படிக்கும் இளைஞர்கள், பொழுது போக்கிற்கு பப்” சென்று மது ஆட்டத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை, எப்படி தொலைக்கிறார்கள். என்பதை சமூக அக்கறையோடு சொல்லி இருக்கிறது “ரைட்”
கதை களம்
அருண் பாண்டியன், தன் மகன் ஜெய் காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார்.
அங்கு காவல்துறையில் பணி புரியும் அதிகாரிகள், பிரதமர் பந்தோபஸுக்காக வெளியே போகும் சூழ்நிலை , இதனால் அருண் பாண்டியன் கொடுத்த மனுவை உதாசீனம் செய்து விட, அருண்பாண்டியன் மகனின் நண்பர்கள் ஆன, சுஜித், ஜோசப் இருவரையும் விசாரிக்கிறார். சரியான தகவல் கிடைக்கவில்லை .
இதையடுத்து அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு லேப்டாப் கேட்பாரற்று கிடைக்கிறது. அதை மூனார் ரமேஷ் ,அங்கு பணிபுரியும் கான்ஸ்டபிள்மேனகா,இருவரும் ஓப்பன் செய்ய , அந்த காவல் நிலையத்திற்கு டிஜிட்டல் முறையில் வெடிகுண்டு வந்திருக்கிறது. உள்ளே வரலாம் வெளியே போக முடியாது நான் சொல்லும் குற்றவாளி அரஸ்ட் செய்தால் எல்லோரும் தப்பலாம் என்று வருகிறது.
அரண்டு போன போலீஸ் அதிகாரிகள் அடுத்து என்ன செய்தார்கள் ?அந்த காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்தது யார்? காணாமல் போன அருண்பாண்டியன் மகன் கிடைத்தாரா ?
பிரதமர் பந்தோபஸ்து துக்கு சென்ற நட்டி ரவி திரும்பி வந்தாரா? என்ன நடந்தது ?என்பதை இரண்டு மணி நேரம் பரபரப்போடு, விறுவிறுப்போடு, சொல்லி இருக்கிறது இந்த “ரைட்”
நடிகர் & நடிகைகள்
நட்டி என்கிற நட்ராஜ்
ரகுராம் ,என்ற கதாபாத்திரத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.
அருண் பாண்டியன்,
சக்திவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் காணாமல் போன மகனை தேடி அலையும் கதாபாத்திரம் அவருடைய கதாபாத்திரத்தில் ஒரு டிவிஸ்ட் வருகிறது. அது யாரும் எதிர்பாராதது நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். நட்டியும் இவரும்
இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்
’பிக் பாஸ்’ அக்ஷரா ரெட்டி,
மேனகா என்ற காவல்துறை அதிகாரி ஆக கண்ணியம் தவறாமல் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார்.இவர்என்ட்ரீ ஆன பிறகு படம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
வினோதினி,
நீதிபதியாக நடித்திருக்கிறார் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மூணாறு ரமேஷ்,
செல்லதுரை என்ற காவல் நிலைய எழுத்தராக படம் முழுக்க உட்கார்ந்து கொண்டே நடித்து இருக்கிறார் பயமும் பீதியுமாக,
டைகர் தங்கதுரை,
ஒரு திருடனாக நல்லமுத்து, என்ற கதாபாத்திரத்தில் அந்த காவல் நிலையத்தில் டைமிங் காமெடி அடித்துக் கொண்டு உலா வருவது சிறப்பு.
உதய் மகேஷ், சிறப்பாக நடித்திருக்கிறார் முத்துராமன், ராஜதுரை யாக ஓய்வு பெற்ற எஸ் .பி .யாக குற்றம் செய்தவரை தப்பிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். ரோஷன் உதயகுமார்
அமைச்சர் மகனாக படத்தின் வில்லனாக செமையாக நடித்திருக்கிறார்.
இது தவிர வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி,வர்ணாவாக இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் அறிமுகமாகிறார்.
இவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது தன் காதலியை தேடி அலைந்து பரிதவிக்கும் நடிப்பு ஜொலிக்கிறார்.
மற்றும் வேந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இணை தயாரிப்பாளர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார்.
ஒரு வெற்றி படத்தை எப்படி மக்களுக்கு கொடுத்தால் ரசிப்பார்கள் என்பதை அவரின் திறமையான இயக்கம் வெளிப்படுத்தி இருக்கிறது.
