குமார சம்பவம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

வரதன் (குமரவேல்) ஒரு போராளி அமர்நாத், அக்பர் பாஷா , ஆண்டனி ஆசீர்வாதம் என இந்த மூன்று பேரையும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் வரதன் மக்கள் நன்மைக்காக குமரன் வீட்டில் குடியிருக்கும் அவர் திடீரென ஒரு நாள் இறந்து விடுகிறார்.

போலீஸ் விசாரணையில், இன்வெஸ்டிகேஷன் நடக்கிறது.குமரன் மாமாவும் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.

குமரன் தன்னுடைய பாணியில் நடந்தது என்ன? என்று சொல்வது போல இடைவேளை வரை கதை நகர்கிறது.

வரதனை கொலை செய்தது யார்?

குமரன் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று தன் தாத்தா சுப்பையாவிடம் வீட்டை விற்க சொல்லி கேட்கிறார் தாத்தா கொடுத்தாரா ?

பவித்ராவான தன் காதலியை விட்டு குமரன் பிரிந்தது ஏன் ?

மீண்டும் சேர்ந்தார்களா?

போராளிகளை குமரன் வெறுப்பது ஏன் ?

உண்மையில் வரதன் யார் ?

அமர், அக்பர், ஆண்டனி, இந்த மூவரும் தான் வரதனை கொலை செய்தார்களா?

போன்ற பல முடிச்சுகளுக்கு இடைவேளைக்கு பிறகு ஒவ்வொன்றாக இயக்குனர் அவிழ்க்கிறார் திரைப்படத்தில் மிக மிக சுவராஸ்யமான பகுதி நிறைய இருக்கிறது .

இடைவேளைக்குப் பிறகு காமெடியில் கலை காட்டுகிறது. வினோத் சாகர் ஒவ்வொரு காட்சியும் அதகளம் செய் கிறார்.

அந்த அளவுக்கு காமெடி கை கொடுத்திருக்கிறது. யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

நாயகன்

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படம்இது, குமரன் துணை இயக்குநராக கதை சொல்லும் பாணியும், காதலிக்காக பாண்டிச்சேரி செல்லும் போது நாயகியின் பாட்டி அவருடைய செயலுக்கு போஸ் கொடுப்பதும் ரசிக்க வைக்கிறது.

தாத்தாவிடம் கோபம், காதலியிடம் போராளி கள் பிடிக்காது என்று சொல்லும் எதார்த்தம் , எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்ற தீராத தாகம் ,என பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் குமரன் நல்ல அறிமுகம் ஆக்ஷன் காட்சிகளுக்கு அசத்தலான உடம்பு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் குமரன் சார்.

பாயல் ராதாகிருஷ்ணன்

பவித்ரா வாக, அழகாக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பாடல் காட்சியில் கூட ஆட்டம் போடாமல்
கதைக்கு தேவையாக வந்து போகிறார்.

குமரவேல்

வரதன் என்ற கதாபாத்திரத்தில் மனுஷன் வாழ்ந்திருக்கிறார். குமரன் குடும்பத்தில் ஒருவராக அவரது வீட்டில் தங்கி இருந்து கதையின் மையப்பகுதியாக இவர் கதாபாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.

பால சரவணன்

சத்யா, என்ற ரியல் எஸ்டேட் புரோக்கராக வந்து குமரன் நண்பராக ,வரதன் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிப்பதற்காக நாயகனுடன் படம் முழுக்க வந்து
கலகலப்புக்கு கை கொடுக்கிறார்.

ஜி எம் குமார்

நாயகனின் தாத்தாவாக, சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். தன்னுடைய வீட்டை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிப்பதும். பேரனுக்கு உதவி செய்ய பிறகு கதை கேட்பதும்,என்று இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

வினோத் சாகர்

வினோத் என்ற வேடத்தில், நாயகனுக்கு உதவி செய்ய சிபிஐ ஆபீஸராக, இவர் வரும் காட்சிகளில் செம கலகலப்பு. மூன்று வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு இவர் விழிப்பது, படத்தில் பலத்த வரவேற்பு.

