கடுக்கா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், உருவாகியுள்ளது இந்த “கடுக்கா”

இரண்டு நண்பர்கள் ஒரு பெண்ணின் மீது கொண்டுள்ள போட்டி மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள நகைச்சுவை உறவை மையமாகக் கொண்ட ஒரு கமர்ஷியல் . இந்தப் படம்

இளமை பருவம் என்பது ஒரு இனிய பருவம். ஆண், பெண் என்று இருவரின் வாழ்க்கையிலும் சரி, யாராலுமே மறக்கமுடியாத ஒரு வசந்த கால பருவம். அந்த பருவத்தின் துருதுருப்பினால் வரும் காதல் தரும் கதகதப்பும், துடிதுடிப்பும் தரும் சுகம் இருக்கே, உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த போதை மருந்தும் அதற்க்கு ஈடாகாது. அப்படி ஒரு போதை தரும் அந்த சுகம். இதை சரியாக கையாள்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பத்திரமாக செல்கிறார்கள். இதில் எக்குதப்பாக மாட்டிக் கொள்பவர்கள் ஒரு சில அனுபவங்களோடு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள்
சிவசாமி, சாமியப்பன், சுமதி
இந்த மூன்று கதாபாத்திரங்களையும்
மிகவும் எதார்த்தமாக இயல்பாக சித்தரித்து சொல்லி இருக்கும் படம் கடுக்கா”

எதிர் வீட்டு பெண்ணை காதலிக்கும் சிவசாமி. அவளும் காதலிக்க
பெயிண்டிங் வேலை செய்யும் சாமியப்பனும், சுமதியை விரும்ப. அந்த காதலின் முடிவு என்ன ?என்பது கதைகளம்.
. இந்த படமும் நமக்கு நெருக்கமானதற்க்கு இந்த படத்தில் வரும் எதிர் வீடும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.
நகைச்சுவை திரைக்கதையோடு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் “கடுக்கா

கிராமப்புறங்களில் இயல்பாக பேசும் பழமொழியும் ,இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்திருக்கிறது ஒப்பனை பூசாத முகங்கள், நாம் நிஜத்தில் பார்க்கின்ற கதாபாத்திரங்கள், ஆடு வியாபாரி மணி, நாயகன் சிவசாமி, சாமியப்பன்,
நண்பன் சின்னவன்,
நாயகியின் அம்மா , நாயகனின் அம்மா ,
மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது.

தமிழ் சினிமாவுக்குள் புதுமுகமாக கால் பதிக்கும் நடிகர் விஜய் கெளரிஷ், “கடுக்கா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்
இவரது நடிப்பு, டயலாக், டெலிவரி எமோஷனல், காதலுக்காக உருகும்
இந்த கதாபாத்திரம் சில சமயங்களில் பாக்கியராஜ் அவர்களையும், அட்டகத்தி தினேஷ், இருவரையும் ஞாபகப்படுத்துகிறார் எதார்த்தமான நடிப்பு வரவேற்கத்தக்கது.

நாயகி சுமதியாக நடித்திருக்கும் ஸ்மேகா, இயல்பான கிராமத்து பெண்ணாக டயலாக் டெலிவரியில் அசத்தியிருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் கைதட்டலை வாங்கிக் கொடுக்கும்
சாமியப்பனாக வரும்
ஆதர்ஷ் மதிகாந்த், நடிப்பு நன்றாக இருக்கிறது
காதலிக்காக ஏங்குவது, நண்பனுடன் சண்டை போடுவது, என இவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது
நாயகியின் அம்மாவாக வரும்
சுதா, நாயகனின் அம்மாவாக வரும் மணிமேகலை,
நாயகியின் அப்பாவாக வரும் மஞ்சுநாத்,
மற்றும் சதீஷ்குமார், இவர்கள் நடிப்பு இயல்பாக எதார்த்தமாக இருக்கிறது.

இயக்குநர் SS முருகராசு , சமூக அக்கறையுடன், கிராமிய பதிவாக
இப்படத்தை இயக்கி இருக்கிறார். எதார்த்தமான நடிப்பை எல்லோரிடமும் வாங்கி எந்த இடத்திலும் சினிமா ஜிகினாத்தனம் தெரியாத அளவுக்கு இயல்பான வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். அதே சமயம் படிக்கச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதையும் கதைக்களமாக உணர்த்தி இருக்கிறார். அதற்காக இவரை பாராட்டலாம்.

கெவின் டெகோஸ்டா
இசையில் அய்யய்யோ, பாடலும் காய்ச்சல் நோயில், என்ற பாடலும் ரசிக்க வைத்தது பின்னணி இசை பிரமாதம்.

சதீஸ் குமார் துரைக்கண்ணு,
ஒளிப்பதிவில் இயல்பான கிராமத்தை கண் முன்னே காட்டியுள்ளார் .

