தண்டகாரண்யம் திரை விமர்சனம்

இயக்குநர் பா.ரஞ்சித் படம் என்றாலே, சமூக நீதி அரசியல், ஒடுக்கப்பட்டோரின் குரல், தலித் அரசியல் என அவர் படம் இருக்கும். இந்தப் படத்தில் பழங்குடியை சேர்ந்த மக்கள் எப்படி நக்சலைட்களாக ஆக்கபடுகிறார்கள்.

என்பதை தயாரிப்பாளராக இயக்குனர் அதியன்ஆதிரையன், மூலம் பேசியிருக்கிறார். ஒரு தேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட இயக்குநர் பா. இரஞ்சித். அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

இப்படிப்பட்ட படைப்புகளை இயக்குனர்.பா. ரஞ்சித் தவிர வேறு யார் பேச முடியும்? அப்படி பேச வந்ததற்காகவே அவருக்கு பாராடட்லாம்.

தண்டக்காரண்யம், என்றால் ராமாயணத்தில் வரும் காடு இந்த படத்திலும் அடர்ந்த காடு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது .

அங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக ராணுவத்தில் , சேர வரும் இளைஞர்களை எப்படி தங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். என்பதையும்தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்கள் வனச்சரக அதிகாரிகளால் எப்படி துன்புறுத்தப்படுகிறார்கள். என்பதையும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள். கலை ரீதியாகவும் மிக முக்கியமான விஷயம் பேச பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி எல்லையில் ,உள்ள தொளுவ பேட்டை என்ற கிராமத்தில் படம் ஆரம்பித்து வனத்துறை அதிகாரி அருள் தாஸ், வன்மம் தினேஷ் , மற்றும் அவரது கிராமத்தினரை குதறி எடுக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட தினேஷ் ,கலையரசன்
எப்படி சூறாவளிக்குள் சிக்கி சின்னா பின்னம் ஆகிறார்கள் என்பது ஒன் லைன்.

விதவிதமான ராணுவ பள்ளி பயிற்சி கதைகளை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு வேறொரு பரேட் எடுத்திருக்கிறார் இயக்குநர் .

சடையன், முருகன், கதாபாத்திரத்தில் வரும் அட்டைக்கத்தி தினேஷ், கலையரசன், டான்சிங் ரோஸ், சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இங்க . எவனும் கேள்வி கேட்கக் கூடாது’’என்று ஆணையிடும் பயிற்சி அதிகாரி உஸ்தாத்,கர்ஜிக்க அதற்கான தண்டனையை எதிர்கொள்வது , என ஹீரோயிசம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை இயல்பாகவே கடக்கிறார். கலையரசன்.

எப்படியாவது இந்த வேலையில் நாம் பர்மெனென்ட்ஆகி, அண்ணனின் கௌரவத்தை காப்பாற்றி விட மாட்டோமா ? என்று ஏக்கம் ! டான்ஸிங் ரோஸ் டார்ச்சர் ,மற்றும் காதலியின் பிரிவு, என கலந்த கட்டி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கலையரசன்.

அடக்குமுறைகளை கண்டு வெகுண்டு எழுந்து பழங்குடி மக்களுக்கு தீங்கு வரும் போதெல்லாம் வனச்சரக அதிகாரி அருள்தாஸ் உடன் மோதும் காட்சி கள். வேட்டை முத்துக்குமாரிடம், மோதும் போதும் அட்டைக்கத்தி தினேஷ் சபாஷ் வாங்குகிறார். வெறித்தனமான பார்வை, ஆக்ரோஷமான சண்டை, என அசத்தி இருக்கிறார்.

முரட்டு அருள்தாஸ் பார்வையிலேயே தனது கோபத்தை தீயாக கொட்டுகிறார். ‘பழங்குடி மக்களை வெறுக்கும் போதும் கலையரசனை பார்த்து நீ அண்ணனுக்கு சிபாரிசா?என்று கேட்கும் தோரணை, பழங்குடி மக்களை தள்ளி மிதித்து துவைப்பது என அவரது அறிமுக காட்சியே அச்சம் தருகிறது.

