உருட்டு உருட்டு திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், நடிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க கதை களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”.

கதை களம்

உருட்டு உருட்டு திரைப்படத்தில் நிறைய எபிசோடுகள் இருக்கிறது. ஆரம்பத்தில் அபிநயா பிரேம்நாத், வில்லன் தர்மராஜை காட்டிக் கொடுப்பதற்காக பத்திரிக்கையில் வெளிவர செய்திகளை எடுத்துக் கொண்டு வருகிறார் அவர் பிளாக்மெயில் செய்யும் தர்மராஜ், வில்லனாக பிரேம் நாத் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து அறிமுகமாகி அசத்துகிறார்.

இதை அடுத்து கபிலன், சந்துரு, இரண்டு பேர் சின்ன வயதிலிருந்து பகையோடு வாழ்கின்றனர். கபிலன் செய்யும் சூழ்ச்சியால் நாயகன், நாயகி இணைய,

நானும் டைரக்டர் தான் என்று சொல்லிக் கொண்டு வரும் நிர்மல் அவர் ஷார்ட் பிலிம் எடுப்பதாக செய்யும் அலப்பறை அருமை

பணியார கடை வைத்து கடன் வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர்

அடுத்து மேட்டூரில் இருக்கும் நாயகியின் தாய் மாமனாக மொட்டை ராஜேந்திரன், அவருக்கு மூன்று மனைவிகள், அந்த மூன்று மனைவிகளுடன் அவர் அடிக்கும் லூட்டி செம கலகலப்பான ட்ராக் அது ஒரு செம கவர்ச்சியான கலகலப்பான ட்ராக்
படத்துக்கு இந்த எபிசோட் அருமை

நாயகி அங்கு வந்து மாமா வீட்டில் தங்கும் அந்த ஐந்து நாட்களில் குடிக்கு அடிமையாக நாயகனை, நாயகி திருத்த பார்க்கிறார் முடியவில்லை என்றவுடன் அவர் எடுக்கும் அந்த விபரீதமான சம்பவம் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் போதையில் சீரழிபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. அத்தனையும் ரசிக்கும் படி இருக்கிறது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது

ஒரு மணி நேரம் 50 நிமிடம் செல்வதே தெரியாத அளவுக்கு கமர்சியலாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்

நாயகன் நாயகி

நாயகன் பேரன் கஜேஷ் நாகேஷ், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சந்துரு என்ற வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ரித்விகா தல ஸ்ரேயா நடித்துள்ளார்.

ஷர்மி என்ற கதாபாத்திரத்தில் அழகாக வந்து புரட்சிகரமான வேடத்தில் நடித்திருக்கிறார்,

” மூணு பொண்டாட்டி முனுசாமி ” கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய் சங்கர் ” டபுள் டாக்மெண்ட் ” தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

மொட்டை ராஜேந்திரன், சித்த மருத்துவர் முனுசாமி அவரின் மனைவிகளாக, அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, ஆகியோர் கவர்ச்சியான கலகலப்பான வேடங்களில் நடித்துள்ளனர்.

பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தங்கள் பங்குக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.

இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது, அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது, ஆனால் தற்போது அந்த விளம்பரங்கள் எங்கேயும் பார்க்க முடிவதில்லை பதிலாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா எங்கள் மருத்துவமனைக்கு வாங்க என்று அனைத்து மாவட்டத்திலும் உள்ள நகராட்சி, ஊராட்சி என எல்லா இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் மது என்னும் அரக்கன் தான் காரணம் என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

நகைச்சுவை கலந்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் சொல்லி இருக்கிறார் .

நடன இயக்குனர் தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை கொடுத்துள்ளார்.

Music Composed By : Arunagiri S.N
Original Background Score Composed By : Karthick Krishnan
Lyrics : Fefsi Doss, Baskar
Editor : Thiruselva
P.R.O : Bhuvan Selvaraj

மொத்தத்தில் இந்த உருட்டு உருட்டு செம காமெடியான கலகலப்பான திரைக்கதையில் வெளிவந்துள்ள ஒரு வெற்றிப் படம் என்றே சொல்லலாம் திருமணத்துக்கு முன்பே ஒத்திகை பார்க்க வேண்டும் என்று சொல்லும் இளைஞன், காதலனை திருத்த கால் அழகை காட்டும் நாயகி, மூன்று மனைவி இருந்தும் நாலாவது மனைவிக்கு அடி போடும் மொட்டை ராஜேந்திரன் இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது நிச்சயம் நீங்கள் ரசிக்கலாம்