காவல் நிலையத்திற்கு யார் பாம் வைத்தார்கள் என்பதை கடைசி வரை, டிவிஸ்ட் வைத்து கதையை சொல்லி இருப்பது விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.
அதோடு சமூக அக்கறையோடு கதை சொல்லி இருக்கிறார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .
தயாரிப்பாளர்
ஆர்.டி.எஸ் பிலிம் பேக்டரி சார்பில், திருமால் லட்சுமணன், டி ஷியாமளா தயாரித்துள்ளனர்.
நல்ல கதையை தேர்வு செய்து படமாக கொடுத்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
பத்மேஷ் ,ஒளிப்பதிவு
செம ரிச் ஆக இருக்கிறது. படம் முழுக்க காவல்நிலையத்தில் தான் கதை நடக்கிறது .இடை இடையே கடற்கரையைக் காட்டி, பப் “போன்ற இடங்களை காட்டி ஒளிப்பதிவில் பிரமிக்க வைத்திருக்கிறார்.
குணா பாலசுப்பிரமணியன் இசையில் கண்மணி பூவே ,பாடலும்
உன் பார்வை ஒன்றே போதுமே பாடலும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை சூப்பர்.
அருமையான பாடல் வரிகள் அபிஷா, எழுதி இருக்கிறார். கண்மணி பூவே பாடல் மனதில் நிற்கிறது.
படத்தொகுப்பாளர் நாகூரான், ஒரு கிரைம் திரில்லர் படத்திற்கு வெற்றியை தேடி தருவது படத்தொகுப்பாளர்கள் தான்
கவனமாக காட்சிகளை செதுக்கி படத்தில் அற்புதமாக எடிட் செய்திருக்கிறார். நாகூரான் ராமசந்திரன் வாழ்த்துக்கள்.
தாமு,
ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். அந்த காவல் நிலையம் அமைத்த அரங்கம். பேசப்படுகிறது
அது தவிர அந்த “பப்” அருண்பாண்டியன் வீடு, என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் பளிச் என்று இருக்கிறது.
வசனம் கருணா மூர்த்தி சுப்ரமணியம்,
மற்றும் ரமேஷ் எழுதி இருக்கிறார்கள். வசனங்கள் சிறப்பாக இருக்கிறது.
மிராக்கிள் மைக்கேல்
சன்டை பயிற்சி அமைத்திருக்கிறார் .
ராதிகாவின் நடன பயிற்சி நடனமும் ரசிக்க வைக்கிறது .
சீராளன் மணி, ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார். யாருக்கும் மிகையில்லாத ஒப்பனை அழகாக ரசிக்க வைக்கிறது.
காஸ்டியூம் டிசைனராக வேலவன் பணிபுரிந்து இருக்கிறார்.
மற்றும் இந்த படத்திற்கு உழைத்த டெக்னீசியன்கள்
Sound Design – Rashid. J
Dubbing – Goodluck Studios
Foley and Sound Editor – Ananth Nagarajan
VFX – Pix Rock
DI – iGene Xforia
Dolby Atmos Mix – T. Uday Kumar (Sound Vibe Studios)
Colorist – K. S. Rajasekaran
Production Manager – M Ilayaraja Selvam
Stills – T. G. DilipKumar
Publicity Designer – Rajinkrishnan. M
PRO – Sathish AIM
Promotion – DEC
Co-Directors – Manibhaskar, Saleem Syed Rahim
Associate Director – Suresh Radhakrishnan
Direction Assistants – Pon Mariselvam, Sridhar Prakash, Sherin Bosco
DOP Team – Karthik Baskar, Sakthivel. B, Manikandan. V, Aneesh Krishna
Associate Editor – Vivek Manoharan
Assistant Editors – Aswin K Kuppu, Sairam T
Subtitles – Rabhinder Kannan, Angayarkanni N, S V Suruthilaya, Natalia Candace Raaj, Aarthika M, Amritha Ramesh
இவர்கள் அனைவரும் ஒரு வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
மொத்தத்தில் இந்த படம் இளைஞர்களுக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்
தேவையில்லாத மதுபான “பப் செல்லக்கூடாது .
அதுவும் படிக்கும் பெண் குழந்தைகள் அங்கு சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் .
ஒழுக்கமாக வாழ்வதுதான் வாழ்வின் உயர்ந்த நிலை என்பதை சொல்லி இருக்கிறது. இந்த படம் பார்க்கும் ஒருவர் திருந்தினால் கூட இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
