நறுவி திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கதை களம்

தீரன் நல்ல வசதியான அப்பா, அம்மாவுக்கு, பிறந்திருந்தாலும் மலைவாழ் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று பணியிலும், வெயிலிலும், மழையிலும், காட்டுக்குள் டூவீலரில் பயணித்து மருத்துவ உதவிகள் செய்து, குழந்தைகளுக்கு தேவையான பரிசுகளை வழங்கி அந்த குழந்தைகளை கல்வி கற்க வைக்கிறார்.அந்த மக்களுக்கு கல்வி கிடைக்கிறது

ஆனால் விதி மாதவிக்கும், தீரனுக்கும்: ஒரு பிரச்சனையை கொண்டு வந்து திடீரென ஒரு நாள் தீரன் காணாமல் போகிறார்

அதேசமயம் சித்தார்த் நடத்தும் கம்பெனியில் இருந்து ஐந்து பேர் குழு கொண்ட கும்பல் ஒன்று காட்டுக்குள் சென்று ஆராய்ச்சி செய்கிறது. அவர்களோடு குன்னூரில் இருந்து வந்த சூர்யா கலந்து கொள்கிறார்.

சூர்யா தன் மாமன் தீரனை கண்டுபிடிக்க வேண்டும்அதற்காக வந்தேன் என்கிறார்.

தீரன் எங்கே? சூர்யா மாமனை கண்டுபிடித்தாரா? என்பதை திகிலோடும், பரபரப்போடும், மனித நேயத்தோடு சொல்லி இருக்கும் படம் “நறுவி

இயக்குனர்

அறிமுக இயக்குனர் சுபா ரக். எம் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது படத்தில் சொல்லப்பட்ட கதை நன்றாக இருக்கிறது. மலைவாழ் மக்கள் கல்வி கற்க வேண்டும். என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கதைக்களம்
நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

காதல், காமெடி, திகில் என சம அளவுடன் கலந்து கொடுத்து இருக்கிறார்.

நாயகன் ஹரிஷ்

சமூக சேவகர் மற்றும் டாக்டரான ஹரிஷ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தீரன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

அப்பா, அம்மாவோடு அன்பை பரிமாறும் காட்சிகளிலும்,

ஏழு மணிக்கு எழுந்து மலை மேல் நடந்து சென்று அந்த மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி கற்று தருவதில் ,அவர்கள் மீது அனுதாபத்தை பொழிந்து, அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும்,

கல்வி கற்க வரும் மாதவி மீது, மனிதநேயத்தை காட்டுவதும் இப்படி எல்லா காட்சிகளிலும் ஒரு நல்ல நடிகராக நடித்திருக்கிறார். புதுமுகம் என்ற அந்த எண்ணமே நமக்கு எழவில்லை அதுவும் அவரின் சிரித்த முகம் கண்ணுக்குள்ளே நிக்கிறது.

ஹரிஷ் நிச்சயம் வருங்காலத்தில் உச்ச நடிகராகவருவார் அவருக்கு வாழ்த்துக்கள் நல்ல கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார்

தீரன் நம் மனதில் ஜம் என்று உட்கார்ந்து கொள்கிறார்

மற்ற நடிகைகள் & நடிகர்கள்

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இப்பத்தில்

வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைவரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு

சென்னை, ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன். ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது அந்த மலைகளை காட்டும் பொழுது சென்னையை காட்டும் பொழுதும் செம ரிச் ஆக இருக்கிறது ஒவ்வொரு காட்சிகளும் ஒளிப்பதிவில் தரத்தை அருமையாக காட்டி இருக்கிறது.

இசை

இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். காலம் நேரம் என்ற பாடலும், மாயக்காரா என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை பிரமாதப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர்

படத்தொகுப்பு

இயக்குனர் சுபாரக் இந்த பத்தை படத்தொகுப்பு செய்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன் நடந்த கதையும், நிகழ்கால கதையும், குழப்பம் இல்லாமல் காட்டி படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்

ஆர்ட் டைரக்டர் சத்யாவின், அரங்க அமைப்புகள் அற்புதம். சங்கவி, ஜீவி புகழேந்தி கோபால் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது

DI, Audiography and Sound Design : Royal studio

கலரிஸ்டாக கோகுலும்,
சண்டை பயிற்சி ஜேசுவும், அமைத்திருக்கிறார்
கள் சிறப்பு.
ரிச்சி நடன பயிற்சி அமைத்திருக்கிறார் அவருடன் இணைந்து மோகன்
பரம்மாவும் நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
பிரியா புஷ்பநாதன் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.
நாயகன் ஹரிஷ், மற்றும் மாதவி, மற்றும் நவநாகரீக உடையில் வரும் விண்ஸ், கேதரா,பதினி குமார், ஆகிய கதாபாத்திரங்களுக்கும் சித்தார்த்துக்கும் கதாபாத்திரங்களுக்கும் காஸ்டியூம் தனி கவனம் பெறுகிறது.