: M.ஜான்சன் நோயல்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது .

தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான்

நடன அமைப்பாளர்: அபேப் R.K

இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா

இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம்

உதவி இயக்குநர்: ஆறுமுகம், பிரதாப் சிங்

DI: கலர் வேவ்ஸ்

கலரிஸ்ட் : ராகவன்

VFX: Issls ஸ்டுடியோ

உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர்

உதவியாசிரியர்: லோகேஷ்ராஜா, சாம்ராஜா

விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ்

விநியோகம் : G.தனஞ்செயன்

மக்கள் தொடர்பு : கேப்டன் M P ஆனந்த

படத்தின் ஹை லைட்ஸ்

: 🌷சிவசாமி,
சாமியப்பன்,
சுமதி ,
மூன்று பேரைச் சுற்றி கதை நகர்ந்தாலும் கலகலப்பாகவும் காமெடியாகவும் செல்வதால் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது

🌷அய்யய்யோ, பொல்லாத பார்வை
பாடல் தேவாவின் குரலில் மயக்குகிறது

🌷நீங்கள் நானும் நட்பா இருந்தாஎன்ன ஆகபோவுது
என்ற வசனம் கைதட்டல்.

🌷நரிபாறையில் நண்பர்கள் தண்ணி
அடிக்கும் காட்சியும் கிளைமாக்ஸ் க்கு முன்பு மூவரும் ஒன்று சேரும் காட்சியும் ,திருவாத் தான் இறந்து விட்டான் என்று சாமியப்பன் மனமாறும் காட்சியும் ஹைலைட்டான காட்சிகள்.

🌷 நாயகனை அம்மா வேலைக்கு போகவில்லை என்று திட்ட காதலிவேலைக்கு போ என்று சொல்ல திருப்பூர் கிளம்பும் அந்த காட்சி ரசிக்க வைத்தது.

🌷ஆடுவியபாரி மணி , என்ற கதாபாத்திரத்தில் மஞ்சுநாத் கொங்கு நாட்டு பாஷையில் மிக இயல்பாக பேசி நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் அவரும் சாமியப்பனும்
மது அருந்தும் காட்சிகள் காமெடியும் அவ்வளவு ரசிக்க வைத்தது.

🌷 சாமியப்பன் நாயகி உட்கார்ந்த சேரில், உட்கார்ந்து பார்ப்பது,
லவ் லெட்டரை தன் பாணியில் டிராயிங்
வரைந்து கொடுப்பது கலகலப்பு.

🌷செத்தா சன்டையில சாகனும்
என்று சொல்லிவிட்டு கேப் விடும் பொழுது அந்த வசனத்திற்கு திரையரங்கில் பலத்த கைதட்டல்.

🌷 தலையணை ஈரமாக இருக்கிறது என்று சாமியப்பன் சொல்ல அதற்கு மஞ்சுநாத்
பாப்பா மூத்திரம்
போயிருக்கும் என்று இயல்பாக சொல்ல அந்த காட்சி செம கலகலப்பு.

🌷 இடைவேளைக் கட்சியில் சிறுவர்கள்கோலி
குண்டு விளையாட்டும்
நாயகி யாருக்கு என்று சிவசாமியும் சாமியப்பனும் மனதுக்குள் நினைத்துக் கொள்ளும் பொழுது பஸ் புறப்படுவது செம ரகளையான காட்சி.

🌷 நாயகனின் அம்மாவும், நாயகியின் அம்மாவும்,
குடுமிபிடி சண்டை போடுவது கிராமத்து பெண்களின் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது வசனங்கள் கூட எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது .

🌷 நாயகன் தூக்கு போடும் பொழுது பக்கத்து வீட்டுப் பெண் நீ படித்தவன் தானே அறிவில்லையா? என்று அக்கறையாக திட்டுகிறார்! என்று பார்த்தால் நான் துணி காய வைத்திருந்த கயிறை எடுத்துக் கொண்டு வந்து தூக்கு போட பார்க்கிறாயே !என்று சொன்னவுடன் பலத்த கைதட்டல் செம காமெடியான காட்சி.

🌷 படம் முழுக்க திருவாத்தானாக வரும் அந்த கருத்த மனிதர் தன் மனைவி ஓடி போய் விட்டாலும்
அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று சொல்லும் பொழுது அந்த வெள்ளை உள்ளத்துக்கு சபாஷ் போட வைக்கிறது.
கதைக்கு தேவையான காட்சிகள்

இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு ஏகப்பட்ட காட்சிகள் காமெடியாகவும், கருத்தாழமிக்கவும், எழுதப்பட்டிருக்கிறது இயக்குனர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய இடத்துக்கு வருவார், இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியில் இடம் பிடிக்கும் என்பது உறுதி🌷