கதைக்களம்
கேரள, தமிழக பார்டரில், நடக்கும் கதை “பல்டி” ஷான் நிகம்,(உதயன்) சாந்தனு (குமார்) அவருடைய நண்பர்கள் பஞ்சமி கபடி குழுவை சேர்ந்தவர்கள். போட்டி என்று வந்து விட்டால் கில்லியாக ஆடி ஜெயிக்கிறார்கள்..
பஞ்சமிடீம், பொற்றாமரை டீம், இரண்டு கபடி டீம்-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அத்தோடு அவர் ஜெட் ஸ்பீடு வட்டி, ஜம்போ வட்டி, மீட்டர் வட்டிக்கு விடுபவர்.
கடன் கொடுக்க முடியாதவர்களை ஒட்டு துணி இல்லாமல் உட்கார வைத்து, அவர்கள் மனைவியை வரவழைத்து அவமானப்படுத்தும் செல்வராகவன்.
கபடியில் இவருக்கு தன்னுடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் பொற்றாமரை வங்கி துவக்க வேண்டும் என்று கனவு கானுகிறார்.
உதயன் டீமை, தன்னுடைய பொற்றாமரை கபடி டீமில், இணைத்து சோடா பாபுவை வெற்றிக் கொள்கிறார் செல்வராகவன் .
சாந்தனு வால் ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதிக்க, பணத்திற்காக தற்போது பொற்றாமரை டீம்-ல் விளையாட சம்மதிக்க அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமான, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு கார்-யை தூக்குகிறார்.
அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் சமாதானம் பேச போன ஷான் நிகம், சாந்தனும் மற்றும் அவர் நண்பர்களை அல்போன்ஸ் தாக்க, அங்கு அவரை அடித்து துவைத்து ஷான் நிகம் & கோ கார்-யை எடுத்து வர, அடுத்தடுத்து இவர்கள் பகை எங்கு கொண்டு சென்றது என்பது விறு விறுப்பு
செல்வராகவனுக்கு போட்டியாளராக சோடா பாபு, இவர் ஒரு ஜகஜால கில்லாடி,
இவர்கள் இருவரையும் அழிக்க வேண்டும் என்று துடிப்பவர்,ஜீமா. இந்த மூன்று பேருக்கும் அந்த பார்டரை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்
இந்த மூன்று கும்பல்களின் பகை, பழிவாங்கல், துரோகம் மற்றும் கொடூரம் மீதி கதை . இதற்கிடையே நாயகி கல்யாணியுடன், உதயன் காதல் , நாயகியின் அண்ணன் பிரதீப் பைரவனிடம் கடன் வாங்கி, ஒரு காலை இழப்பது, என்று கதை செம ஸ்பீடாக செல்கிறது.
நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் செல்கிறார்கள் அந்த பழக்கம் அவர்களை எப்படி சுத்த விடுகிறது என்பது திரைக்கதை யுக்தி .
நடிகர் & நடிகைகள்
ஷான் நிகேம், படம் முழுவதும் அலட்டல், ஆர்பாட்டம் இல்லாத நடிப்பில் அசத்தியுள்ளார்,
சண்டைக் காட்சிகளில் செம அசத்தல், சோடா பேக்டரியில், சந்தையிலும், பொள்ளாச்சி லாட்ஜில் நடக்கும் சண்டை காட்சிகளில், கிளைமாக்ஸ் காட்சியில், செல்வராகவன் உடன் மோதும் காட்சியில் ,விசில் அடித்து கைதட்ட வைக்கிறது.
ப்ரீத்தி அஸ்ராணியிடம், மயங்கி அவரை காதலிக்கும் அந்த காதல் காட்சிகள் இதமான மலைச்சாரலாக இதயத்தை ஊடுருவி செல்கிறது.
நண்பன் குமார் ஒவ்வொரு சிக்கலையும் ,போட்டு முடிச்சு போட வைக்கிறான , என்று புலம்புவது நல்லநடிப்பு. லுங்கியை தூக்கிக் கொண்டு சட்டையை தூக்கி விட்டு நடக்கும் ஸ்டைலே தனி அழகு.
சாந்தனு-வும் மிடுக்கான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் கலக்கியுள்ளார்,
குமார் என்ற கதாபாத்திரத்தில், குழப்பவாதியாக ஜீமாவிடம் ,சிக்கிக் கொண்டு நண்பர்கள் சாவுக்கு இவரும் ஒரு காரணமாக அமைவது கதையில் முக்கியமான திருப்பம். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் ரவுடியாகவும், சாம் ஒரு விளையாட்டு வீரராகவும் காட்டி படத்தை முடித்து இருப்பது ஆறுதல்.
ப்ரீத்தி அஸ்ராணி, கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய ஒரிஜினல் நிறத்தை கருப்பாக மாற்றி, பூக்கடையில் வேலை செய்யும் பெண்ணாக உதயனை விரும்பும் அந்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் அருமை.
செல்வராகவன், பொற்றாமரை பைனான்ஸ், பொற்றாமரை ஹோட்டல், பொற்றாமரை வங்கி என காலபைரவரை வணங்கி ,அவர் செய்யும் ஒவ்வொரு அட்டூழியமும் கொடூரத்தின் உச்சம்.
