நாளை நமதே திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கிரியேஷன்ஸ் T சிவா வழங்கும் ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நாளை நமதே

கதைக்களம்

சிவகங்கை மாவட்டம், சிவதாணுபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அங்கு காலம் காலமாக ஆதிக்க சக்தியினர் தலைவராக இருந்து வருகிறார்கள். திடீரென அரசு அந்த ஊராட்சி ஒன்றியத்தை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கிறது.

கொதித்து எழுகிறார்கள் ஆதிக்க சாதியினர் நமக்கு கீழே வேலை பார்த்தவனை நாம் தலைவர் பதவியில் உட்கார வைத்து கைகட்டி நிற்பதா? என்று ஆனால் அந்த காலனியை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி நாட்டுக்காக போரிட்ட தியாகியை தலைவராக நிறுத்த முடிவு செய்கிறார்கள் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய போகும்போது, ஆதிக்க சாதியினரால் வெட்டி சாய்க்கப்படுகிறார்கள் அப்பொழுது குழந்தையாக இருக்கும் அமுதா தன் தாத்தாவின் நிலை கண்டு துடிக்கிறாள்.

அதற்குப் பிறகு தேர்தல் அது பொது தொகுதி ஆக்கப்பட்டு, 15 வருடமாக ஆதிக்க சாதியினர் அங்கு கோளாச்சி வருகிறார்கள் .

மீண்டும் தேர்தல் நடத்த அது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறதுஅந்த தேர்தலில் சூழ்நிலையால் அமுதா வேட்பாளராக நிற்பதாக, சொன்னவுடன் அவருக்கு ஏற்படும் இன்னல்கள், ஊராரின் ஏச்சுகள், பேச்சுக்கள், அமுதாவுக்கு நடை பெற இருந்த திருமணம் நின்று போக ,ஆதிக்க சாதியினர், அமுதாவை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது . அந்த கொடுங்கோலர்களிரன் கனவுகளை அமுதா தகர்த்தாரா? அந்த தேர்தலில் வெற்றி பெற்றாரா? அல்லது அவர் தாத்தாவைப் போல அவரையும் வீழ்த்தினார்களா? ஆதிக்க சாதியினர், என்பதை இன்றைய சமகால அரசியலுக்கு ஏற்ப கதை, எழுதி ஒரு அருமையான திரைப்படத்தை கொடுத்திருக்கிறது படக்குழு, ஆணவ கொலைகள் நடந்தேறி வரும் இந்த நாளில் அதை தடுக்க , தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த சமயத்தில் இது போன்ற ஒரு திரைப்படத்தை கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரிப்பாளரும், இயக்குனரும் மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் மக்களிடம் போய் சேர வேண்டும்.

நடிகர் & நடிகைகள்
நாயகி – மதுமிதா

அமுதா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். சின்ன குழந்தையா இருக்கும்போது தாத்தாவை ஆதிக்க சாதியினர் வீழ்த்த, அதற்கு பிறகு எனக்கு சாதியும் இல்லை, சாமியும் இல்லை, என்று திருநீரை நெற்றியில் இருந்து அழித்துவிட்டு வீரப் பெண்மணியாக புறப்படும் காட்சியில் இருந்து, கிளைமாக்ஸ் காட்சி வரை அவருடைய நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது ஒரு புரட்சி பெண்ணாகவே அமைக்கப்பட்டுள்ளது ஆரம்பக் காட்சியில் வீதியில் விளக்கு இல்லாமல் சாப்பிடுவது , மேல் சாதியினர் அவர்கள் மீது ஒரு செவிலியர் பெண் என பாசத்துடன் அரவணைத்து, மனநலம் குன்றிய பெண்ணை காப்பாற்றுவது , தன்னை கொல்ல நினைக்கும் விருமாண்டி யின் மனைவியை உயிரை காப்பாற்றுவது, தன் சாதிசனம் எல்லோரும் தேர்தலை நிற்காதே, என்று அறிவுரை கூறும் பொழுதும் நான் நிற்பேன் என்று துணிச்சலாக சொல்வதும், தனது திருமணமே நின்று போனாலும், கலங்காமல் தேர்தலை சந்திப்பது என்று ஒவ்வொரு காட்சியிலும் அமுதா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் மதுமிதா அவருக்கு 🌷 வாழ்த்துக்கள்🌷

வேல்முருகன்

காமெடியில் கலகலப்பாக நடித்திருக்கிறார். வெள்ளை சாமி, என்ற கதாபாத்திரத்துடன் அவர் அடிக்கும் கூத்து ரசிக்க வைக்கிறது.

