“வீர வணக்கம்” திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த கார்த்தி, லட்சுமி, என்கிற ஒரு அழகான நட்பு,

இருவரும் காதலிக்கிறார்கள் என்று கார்த்தியின் அம்மாவை ஜாதிய கும்பல் கொலை செய்கிறது

மேல் ஜாதியைச் சேர்ந்த நாயகி லட்சுமியின் அப்பாவாக பெரிய மனிதர் பரத்
வருகிறார்

தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை சொல்லி அவருடன் போராட்ட களத்தில் ஈடுபட்ட சிறுதா என்கிற சுதந்திரப் போராட்ட வீராங்கனையை பார்க்க அழைத்து செல்கிறார்

சிருதா தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு, கேரள மக்கள் பட்ட வேதனையை கொடுமைகளை சொல்கிறார்

அத்தோடு கிருஷ்ணபிள்ளை தங்கம்மாவின், காதல், கிருஷ்ணபிள்ளை நடத்திய போராட்ட சண்டைக்காட்சிகள், சொல்லி கடந்த கால அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறார்

கிருஷ்ணபிள்ளை யார் அவர்?

கிருஷ்ணப்பிள்ளை வைக்கத்தில் கீழ்-நடுத்தரக் குடும்பமொன்றில் நாராயணன் நாயருக்கும் பார்வதியம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தனது இரு பெற்றோர்களையும் இழந்த கிருஷ்ணப்பிள்ளை ஐந்தாம் நிலையில் (தற்கால பத்தாம் வகுப்பு) பள்ளிக்கல்வியை விட வேண்டியதாயிற்று. 1920இல் தமது இல்லத்திலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.

இரண்டாண்டுகள் கழித்து ஊர் திரும்பியபோது கேரளாவில் சமூகக் ஜாதி கொடுமை நிலவுவதைக் காண்கிறார். அதை துடைக்க தொடர்ந்து பல மக்கள் இயக்கங்களில் பங்கு பெறுகிறார்

1924இல் நடந்த வைக்கம் போராட்டத்திலும் 1930இல் கோழிக்கோடு முதல் பையனூர் வரை உப்புச் சத்தியாக்கிரக நடையிலும் பங்கேற்கிறார்

1931இல் குருவாயூர் கோவில் மணியை அடித்த முதல் நம்பூதிரி பிராமணர் அல்லாதவராக இருந்தார்.

கிருஷ்ணப்பிள்ளை தமது அரசியல் வாழ்வை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகவும் காந்தியவாதியாகவும் துவக்குகிறார்

. கொஞ்சம் கொஞ்சமாக இடதுசார் சிந்தனைகளுக்கு ஆட்பட்டு 1934இல் காங்கிரசு சோசலிச கட்சி மும்பையில் நிறுவப்பட்டபோது அக்கட்சியின் கேரளச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்

மேலும் அவரது தீவிர அரசியல் செயற்பாடுகளால் மலபார் பகுதியில் குவியப்படுத்தியிருந்த பிள்ளை 1936இல் கொச்சி, திருவிதாங்கூர் அரசுப்பகுதிகளுக்குச் செல்கிறார்

1938இல் தற்போது புகழ்பெற்ற ஆலப்புழா தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஒருங்கமைக்கிறார் பெரும் வெற்றி பெற்ற இப்போராட்டமே 1946இல் புன்னப்பரா-வயலார் போராட்டத்திற்கும் திருவிதாங்கூரில் சி. பி. இராமசாமி ஐயரின் வீழ்ச்சிக்கும் தூண்டலாக அமைகிறது

கிருஷ்ணப்பிள்ளையின் அயராத உழைப்பால் காங்கிரசு சோசலிச கட்சியின் மலபார் கிளையை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரளக் கிளையாக மாற்றினார். சனவரி 26, 1940இல் முறையாக கேரளத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி நிறுவப்பட்டது. 1948இல் கொல்கத்தா தீர்மானத்தின்படி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி முயன்றபோது அதற்கு தடை விதிக்கப்பட்டது; அதனால் கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது

முஹம்மாவில் ஓர் தொழிலாளியின் குடிசையில் ஒளிந்துகொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்தார். இந்த மாவீரனின் கதையைத்தான் படமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

படம் முழுக்க அவர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்தார் என்பதை படம் பேசுகிறது

இப்படி ஒரு அருமையான சினிமாவை தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர் அனில் V.நாகேந்திரன். இரண்டு வருட போராட்டத்தில் சிரமப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை அவர்கள் பட்ட துன்பங்களை படமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் பார்க்கும் பொழுதே மனசு வலிக்கிறது அந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது இயக்குனருக்கு ஒரு வீரவணக்கம்

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். கிருஷ்ணபிள்ளை என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாக திருப்பி அடி என்று சொல்லிக்கொண்டு சிறையில் இருக்கும் பொழுது போலீஸ் அதிகாரிகளையே துவம்சம் செய்கிறார்

இந்தி புத்தகத்தின் மூலம் மக்களுக்கு எழுச்சியை ஊட்ட தங்கம் மாவை காதலிக்கிறார் தங்கம்மாவும் அவரை விரும்புகிறார் அதன் பிறகு கேரளா நிலசுவான்தார்கள் நடத்தும் கொடுமையை எதிர்த்து இந்த மக்களுக்காக கம்யூனிஸ்ட் கொடியை நட்டு போராடுகிறார் அவர் வரும் காட்சிகளை அவ்வளவு சிறப்பாக இருக்கிறது

நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த வேடம் அவருக்கு கச்சிதமாக புரிந்திருக்கிறது சிறப்பாக நடித்திருக்கிறார்
மற்றும் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. காடும் காடு சார்ந்த மலைகளும் கண்களுக்கு குழுமையாக இருந்தாலும் அந்த மக்கள் படும் துன்பங்களை ஒழிப்பதிவாளர் படம் பிடித்து மனதை உருக வைத்து விடுகிறார்

இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார். அந்த பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் – அனில் V.நாகேந்திரன் இசை – M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் ஒளிப்பதிவு – கவியரசு, சினு சித்தார்த் எடிட்டிங் – பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம் – கே. கிருஷ்ணன் குட்டி இணை இயக்கம் – கே. ஜி. ராம் குமார் ஒப்பனை – பட்டணம் ரஷீத் சண்டைப் பயிற்சி – மாஃபியா சசி பாடல்கள் நவீன் பாரதி, உடைகள் – இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி சவுண்ட் டிசைன் – என். ஹரி குமார் மக்கள் தொடர்பு – குணா, சதீஷ், சிவா (AIM)

மொத்தத்தில் இந்த வீரவணக்கம் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக போராடி தன் உயிரை தந்த கிருஷ்ணப் பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கம் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை வரலாற்றில் நிச்சயம் இப்படம் பேசப்படும்🌷