கடன் கொடுக்காதவர்களை ரூமுக்குள் பூட்டி ஒட்டு துணி இல்லாமல் உட்கார வைத்து அவரவர் மனைவியை அழைத்து வந்து வெளியே விடும் பொழுது இதயம் பதறுகிறது. செல்வராகவன் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
செல்வராகவன் சிரித்துக்கொண்டு பணம் வாங்கியவர்கள் உடையை உருவி, அவமானப்படுத்தி காட்டும் வில்லத்தனம் நடிப்பிலும் பாஸ் மார்க் தான், இவர்கள் தாண்டி அல்போப்ஸ், ஜீ-மா கதாபாத்திரம் நல்ல நடிப்பு. அதிலும் இரண்டாம் பாதியில் ஜீ-மா ஆடும் ஆட்டத்தில் 4 நண்பர்கள் சிக்கும் இடம் நல்ல திருப்பம்.
இடைவேளை முடிந்து தான் படத்தின் கதையே தொடங்குகிறது
அதன் பிறகு நண்பர்களுக்குள் நடக்கும் எமோஷ்னல் போராட்டத்தை குறிப்பாக சாந்தனுவால் இவர்கள் பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு கடைசியில் மிகப்பெரிய கூட்டம் இவர்களை கொல்ல வர, கடைசி அரை மணி நேரம் செம பரபரப்பு
படத்தின் மிகப்பெரும் பலமே சண்டை காட்சிகள், ஷான், சாந்தனு என மெயின் 4 கதாபாத்திரங்களும் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
சாய் அபயங்கர், இசை மாஸ் காட்சிகளுக்கு நன்றாக இருகிறது ஜாலக்காரி பாடல் ரசிக்க வைக்கிறது
அலெக்ஸ் ஜே.புலிக்கல். ஒளிப்பதிவு பிரமாதம். சண்டைக் காட்சிகளில் ,பாடல் காட்சிகளில் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
உன்னி சிவலிங்கம் இயக்கம், சீராக இருக்கிறது. தெளிவான திரைக்கதை, படத்திற்கு தேவையான டுவிஸ்ட் ஜாம்பவான்களுக்குள் நாயகனின் கூட்டம் சிக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருவார்கள் என்பதை அவர் வகுத்திருக்கும் திரைக்கதை நன்றாக இருக்கிறது.
தயாரிப்பாளர்கள்: சாந்தாே்ஷ் T. குருவில்லா & பினுஜார்ஜ் அலெக்சாண்டர் இணணதயாரி ப்பாளர்: ஷெரின் ரேச்சல் சாந்தாேஷ் தயாரிப்பு நிறுவனம்: STK ஃபிலிம்ஸ்
சிவகுமார் வி. பானிக்கர் அவர்கள் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு பங்காற்றி இருக்கிறது.
ஆர்ட் டைரக்டராக ஆஷிக்.எஸ் . பணி புரிந்திருக்கிறார் சோடா பேக்டரி, கபடி டோர்னமெண்ட், இடம் செல்வராகவன் பைனான்ஸ் இடம், என அசத்தியிருக்கிறார்
ஆர்ட் டைரக்டர். T.D.ராமகிருஷ்ணனின் வசனம் ரசிக்க வைக்கிறது.
நிர்வாக தயாரிப்பு : சந்தீப்நாராயண் தமிழ்நாடு விநியோகம் & ஏ ஜி எஸ் தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடுகிறது ப்யூச்சர் அப் -ஏஜிஎஸ் நிறுவனம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
படத்தின் ஹை லைட்ஸ்
படத்தோட தொடக்கத்திலேயே ஒரு கொலை சம்பவத்தோடு ஆரம்பிக்கிறது…
ஏன்? எதற்கு? என்ற கேள்விகளோடு பின் கதையோடு பயணிப்பது சிறப்பு.
ஷான் நிகேம்நடிப்பு மிரட்டி இருக்காரு சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் தரம்
(Hotel fight 🍽 & Soda factory fight 🥤 – செமையா வந்துருக்கு மேக்கிங் தரமா இருக்கு
கபடி போட்டி அப்படியே உண்மையில பாக்குற மாதிரி இருக்கு
காதல் காட்சிகள் ஒரு கவிதை போல இருக்கிறது. பார்ப்பதற்கு அவ்வளவு இதமாக இருக்கிறது.
படத்தில் எந்த இடத்திலும் எதார்த்தங்கள் மிஸ் ஆகாமல் லாஜிக் மீறாமல் இருப்பது. திரைக்கதையின் புத்திசாலித்தனம் .
அல்போன்ஸ் புத்திரன், ஒரு ஸ்டைலாக கெத்தாக நடந்து கொள்ளும் அந்த வில்லத் தோரணை ரசிக்க வைக்கிறது.
ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ அதை அதுவே உள்வாங்கிக் கொள்ளும்
இந்த “பல்டி” திரைப்படம் முழுக்க முழுக்க வெற்றி பார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
