் தேர்வு கச்சிதமாக இருக்கிறது.

அப்துல் அவர்களின்

ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது. மிகைப்படுத்தாத அந்த ஒப்பனை, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு கச்சிதமாக இருக்கிறது.
ஆர்ட் டைரக்டராக மகேந்திரன் பணி புரிந்திருக்கிறார். ஹோட்டல் அறை, பகத் பாஸிலின் வீடு, வடிவேலு வீடு, காவல்துறை அதிகாரிகளின் ஸ்டேஷன் ,மற்றும் எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பணி அசத்தலாக இருக்கிறது .
சண்டை பயிற்சியை பீனிக்ஸ் பிரபு வடிவமைத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி, சண்டைக் காட்சி அசத்தலாக இருக்கிறது.
மதன் கார்த்தி, சபரீசன் ,மற்றும் சண்முகம் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள் பாடல் ரசிக்க வைக்கிறது.

Production controller: A Jaii Sampath
Sound Mixing: M R Rajakrishnan
Sound Design: Sync Cinema
VFX: Lavan & Kushan (Digital Turbo Media)
DI: Knack Studios
Stills: Sheik Fareedh
Posters: Yellow tooths
Negative Right holder: A P International
Label: Saregama India Limited, A RPSG Group Company
திரைக்குப் பின்னால் உழைத்திருக்கும் இவர்கள் பங்கு மகத்தானது. படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த மாரிசன், நீதியை நிலைநாட்ட, தர்மத்தை காப்பாற்ற, அதர்மம் எங்கே தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் மாரிசன் உருவாவான் என்பதை சொல்லி இருக்கிறது இந்த படம் .வெற்றி பட்டியலில் மாரிசன்🙏🌷