உபேந்திராபாபு, மற்றும் கோட்டி இருவரின் ஒப்பனை படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்

ஆனந்த கிருஷ்ணன் சி.ஜி .ஒர்க் அருமையாக இருக்கிறது.

படத்தின் ஹைலைட்ஸ்

🌷 ஆர்த்தி யாக பாடினி குமார், மற்றும்
இன்பாவாக பப்புவும்
அடிக்கும் லூட்டிகள் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது .ஆனால் பாடினி குமார் ஏன் பயந்து நடுங்கிறார் என்பதற்கு விடை இல்லை.?

🌷சூர்யா மாமாவை தேடி காட்டுக்குள் வருகிறார் அவருக்குள் மாதவி புகுந்து அமானுஷ்ய நிகழ்ச்சிகளை நடத்துவது திகிலாக இருக்கிறது.

🌷 மாதவியாக நடித்திருக்கும் பூஜா, மலைவாழ் கிராமத்து பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார். அவரது பார்வையும் அவரது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது .

🌷 படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது குளுமையாக இருக்கிறது படம் முழுக்க கண்களுக்கு பாலு மகேந்திரா படம் பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கிறது.

🌷 கோடீஸ்வரன் ஆக வரும் மதன் சித்தார்த் கதாபாத்திரத்தில் பெண்களை வேட்டையாடும் காமுகனாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு நேரும் கொடூரம்
இது தேவைதான் என்று சொல்ல வைக்கிறது.

🌷 நாயகன் ஹரிஷ் அம்மாவாக,பிரவீணா, அப்பாவாக வரும் ஜீவா ரவி இருவரும் மகனை தங்கம் என்று அழைப்பது உருகிஉறுகி பாசத்தை காட்டுவதும் ,உனக்கு எது தேவையோ? அதை செய் !அதுதான் சக்சஸ் ஃபார்முலா என்று ஜீவா ரவி சொல்லும் அந்த கொஞ்ச நேர காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கிறது.

🌷 ஸ்ருஷ்டிகாகவாக
நடித்திருக்கும் வின்ஸ், கதாபாத்திரம் கம்பீரமாக இருக்கிறது
ஒரு சி .ஓ வாக அவர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் மலைவாழ் மக்களுக்காக அவர் எடுக்கும் முடிவு மனதை தொடுகிறது.

🌷நெடுங்காடு ஊராட்சிஒன்றிய
பள்ளியும் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது நாமும் இந்த பள்ளிக்கூடத்திற்கு போய் வந்த உணர்வு ஏற்படுத்துகிறது

🌷 மொத்தத்தில் இந்த நறுவி மலைவாழ் மக்கள் கல்வி யை பற்றி சொல்லும் படமாகவும்,
ஆசிரியர்கள் மனிதநேயத்தோடு குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று மனித நேயத்தை விதைத்திருக்கிறது.
மலைவாழ் மக்கள் இன்னும் மாடன் சுவாமியை நம்பிக் கொண்டு அறிவியலை, கல்வியை, ஊக்குவிக்காமல் இருக்கிறார்கள் என்ற சித்தாந்தத்தையும் சொல்கிறது.
உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு கம்பெனி முதலாளி, பெண்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் !என்ற முறையும் சொல்கிறது !
எல்லா வகையிலும் இந்த படம் ஒரு சிறப்பான படமாக வந்திருக்கிறது படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌷

மக்கள் தொடர்பாளர் மணி மதன் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🌷

: *Banner : Harish Cinemas
Producer : A Alagu Pandian
Associate Director : J Jai Shankar
Direction Team : Nagaraj, Jagan, Vinoth Kumar, Balaji, Pradheep
: Theatrical Distribution – Baskar Cinemas – Sivaani Studios*
: அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