செந்தில் குமார்

ராமையா, என்ற கதாபாத்திரத்தில் 15 வருடமாக அந்த ஊராட்சி ஒன்றியத்தில் தலைவராக இருந்து மீண்டும் பதவிக்கு ஆசைப்படுவது தனது பங்காளியான விருமாண்டி உடன் மோதுவது கடைசியில் இந்துவின் கையால் உயிரை விடுவது, என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராஜலிங்கம்

இவர் நடிப்பும் உருட்டல் மிரட்டலாக இருக்கிறது

முருகேசன்

பெருமாள் என்ற கதாபாத்திரத்தில், முதல் மரியாதை படத்தில் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி என்று சொல்லிக் கொண்டு வந்தவர் இதில் விருமாண்டி யிடம் கூனிக்குறுகிக்கொண்டு பட்டியலின மக்களின் பரிதாபத்தை வரவழைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் . கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார்.

மத போதகராக வந்து அமுதாவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்

மாரிக்கண்ணு, கோவை உமா, மற்றும் கிராமத்து மக்கள் அனைவரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் வழக்கமான’ படம் இல்லை என்று முற்றிலும் விலகி, வேறு ஒரு பரிமாணத்தைக் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் எந்நேரமும் ஆதிக்க சாதியினர் செய்யும் அதிகார திமிரும் , ராமையா, விருமாண்டி சொல்லுக்கு எள்ளென்றால் எண்ணெய்யாக இருக்கும் ஊர்மக்கள் எனப் புதிய பரிணாமத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் இடையிடையே அமுதாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பால் அக்கதாபாத்திரத்திலிருந்து பார்வையாளர்களை ஈர்க்கின்றன.அதிகாரத் திமிரில் மிரட்டியெடுக்கும் விருமாண்டியின் மனைவிகதாபாத்திரம் வழக்கமான கதாபாத்திரம் அல்ல செந்தில் குமார், அரசியல் வில்லனாக வந்தாலும், சின்ன சின்ன மேனரிஸத்தாலும், நக்கலாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் கதாநாயகனுக்கும், கதைக்கருவிற்கும் கொஞ்சம் வேறு படுகிறது நாயகியோடு ஒத்து போயிருந்தால் இன்னும் கொஞ்சம் வலுப்பெற்று இருக்கும்

இயக்குனர்

வெண்பா கே. கதிரேசன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனராக வளம் வருவார் நாளை நமதே என்று டைட்டில் அவருக்கு நிச்சயம் பொருத்தமாக இருக்கும் உலக சினிமாவில் இருக்கும் தத்துவங்களை இந்த உள்ளூர் அரசியல் மூலம் அழகாக சொன்னதற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் –

பிரவீன் தனது கேமரா கண்கள் மூலம் கிராமத்து அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். அங்கு இருக்கும் பயங்கரவாதத்தையும் தோலுரித்து காட்டி இருக்கிறார்

எடிட்டர் – ஆனந்த் லிங்ககுமார்

இவரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. படத்தொகுப்பாளர் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டும் விதத்தில் படத்தை கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்.

தாமோதரன் -ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் அமுதாவின் வீடு, ராமையாவின் வீடு ஊராட்சி அலுவலகம் என எல்லா இடங்களிலும் அவர் கை வண்ணம் விளையாடி இருக்கிறது

வி.ஜி ஹரியின் இசையில் பாடல்கள், பின்னணி, இசை மிரட்டலாகவும் உருகவும் வைத்து இருக்கிறது

மக்கள் தொடர்பாளர் குணா அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த நாளை நமதே தனித் தொகுதிகளில் அதிலும் ஊரக உள்ளாட்சியமைப்புகளிலுள்ள தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏற்படும் தீண்டாமைகளையும், அவர்கள் படும் வலிகளையும் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் வெண்பா கதிரேசன் கதாபாத்திரங்களும், அவர்களின் வாழ்வியலும் இயல்பான நடிப்பில் கவனம் பெறுகிறது முக்கியமாக, ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்சிப்படுத்திய விதம் அச்சு அசலாக இருக்கிறது. ஒருபக்கம் அவர்களின் வாழ்வியலில் உள்ள கஷ்டங்களைக் காட்சி படுத்துதல் மறுபக்கம் அவர்களின் உடைகள் தொடங்கி, உடல்மொழி எல்லாவற்றிலும் கழிவிரக்கத்தைக் கொண்டு வர முயல்கிறார். அதேபோல், பிரதான கதாபாத்திரமான அமுதா ஒரு காட்சியில் தன் உடல்மொழியாலும், பேச்சாலும் அப்புராணியாகத் தெரிய, அடுத்தக்காட்சியிலேயே தெளிவான அரசியல் பேசும் நபராகவும் இருக்கிறார். இத்தகைய மாற்றங்களால் அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிபோக முடிகிறது.

பல விருதுகளுக்கு தகுதியான படம் நாளை நமதே” வருங்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் ,அரசியல் பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திஇருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