ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர்.
இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி,சந்தான பாரதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு குரு சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து விரும்பிப் பார்க்கும் கதைக்களமாக இந்த திரைப்படம் இருந்து திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் 150 திரையரங்குகளில் இருந்து 250 திரையரங்குகளாக அதிகப்படுத்தி உள்ளனர். இது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாக உள்ளது. நீங்களும் குடும்பமாக இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்.
