பாய் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் மும்பை குண்டு வெடிப்பு இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி ஆதரவு அற்ற குழந்தைகள் பற்றி சொல்லும் படம் “பாய்

தீவிர வாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கும்
படம் “பாய்

ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் போல் தமிழகத்திலும் தீவிரவாதக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூளையாக செயல்படும் நாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் வசிக்கிறார். அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரியக்கூடாது, அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்ணும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிறகு என்ன நடந்தது ?, அந்த ஆணும், பெண்ணும் யார் ?, வீட்டுக்கு வர வேண்டிய அவரது மனைவி என்ன ஆனார் ? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில் பல கோணங்களில் சொல்ல முயற்சித்து இறுதியில், ஸ்லீப்பர்செல் பற்றிய கதையையும் சொல்வது தான் ‘பாய்’.

ஒரு நல்ல ஆக்சன் விறுவிறுப்பு கலந்த படத்தை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் .

ஆதரவற்ற குழந்தைகள் ஹோமில், விக்ரம், ஹனி, ஜான், இந்த மூன்று குழந்தைகளும் ஜாதி, மதம் ,என்றால் என்ன என்று கேள்விகள் கேட்கும் அந்த காட்சிகள் மனதில் இடம் பிடிக்கிறது ஒன்றுமே தெரியாத பிஞ்சு குழந்தைகள் ஏன் ஆதரவாற்றவர்களாக வளர வேண்டும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துபவர்கள் திருந்தக் கூடாதா? என்ற கேள்வியை முன் வைத்து எழுப்பி இருக்கும் இந்த “பாய் ஒரு அற்புதமான கருத்தை சொல்லி இருக்கிறது அதுவும் க்ளைமாஸ் காட்சி அற்புதம், பரபரப்பு , நாயகன் கட்டு மஸ்தான உடலில் அசத்தியிருக்கிறார்

நாயகன்

நாயகனாக நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா, கட்டுமஸ்தான உடம்பு, ஆறடி உயரம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்கான தகுதியோடு இருக்கிறார். ஓடிக்கொண்டே இருக்கிறார்.

தனியாக நின்று காருக்குள் இருக்கும் வெடிகுண்டை அகற்றி பல உயிர்களை காப்பாற்றுகிறார் .

தன் நண்பனின் மனைவி தவறான நடத்தை கண்டு கொதிக்கிறார் என்ன செய்வது என்று விழிக்கிறார், இடைவேளை வரை அந்த திண்டாட்டம் தான் படத்தின் அதிகமாக ஆக்கிரமித்துள்ளது .

அதற்குப் பிறகு தெளிவான ஒரு முடிவை எடுத்து சபாஷ் என்று கைதட்டல் வாங்குகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் வயதான நடிகர், அறையில் நிர்வாணமாக இருக்கும் ஒரு ஜோடி, நாயகனின் மனைவி என்று குறிப்பிட்ட சில பரிட்சயம் இல்லாத நடிகர்கள் நடித்திருந்தாலும், நாயகன் ஆதவா ஈஸ்வரா, அளவுக்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை அந்த கதாபாத்திரங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

என்றே புரியவில்லை நாயகன் அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பே தரவில்லை
படம் முழுக்க நாயகனே நிறைந்து நிற்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறார். பரபரப்பான படத்திற்கு பின்னணி இசை மிகவும் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர்செல்கள் யார் ?, அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களைச் நிறைய ஆராய்ச்சி செய்து படமாக்கி இருக்கிறார்

கவனமாக கையாண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது குண்டுவெடிப்பு என்றாலே தீவிரவாதிகள் என்றாலே ஒரு மதத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டு படம் எடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர் அப்படி எல்லாம் இல்லை எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி ஒரு நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்

இயக்குனருக்கு கடுமையான உழைப்பு அது படத்தில் நன்றாக தெரிகிறது டெல்லி, மும்பை ,கல்கத்தா, என்று பல இடங்களில் அலைந்து படமாக்கி இருப்பது சிறப்பு.
ஒரே அறையில் முழு படத்தை எடுக்கும் முயற்சியாக கதை மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அதை கையாண்ட விதம் நன்றாக இருக்கிறது .

படத்தில் பணி புரிந்த மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பணையாளர், ஆர்ட் டைரக்டர் , படத்தொகுப்பாளர் , மற்றும் டி ஐ ,கலர் கரெக்ஷன், செய்தவர்கள் என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள் .

நாயகனின் மனைவியாக, வருபவர் ஒரு சீன் வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார் மற்ற துணை பாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகன், நாயகி, குழந்தைகளாக இருக்கும்போது வரும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சியில் வரும் குழந்தைகளும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த பாய்’ ஆக்சன் ரசிகர்களுக்கு ஒரு அசைவ விருந்து

🌷🌷🌷🌷🌷🌷🌷.