படையாண்ட மாவீரா திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

காடுவெட்டி குரு “என்ற மாவீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை வ.கௌதமன் இயக்கியதோடு, அவரே இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பாராட்டுக்கள்

கதைக்களம்

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மண்ணையும் மானத்தையும் காக்க போராடிய ஒரு மாவீரனைப் பற்றியது.
இந்தப் படத்தின் திரை கதையை ஒரு ஆறு எபிசோடுகள் கொண்ட திரைக்கதைகளாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. என்பது நமது கணிப்பு

முதல் எபிசோடில் காடுவெட்டி குரு, அவர்கள் ,தமிழ் இனத்து பெண்கள் மானம் காக்க எந்த எல்லைக்கும் சென்று எதிரிகளை கொன்று மண்ணுக்குள் புதைப்பார், என்று சொல்லப்பட்டிருக்கிறது . திலகா என்ற பள்ளி மாணவியை ,சீரழித்த கதிர் ,சந்திரன், மணிமாறன் இவர்களை கொன்று குவிக்கும் இவர், ஒரு பெண், போலீஸ் ஸ்டேஷனில் கணவர் அடிக்கிறார் என்று புகார் செய்யப் போக அங்கு போலீஸ் அதிகாரி(சாய்தீனா) எல்லை மீற அந்த போலீஸ் ஸ்டேஷனை சுக்கு நூறாக அடித்து தூளாக்குகிறார் செம விறுவிறுப்பான எபிசோடு அது .

இரண்டாவது எபிசோடு ,அவரின் குடும்ப வாழ்க்கை , ஏழு அம்பேத்கர் சிலைகளை திறப்பது, ஏழை மானவ மாணவிகளை, படிக்க வைப்பது அய்யா “அவர்களிடம் அன்புக்கு பாத்திரமாக இருப்பது ,என்று காட்டப்பட்டிருக்கிறது இந்த பகுதி மிகவும் ரசிக்க வைக்கிறது.

மூன்றாவது எபிசோடில் குரு, என்கிற குருநாதன், அவர் தந்தை ஜெயராம் ,(சமுத்திரக்கனி) அவரின் எதிரியான ரவிச்சந்திரன்(ஆடுகளம் நரேன்) இருவருக்கும் ஏற்படும் மோதலை மிக விறு விறு ப்பாக காட்டப்பட்டிருக்கிறது

அது பட்டியல் இனமக்களான, மன்சூர் அலி கானுக்கு, ஜெயராம் ஆன சமுத்திரக்கனி உதவி செய்ய அவர் உயிரேயே எடுக்கிறார் நரேன் தன் அப்பாவை கொன்றவரை பழிவாங்குகிறார் குரு. அந்த இளமைப் பருவத்தில் தமிழ் கௌதமன் நடித்திருக்கிறார் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.

நான்காவது எபிசோடு சூரியபாபு (மதுசூதன ராவ்)என்கிற பண முதலையுடன் மோதுவதாக அமைக்கப்பட்டு இருக்கிறது .

எதிரியான, சூரிய பாபு வீட்டிலே சென்று ஓர் இரவு முழுவதும் தூங்கி எழுவது, வில்லன்கள் அவரை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கொஞ்சம் ரசனையான காட்சி.

ஐந்தாவது எபிசோடு அனல் மின் நிலையம் திறக்க அந்த மண்ணின் மைந்தர்களைஊரை விட்டு துரத்தி, அவர்கள் நிலத்தை பிடுங்கி ,பல கோடி முதலீடு செய்யும் அந்த பண முதலையிடம் மோதும் காட்சி, படத்தின் மிகப்பெரிய விறுவிறுப்பான காட்ிகள் குரு அவர்கள் கைது நடவடிக்கை துணிச்சல் மிக்க நடிப்பு சூப்பர்!