அதிகாரத்துக்கு முன்னால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் கலையரசன் ,பால சரவணன் ,மனதில் பதிகிறார்கள். இழிவாக திட்டிய டான்ஸிங் ரோஸ், அடித்ததால், கடைசி வரை அதிகாரி ஆக முடியாமல் தவிக்கும் கதாபாத்திரம். அந்த வேதனையையும், ‘உஸ்தாத் மீறி இங்க எதுவுமே நடக்காது’’ என்கிற இயலாமையையும் தனது தேர்ந்த நடிப்பின் வழியே கடத்துகிறார்.

பழங்குடி மக்கள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார் துணை கதாபாத்திரங்களில் வருவோரும் கச்சிதமான தேர்வு.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் படத்தை தொய்வடைய விடாமல் நிமிர்ந்து நிற்க வைக்கின்றன. ‘ அரசியல்வாதிகளை பற்றிய வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

முதல் பாதிவரை வேகமாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில், றெக்கை கட்டி பறக்கிறது. பரேட், பரேட் என, மைதானத்தின் புழுதி நம் முகத்திலும் தெறிக் கிறது. காதல், பார்த்துப் பழகிய பிளாஷ்பேக் ஆக இருந்தாலும் ராணுவ பயிற்சி, பள்ளியில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள், அதிகாரிகளின் ஈகோ மோதலைத் துணிந்து தோலுரித்துக் காட்டிய விதத்தில் ஈர்க்கிறது.இந்த தண்ட காரண்யம்”

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், கொரில்லா பயிற்சி கொடுக்கிறேன். என்று ராணுவ பயிற்சி நடத்தும் அதிகாரம் நடத்தும் ஜார்கண்ட் மாநிலத்தில் அப்பாவி இளைஞர்களை ராணுவ பயிற்சி கொடுக்கிறேன் என்று சித்தரவதை செய்து, மூன்று மாதம் கசக்கி பிழிந்து பிறகு அவர்களை அழைத்துச் சென்று இவர்களை சுட்டு விட்டு நக்சலைட் கொண்று விட்டார்கள், என்று கதை கட்டுவது தமிழ் சினிமா காணாத புதிய கதைக்களம். அந்த ஜார்கண்ட் மாநிலத்தின் அடர்ந்த காடுகள் ,அழகையும் தருகிறது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது எப்படி தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை சொல்கிறது இந்த படம் அடக்குமுறைகள் எவ்வளவு காலத்துக்கு ஒரு மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியும் அவன் வெகுண்டு இருந்து அநீதியை அழிக்கிறான் என்பதையும் சொல்லி இருக்கிறார்
இயக்குனர் .

இயக்குனர், தமிழ் சினிமா இதுவரை காணாத புதிய கதையை கையில் எடுத்திருக்கிறார். நடந்த உண்மை சம்பவங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். ஒரு சில அரசியல்வாதிகள் எப்படி தங்கள் தேவைகளுக்காக மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் மனித உயிர்களை பலி வாங்குகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் .தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையில் வகுத்திருக்கிறார்.

இதற்காக அவர் மெனக்கெட்டு ஒவ்வொரு நாளும் வரும் செய்திகளை சேகரித்து இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கும் இடத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை இதயம் வலிக்க சொல்லி இருக்கிறார் படத்திலும் நடித்தவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, தொழில் நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் ஓர் மிகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சரியான நடிகர் தேர்வு. இவை அனைத்தும் அந்த வாழ்வியலை நாம் அப்படியே நேரில் காணும் ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் சில அரசியல் மற்றும் வரலாற்று சார்ந்த குறியீடுகள் நமக்கு சுவாரஸ்யம் தந்தது. அவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உருவாக்கியது.

தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான மாய எதார்த்தவாத திரை மொழியில் ஒரு வரலாற்று கதையை பார்க்கும் அனுபவம், படத்தின் பல கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதிக்க தூண்டுகிறது.

