லோகா: சாப்டர் ஒன் – சந்திரா திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கதை களம்

ஆரம்பத்தில் சந்த்ரா, ஒரு தீ விபத்தில் இருந்து தப்பிக்கிறார். எதிரிகள் அவரை கொலை செய்ய முயற்சி செய்ய அதில் இருந்து தப்பித்து பெங்களூர் போகிறார்
அங்கு தான் கதை களம்.

பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார்
அதேசமயம் ஆழ் கடத்தல் செய்து, உறுப்புகளை திருடும் கேங்ஸ்டர், மற்றும் சாண்டி, இன்ஸ்பெக்டர் இவருடைய பார்வையும் சந்திரா மீது படுகிறது.

சந்திராவை கடத்தும் பொழுது சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தென்படுவதையும் கவனிக்கிறார். சன்னி. சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காக்கக் களமிறங்குகிறார் சன்னி. அவர் சந்திராவை மீட்டாரா? சந்திராவைச் சுற்றும் அமானுஷ்யங்கள் என்ன ?என்பதுதான் சூப்பர் ஹீரோயின் படத்தின் கதை.
ஒரு ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பாக படம் வந்துள்ளது.

நாயகி

படம் முழுக்க வெறித்த பார்வை, இடி ,போல் அடி,என சூப்பர் பவர் கொண்ட சந்திராவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்

பறக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும், தனது அடையாளத்தை மறைக்கச் சாந்தமாக அனைத்தையும் கையாளும் இடத்திலும் சூப்பர் ஹீரோயினாக மிரட்டுகிறார்.
வித்தியாசமான வேடத்தில் கலக்கியிருக்கிறார்

பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகளில் பெரும் சிரத்தை கொடுத்து உழைத்திருக்கும் அவருக்கு ஸ்பெஷல் சபாஷ் போடலாம்.

இவரைச் சுற்றி ஒரு மர்மம் இருக்கிறது! அது என்ன என்பதை காட்டும் வரை சஸ்பென்ஸ்! உச்சத்துக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது !

வெல்டன் கல்யாணி பிரியதர்ஷன்.

படம் முழுக்க நாயகன் பயந்த சுபாவம் கொண்டவராக, தனது டிரேட்மார்க் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்குக் கணக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் நஸ்லென்.

சந்திராவை காதலிக்க தொடங்குவது பின் அவர் அமானுஷ்ய சக்தியை கண்டு பயந்து அலறுவது, கனவு கண்டு ஓடுவது, என ஆங்காங்கே அவர் நிகழ்த்தும் காமெடிகளும் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருக்கின்றன. சீரியஸ் காட்சிகளிலும் அவருடைய உடல் மொழி, ரசிக்க வைக்கிறது .
.
காவல்துறை அதிகாரியாக வரும் சாண்டி,

பெண்களை வெறுப்பவராகப் படம் முழுக்க டெரர் வில்லனாக வரும் நடிப்பில் அவ்வளவு ஆழம்! க்ளைமாக்ஸ் காட்சியில் படம் பார்ப்பவர்களுக்கு கோபத்தை
ஏற்படுத்தும் அளவிற்கு வில்லனிசத்தில் கதகளி ஆட்டம் ஆடியிருக்கிறார்
மலையாள சினிமாவுக்கு ஒரு நல்ல வில்லன் கிடைத்திருக்கிறார்.

அருண் குரியன், சந்து சலிம்குமார் நடிப்பில் காமெடி களை கட்டுகிறது
காட்சிகளும் திரைக்கதையும் வசனங்களும் தியேட்டர் கொண்டாடுகிறது.

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளை அத்தனை கோணங்களிலும் கச்சிதமாகப் படம்பிடித்து மிரட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கு சபாஷ்!
படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஹாலிவுட் படம் பார்க்கிறோம் என்ற நினைவை ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்

முதற்பாதி, ஆக்ஷன், இரண்டாம் பாதி கதை களம் என தன் கத்தரியில் படத்தைப் செதுக்கி யிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ

கிளைமாக்ஸ்சில் துல்கர் சல்மானின் பறக்கும் சண்டை காட்சிகளும் விசில் போட வைக்கிறது

முதல் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸ் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்குத் தனிக் கவனத்தைக் கொடுத்து உழைத்திருப்பது நல்லதொரு விஷுவல் அனுபவத்தையும்
கொடுக்கிறது

புதிய அனுபவம், புதிய களம் ,புதிய காட்சிகள் என இருக்கையில் நம்மை கட்டி போடுகிறது இந்த லோகோ

உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார்.

புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. .

இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian) சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளனர் பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

மொத்தத்தில் வெற்றி படமாக வந்திருக்கிறது லோகோ- சேப்டர் ஒன் சந்திரா
இரண்டாவது படத்துக்கான வீடு மிக சுவாரசியமாக கொடுக்கப்பட்டிருக்கிறது எப்பொழுது மீண்டும் வரும் என்று பாகுபாலி படத்தை நாம் எதிர்பார்த்தது போல இந்த படத்தையும் எதிர்பார்க்க வைத்து விட்டது படக்குழு வசூல் மழையில் லோகா🌷