சரீரம் திரை விமர்சனம்

ஜி.வி.பி பிக்சர்ஸ் சார்பில், இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கி மலைச்சாமி, என்ற காவல் துறை வேடத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரீரம்’.

இப்படத்தை, ஜி.வி. பெர்மல் (GVP) பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது

காதல் ஜோடிகளான ப்ரியன், விஜய் லட்சுமி இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள் அவர்களின் காதலுக்கு நாயகியின் அப்பா, கிரைனைட் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துகளை ஆட்டைய போட, அவர் மகளை திருமணம் செய்ய நினைக்கிறார் அவரது மாமா வெற்றிவேல் , இப்படி அவர்கள் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இப்படத்தின் கதை.

இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை, வித்தியாசமான கதை,

புரட்சிகரமான கதை, பாராட்ட வேண்டிய படைப்பு.

தமிழ் சினிமாவில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

காதலுக்கு உதவி செய்யும் திருநங்கை ராணி, மற்றும் நாயகனின் உயிரை காப்பாற்றும் நண்பர்கள், திருநங்கையாகவும், திருநம்பியாகவும் மாற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் ஷகிலா, என அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

நடிகர்கள் & நடிகைகள்
புதுமுகம் தர்ஷன்,

பிரியன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக சண்டை போடுகிறார் .காதல் காட்சிகளில் ரொமான்ஸ் செய்கிறார்.

திருநங்கையாக மாறிய பின் அதே போல பேச்சு உடல் நலினம் என அசத்தியிருக்கிறார்.

சார்மி நாயகியாக நடித்துள்ளார்

கோடீஸ்வரனுக்கு ஒரே மகளான விஜயலட்சுமி, என்ற கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்திருக்கிறார் .

தன் மாமா வெற்றிவேலுக்கு பயந்து கொண்டு இவர் திருநம்பியாகவும், தன் காதலனை திருநங்கையாக, மாற்றும் இவர் யோசனை புதுமையானது .

கிளைமாக்ஸ் காட்சியில் தாய் அன்புக்காக ஏங்கும் நடிப்பில் ஜொலிக்கிறார்.

மற்றும் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள், மலைச்சாமி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருநங்கைகள் சிலரும், தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார். பாடல் காட்சிகளும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. V.T. பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி வரிகளில், ரசிகர்களை மயக்கும் ஏழு அருமையான பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது கிரானைட் தொழிற்சாலையில் நடக்கும் சண்டை, கடற்கரை ஓரத்தில் நடக்கும் சண்டை, என அனல் தெரிக்கிறது.

ஒளிப்பதிவாளர்: டோர்னலா பாஸ்கர் K, பரணி குமார்.

இவரின் ஒளிப்பதிவு கிரானைட் தொழிற்சாலை, மற்றும் அந்த டேம், மகாபலிபுரம், பாடல் காட்சிகளில், ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.

எடிட்டிங் – லக்‌ஷமன்

படத்தை இரண்டு மணி நேரம் செதுக்கியிருக்கிறார் காட்சிகள் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளர் காரணம்.

நடன இயக்கம் – J மனோஜ்

ஜானி மாஸ்டர் ஆடும் அந்த நடனம் ,மற்றும் பாடல் காட்சிகளில், நாயகன் ஆடும் நடனம் எல்லாமே ரசிக்க வைக்கிறது.

எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – P சரத்குமார
மக்கள் தொடர்பாளர் மணி மதன்,

இந்தப் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த சரீரம்”அழகான ஒரு காதல் கதை, தமிழ் சினிமாவில் புதுமையான கதை,

இப்படி ஒரு கதையை, காதல் கவிதையாக எழுதி, நடித்து, தயாரித்து, இயக்கிய ஜீ .வி .பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.