படத்தின் ஹை லைட்

படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை அந்தக் கதை உலகிற்குள் அழைத்து செல்கிறார் இயக்குனர்

இதற்கு முக்கியக் காரணம் நேர்த்தியான தொழில் நுட்பம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. நடிகர்கள் கலையரசன் தினேஷ், தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் எனக் கூறுவதோ, எழுதுவதோ புதிதான விஷயம் அல்ல. அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றலின் உச்சத்தை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள் . இந்தப் படத்தின் இருவரும் அவரது உடல்மொழி, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்தும் கச்சிதம் என்பதைத் தாண்டி சர்வதேச தரம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த ரித்விகா, கணவனிடத்து அதிகாரம் காட்டுவது, பின் கொஞ்சிக் கொள்வது என அந்த வாழ்வியல் சார்ந்த பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும்காட்டுக்குள் தினேஷ் , தேடி வரும் காட்சிகள் அவர் உடல் , பாவனைகளில் கடத்துகிறார்.

படத்தில் நடித்த டான்ஸிங்ரோஸ், வேட்டை முத்துகுமார், போன்ற நடிகர்களின் திறமைக்கு இதையடுத்து நிச்சயம் தகுந்த பாத்திரங்கள் அவர்களை வந்து சேர வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நம்மை பெரிதும் கவர்ந்தது ப்ரியா கதாபாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம், வின்சு நடிப்பு என அனைத்தும் நம்மால் ரசிக்க முடிந்தது.

இன்னும் சொல்லப் போனால் படத்தின் தினேஷ், கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது கூட நமக்கு வராத உணர்ச்சி, இன்னோரு பாத்திரமான கலைஅரசன் அடிவாங்கும்போது ஏற்படுகிறது.

டான்ஸ் ரோஸ், கலையரசன், மோதும்சண்டைக் காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்தது தெரிகிறது.

நடிகர்களின் நடிப்பு இவ்வளவு நேர்த்தியாக வெளிப்பட்டதற்கு மற்றொரு காரணம் பிரதீப் காளி ராஜா ஒளிப்பதிவு. குறிப்பாக கலை – வின்சு காதல் காட்சி,

ஸ்டன்னர் சாம், சுதீஷ் குமார் இவர்கள் ஆக்ஷன் மொமெண்ட் வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி என பல்வேறு காட்சியை மெருகூட்டுவது ஒளிப்பதிவு தான்.

தலை கீழாக தொங்கவிடப்பட்ட தினேஷ் , ஆடையை துறந்து நீரில் நடமாடும் முருகன், ப்ரியா , ஜார் கெண்ட் அரசியல், காடுகள் அரசியல், பழங்குடி அரசியல் என இயக்குனர் பேசும் அனைத்து விஷயங்களையும் படத்தின் சின்னச் சின்னக் கூறுகளாக வைத்தது எப்போதும் இருக்கும் தனிச் சிறப்பே.

முதல் பாதி வரை உமாதேவி, தனி கொடி. பாடல் வரிகள் வியக்க வைக்கிறது. திரைக்கதை, இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பாகிறது.
அதற்கு காரணம் படத்தொகுப்பு செல்வா.ஆர்.கே

படத்தில் பேசப்படும் பழங்குடி அரசியல், எதார்த்தாவாதம், தமிழ் சினிமாவிற்கு மிகப் புதுமையானது என்பதால் படத்தின் எதிரான சில புரிதலை மக்களுக்குக் கடத்த நேரிடுமோ என்கிற எண்ணம் சற்றுத் தோன்றியது.

எப்போதும் எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் போன்ற விஷயத்தை கதை சொல்லல் முறை கொண்டு சொல்ல வினைந்தது சரியானது . அடுத்தடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் பயிற்சி ராணுவம் இளைஞர் கள் மரணங்களும் நம்மைப் பெரிதாக பாதிக்கும் . படத்தின் பல்வேறு கூறுகள் கலை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்து பார்க்கக் கூடிய அளவிற்கு படைத்திருந்தாலும் அதில் இருக்கும் ராமலிங்கம் .ஆர்ட் பணி சிறப்பாக இருக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனராக சுபீர், நடனம் ஸ்ரீ கிரீஸ், ஆகியோர் பங்கும் சிறப்பாக இருக்கிறது

மக்கள் தொடர்பாளர் குணா ,மனவை புவன்இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்

மொத்தத்தில் இந்த ‘ தண்டக்காரண்யம் நமக்குபுது அனுபவத்தை தரும் . நேர்த்தியான திரைக்கதை , மிகச் சிறந்த திரைப்படம் இந்தத் திரைப்படம் தரும் ஒரு புதிய அனுபவத்திற்காக நிச்சயம் அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான்.