காத்து வாக்கில ஒரு காதல் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

மாஸ் ரவி பூபதி காத்து வாக்குல ஒரு காதல்” திரைப்படத்தை எழுதி, இயக்குவது மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

வித்தியாசமான வேடத்தில் கலக்கியிருக்கிறார் கதை சொன்ன விதத்திலும், காதலை சொன்ன விதத்திலும், நம்மை கவருகிறார். அறிமுக நாயகன் மாஸ் ரவி
வாழ்த்துக்கள் சார்.

இப்படத்தில் லட்சுமி பிரியா, மேகலா என்ற வேடத்தில் அழகாக வந்து போகிறார்
மகாநதி சீரியலில் நடித்த பிரபலமான இவருக்கு , இந்த படம் தான் முதல் தமிழ் படம் கிளைமாக்ஸ் காட்சி, கடல் நீரில் நின்றபடி மூன்று நாள் நடித்துக் கொடுத்திருக்கிறார். பட முழுக்க ஜீவா, ஜீவா, என்று உறுகி காதலை வெளிப்படுத்தி அம்சமாக வந்து போகிறார்.

மஞ்சுளா, பல்லவி என்ற கதாபாத்திரத்தில் இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் ஒருதலையாக மாஸ் ரவியை காதலித்து, அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூப்பர் சுப்பராயன், ராயன் என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் நல்ல நேரம் பார்த்து கொலை செய்யும் தாதாவாக மிரட்டி இருக்கிறார் என்ன ஒரு வில்லத்தனம் செமயாக நடித்திருக்கிறார்.

சாய் தீனா ரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் ஒவ்வொருவரையும் போட்டு தள்ளிவிட்டு மெயின் வில்லனாக மிரட்டி இருக்கிறார். ராயனுக்கு அடியாளாக அமாவாசை போல வந்து காதல் செய்பவரை சேர்த்து வைத்து, காமெடி செய்து, வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கல்லூரி வினோத், தீனா நண்பர் வேடத்தில் கல கலப்பு ஏற்படுத்துகிறார். மேனக்சன்மீட்பு, கர்ணன் வேடத்தில் திலீப் சூப்பராயனை, தீர்த்துக் கட்ட நேரம் பார்க்கிறார் தீனாவுக்கும், டப்பு கொடுக்கிறார் மிரட்டலான நடிப்பு. மற்றும் இப்படத்தில் கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார் சீனிவாசன், கபாலி விஸ்வந்த், மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ஆதித்யா , சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது

கதை களம்

பார் நடத்தி வரும் சத்யா, ஹார்பரில் காண்டாக்ட் எடுக்க உள்ளேநுழைய, தனக்கு தொழில் போட்டியாக வந்த சத்யாவை, ராயன் போட்டு தள்ளுகிறார். நல்ல நேரம் பார்த்து கொலை செயகிறார்.

அடுத்து ராயனை போட்டு தள்ள கர்ணன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, பணத்துக்காக எதையும் செய்ய ரத்னம், ராயனைப் போட்டுத் தள்ளுகிறார்.

ரத்னம் போட்டு தள்ளியது ராயனை என்று தெரிந்தவுடன் போலீஸ் ரத்தினத்தை சிறைக்கு இழுத்து செல்கிறது. இதற்கிடையில் காதலர்களான சத்யா வை ஒரு கொலைகாரன் போட்டு தள்ள கிஷோர் ரிவெஞ்ச் எடுக்கிறார்.

இடைவேளை வரை இப்படி கொலையும் அதன் சார்ந்த காட்சி அமைப்புகளும் ரணகளத்தில் கதகளி ஆட, ஜீவாவும், மேகலாவும், காதலிக்கும் காட்சிகள் தென்றலாய் வந்து போகிறது.

இண்டர் வெல் பிளாக் மாஸ் ஆட்டம் காட்டுகிறார் மாஸ் ரவி, காதல் தினத்தன்று தன் காதலை சொல்ல வந்த மேகாவுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது ,அது என்ன?

காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இரத்தினத்தை மாஸ் ரவி போட்டு தள்ளினாரா?

என்பதை விறுவிறுப்போடு, பரபரப்போடு , சொல்லி இருக்கும் படம் தான் காத்து வாக்கிலேயே ஒரு காதல், காற்றை யாரும் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். அதுபோல காதல் கருப்பா, சிவப்பா பார்க்க முடியாது. சுவாசிக்கத் தான் முடியும் என இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில், தற்போது இளம் பெண்களின் வாழ்க்கை சமூக வலைதளங்களில் எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தை படமாக்கி இருக்கின்றனர்.

எழுதி,இயக்கி நடித்திருக்கிறார் மாஸ் ரவி நாயகனாக அருமையான நடிப்பை கொடுத்து, படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார்.

காதலிக்கும் பொழுது உருகி உருகி நடிப்பதும் பின் இடைவேளைக்கு பிறகு மாசான ரவுடியாக, அம்மா சொன்னதற்காக கத்தியை தொடாமல் அந்த ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் திருந்தி வாழ வேண்டும் என்று நினைப்பதும், தன் காதலை மேகலாவுக்காக அவள் நினைவாக இளம் காதலர்களை பிரிப்பது
மற்றும் சாய்தீனாவுடன், மோதுவது, இருவரும் ஒருவருக்கொருவர் நாள் குறிப்பது, என கமர்சியல் ஆன கலகலப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். எழுத்திலும் இயக்கத்திலும் சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார் மாஸ் ரவி ,பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்

தொழில் நுட்ப கலைஞர்கள்
இப்படத்தை ராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார்.

காட்சிகள் ஒவ்வொன்றும் கண்முன் நிற்கிறது. கடற்கரையும் ,கடல் சார்ந்த அந்த மணல் பரப்பும் ,ராயபுரத்தை டாப் ஆங்கிளில் இருந்து படம் பிடித்து, கேமரா விளையாடி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் . படமாக்கி இருக்கிறார் கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.

ஜி.கே.வி மற்றும் அருள் தேவ் இருவரும் இசையமைத்துள்ளனர்

மெலோடி கானா, காதல் பாட்டு, ரசிக்க வைக்கிறது. அஞ்சு வயசுல காதலிச்சேன் என்ற கானா பாடலை தேவா பாடியிருக்கிறார். அவ்வளவு நன்றாக இருக்கிறது. பின்னணி இசை மிரட்டி இருக்கிறது. மாஸ் ரவி வரும் காட்சிகள் பின்னனி இசை நன்றாக இருக்கிறது.

படத்தொகுப்பு, ராஜ்குமார்

காதலையும், கொலைகளையும், மாற்றி மாற்றி காட்டி, படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். கடைசி அரை மணி நேரம் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

சண்டை பயிற்சி சூப்பர் சூப்பராயன்,

சண்டைகள் அனல் தெரிக்கிறது. ராயனாகவும் ,மிரட்டி இருக்கிறார். ஹேப்பி சன் ஜெயராஜ், நடன பயிற்சி அமைத்திருக்கிறார். அஞ்சு வயசுல காதல் பாடல்கள் நடனம் ரசிக்க வைக்கிறது. சஞ்சனா சிங் கிளாமர் பாடலில் தூக்கலாக இருக்கிறது.

மற்றும் இப்படத்திற்கு அரங்கம் அமைத்தவர், ஒப்பனை செய்தவர், எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இப் படத்தை சென்னை ப்ரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் ,என கமர்சியல் படமாக தயாரித்து இருக்கிறார்கள்

தயாரிப்பாளர் எழில் இனியன், அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் குமரேசன் அவர்கள் படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

காதலையும், கொலைகளையும், படத்தின் கதைகளமாக , கொண்டு வட சென்னை படமாக வந்திருக்கிறது வெற்றி பட்டியலில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் 🌷