ஆறாவது எபிசோடில் குரு அவர்கள் நோய்வாய்ப்பட்டு, மரணம் அடைவதைப் போல காட்டப்பட்டிருக்கிறது அவர் ஒரு மனிதநேயர், அவருக்காக மக்கள் எல்லாரும் பிரார்த்தனை செய்வது போல படத்தை முடித்து இருக்கிறார்கள்.
திரை கதை, மற்றும் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

இயக்குநர்& நடிகர் கவுதமன்

ஒவ்வொரு காட்சியிலும் கம்பீரமாக நடந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் நல்ல குணம் கொண்டவராக குரு, அவர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார்.

ஒரு சுய கவுரவம் கொண்ட மனிதனின் வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் மிகுந்த நம்பகத்தன்மையுடன் எடுத்துள்ளார்

எளிமையும், கண் பார்வையிலேயே காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை. குரு, நல்லவர் ஆனால் சூழ்நிலை அவரை மோசமான மனிதனைப் போல் தோன்றச் செய்து தவறாக புரிந்து கொள்ளப்படுவதை உடைத்து இந்தப் படத்தின் மூலம் அவர் நல்லவர் என்பதே படத்தின் மைய புள்ளி… அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது மிக அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் கவுதமன், அதை அழகாய் படமாக்கி இருப்பார் இயக்குனர்.

இருவரும் நடிகரும் ஒருவரே என்பது அவருக்கு கிடைத்த வெற்றி குரு, பாத்திரம் வெகு நுட்பமானது. “சோழ வம்சம் “தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் அழகான வசனம். ஒரு தன்மானம் உள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு.

அறிமுக நாயகன் தமிழ் கவுதமனை அறிமுக படுத்திய விதம் அருமை கோபம் ,பாசம் ,வெறுப்பு இயலாமை எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை கொண்டிருக்கிறார். தன்மானம் உள்ள இளைஞன் தமிழ்கவுதமன் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.

நாயகன் வ.கவுதமன், சண்டை காட்சிகளில் கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் பாணியில் அசத்தியிருக்கிறார் .

கிளைமாக்ஸ் காட்சியில் தன் குரல் போகிறது என்பதற்காக உயிரையே, துச்சமாக நினைக்கிறேன் என்று வாழ்ந்த ஒரு அற்புதமான மாவீரனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

நடிகர் & நடிகைகள்
சமுத்திரக்கனி,

ராணுவத்திற்கு சென்று விட்டு வந்தவராக, ஜெயராம் என்ற கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் கம்பீரமாக நடித்திருக்கிறார் தன்னுடைய உறவுக்காரர் ஆடுகளம் நரேன் உடன் மோதும் காட்சிகள்அருமை.

மன்சூர் அலிகான்,

கொடுக்கான், என்ற பட்டியல் இன மக்களில் ஒருவராக அற்புதமாக நடித்திருக்கிறார். படம் முழுக்க குரு அவர்களுக்கு பக்கபலமாக வருவது இவரின் கதாபாத்திரத்தில் சிறப்பு.

பாகுபலி பிரபாகர்,

பதவி உயர்வு பெற்ற ராஜ்குமார், டி எஸ் பி யாக பிறகு, எஸ்பி ஆகி குருவுடன் படம் முழுக்க மோதி, ஆக்ரோஷமாகவும், அனல் தெறிக்க, நடித்துள்ளார் .

கிங்ஸ்லீ,

வைத்தி, என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து கடைசி காட்சியில், கண்கள் குளமாக்கி விடுகிறார்.

ஆடுகளம் நரேன்,

குருவின் அப்பா ஜெயராமை, கொலை செய்யும் ரவிச்சந்திரன், என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கிறார். சிங்கமாக கர்ஜிக்கிறார்.