லிவிங்ஸ்டன்

தயாரிப்பாளராக, வந்து நாயகனிடம் இரண்டு வருடமாக கதை கேட்பது, நாயகனிடம் கதை கேட்ட பாட்டியும் அவுட்டு ,தாத்தாவும் அவுட்டு ,இரண்டாவது பாகத்தில் நம்மை சாகடிப்பாரோ? என்று புலம்பும் காட்சிகள் கலகலப்பு .

வினோத் முன்னா

நாயகனின் மாமாவாக வந்து அவ்வப்போது கலகலப்பை ஏற்படுத்துகிறார். பணத்துக்காக இவர் தான் கொலை செய்து இருப்பாரோ?என்ற சந்தேகத்தையும் இந்த கதாபாத்திரம் ஏற்படுத்துகிறது.

கௌதம் சுந்தர்ராஜன்

வரதனின் வழக்கறிஞராக, வந்துகதையில், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.

மற்றும் சிவா அரவிந்த் , அர்ஜய், சார்லஸ் வினோத் விஜய் ஜஸ்பர், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ் , சரவணன், தாரணி , கவிதா சரவண் ராமகிருஷ்ணன், யஷ்வண்ரமேஷ், ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்

யாத்திசை படத்தை தயாரித்து வெற்றி கண்ட, வீனஸ் இன்ஃபோ யின் மெண்ட், சார்பில் கே.ஜே .கணேஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

இயக்குனர்

கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். இயக்குனர் பாலாஜி வேணுகோபால். சஸ்பென்ஸ் கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக சொல்லி இருக்கிறார் , இயக்குநர் சொல்ல நினைத்ததை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல இருக்கிறார். கதைக்கு நேர்த்தியான திரைக்கதை, அமைத்து இயக்கியிருக்கிறார். கொலை செய்தது யார் ? கொலையின் பின்னணி ,மற்றும் கொலையாளி யார்? ஆகியவற்றுடன், வீட்டில் தங்கியிருக்கும் மற்ற கதாபாத்திரங்களோடு, முழு படத்தையும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் .

அச்சு ராஜா மணி

இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பாடல்களை பாலாஜி வேணுகோபால் எழுதி இருக்கிறார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது .

ஜெகதீஸ் சுந்தரமூர்த்தியின், ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.
படத்தொகுப்பு ஜி.மதன் சிறப்பாக இருக்கிறது. காட்சிகள் கோர்வையாக தொகுத்திருக்கிறார்.

வாசுதேவன், ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். வரதன் வீடு மற்றும் காவல் நிலையம் ,என கலக்கி இருக்கிறார் .

காஸ்ட்யூம் டிசைனராக, நந்தினி நெடுமாறன். சண்டை பயிற்சியாளராக ஓம் பிரகாஷ். மற்றும் இப்படத்திற்காக உழைத்த டெக்னீசியன்கள்

Sound Design: T. Uday Kumar, Renjith Venugopal, M. Saravanakumar (Sound Vibe Studios)
Sound Mixing: T. Uday Kumar
VFX: Chan FX – Chandru Senthilkumar
DI Colorist: Naveen Sababathi
DI: Shade 69 Studios
Casting Director: Varsha Varadarajan
Publicity Design: Santhosh, Ivan Diaz, Veera (NxtGen)
Head of Operations & Creative Head: Ravikumar Anantharaj
Head of Production: P.A. Srinivasan
Senior Executive Producer: Deva
Production Controller: Rakesh Ragavan
Production Coordinators: Sriram Chandrasekar, Vishwatha Ravichanthiran
Production Manager: M.P. Ramachandran, Sai Mohan
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த குமார சம்பவம் காதல், காமெடி, சஸ்பென்ஸ் என கலந்து தரமான ஒரு கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் வகையில் வந்திருக்கிறது.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

அவர்கள் படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்