இளவரசு,

மனிதநேயம் உள்ள நல்ல போலீசாக நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சாய் தீனா,

புகார் கொடுக்க வரும் பெண்களை தன் காம இச்சைக்கு பலியாக்க நினைக்கும் வேடத்தில் ,இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்,

கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரகனி மனைவியாக, கௌதமன் அம்மாவாக ,படம் முழுக்க அற்புதமான நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார். சரண்யா இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

தமிழ் கௌதமன், காடுவெட்டி குரு அவர்களின் இளமைக்கால தோற்றத்தில் வருகிறார் .அப்பாவை கொன்ற ஆடுகளம் நரேனை, பழிவாங்க துடிக்கும் இளைஞனாக, ஆக்ரோசமாக சண்டை செய்து, அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது

வரும் காலத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது .

வீரபத்திரனாக வரும் ராஜா ,நீதி பதியாக வரும தலைவாசல் விஜய் ,மற்றும் ஐ ஜி யாக வரும் நிழல்கள் ரவி ,துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, என அனைவரும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பூஜிதா, ஒரு சில காட்சிகள் வந்தாலும் மன நிறைவை தருகிறார் .

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சாம்.சி எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக இருக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு வரியும் மாவீரனின், அறத்தை சொல்கிறது வீரத்தை சொல்கிறது .அவர் வாழ்ந்த வாழ்க்கையை சொல்கிறது. அற்புதமான பாடல் வரிகள்

தயாரிப்பாளர்கள் ,
நிர்மல் சரவணராஜ்&
கே.கிருஷ்ணமூர்த்தி,
இணை தயாரிப்பாளர் களாக,வ.கௌதமன்
இ.குறளமுதன்,
U .M .உமாதேவன்,
கே.பாஸ்கர்,
கே.பரமேஸ்வரி,
மற்றும் வி.கே.குரூப்ஸ் கம்பெனி
அனைவரும் இணைந்து ,ஒரு நல்ல தரமான படத்தை கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் .

சில்வாவின், சண்டை பயிற்சி அனல் தெரிக்கிறது. ஒவ்வொரு சண்டை காட்சியும், குரு அவர்கள் வீரத்தை பறை சாற்றுகிறது.

கோபி ஜெகதீஸ்வரன், ஒலிப்பதிவு அருமை பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும், கண்ணுக்குள்ளே நிற்கிறது. அற்புதமான ஒளிப்பதிவு. பாராட்டுக்கள்.

ராஜா முகமதுவின், படத்தொகுப்பு சார்ப்பாக இருக்கிறது.
காட்சிகளை விறுவிறுப்பாக சீராக எடிட் செய்து இருக்கிறார் .படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு ஒரு மிகப்பெரிய பலம் .
படத்திற்கு விறு விறுப்பை தந்தது படத்தொகுப்பு.

மற்றும் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக, பணி புரிந்தவர் ஒப்பனையாளர், கலர் கரெக்ஷன் செய்தவர், டி ஐ செய்தவர் ,
பாடல் பாடிய ஜீ .வி. பிரகாஷ், சைந்தவி, மற்றும் அவள் வருவாளா, என்ற பாடலுக்கு ஆடிய நடனமாஸ்டர் ஸ்ரீதர் ,
என எல்லோரும் தங்கள் பங்குக்கு உழைத்திருக்கிறார்கள் .அந்த மாவட்ட மக்களும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்கள் படத்தை மக்களிடம், நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த “படையாண்ட மாவீரா” ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காக வாழ்ந்த ஒரு வீரனின் வாழ்க்கை பதிவு, வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் வகையில் பெரும் பொருட்செலவில் பல நண்பர்கள் உதவியுடன், இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனர் வா. கௌதமன் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். காடுவெட்டிகுரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வ. கௌதமன்.

அவரின் ஹேர் ஸ்டைலும் முகமும் கண்களும் அந்தக் கேரக்டருக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறார். போதாக்குறைக்கு அவரின் குரல், அட்டகாசமாகப் பொருந்தியது. என்று சொல்லலாம் .

வெற்றி பட்டியலில் “படையாண்ட மாவீரா”