கதைக்களம்,
கண்ணியாஸ்திரியான மரியா, சாதாரண ஒரு நார்மல் வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். அது தவறா ?அல்லது சரியா? என்பது பற்றி பேசும் படம் “மரியா
தனது பாலியல் இச்சைகளை உணர்ந்து, மடத்தை விட்டு விலகி, ஒரு சாத்தானியன் குழுவில் தஞ்சமடைகிறார்,
MARIYA “அவளைச் சுற்றியுள்ள தீவிர சித்தாந்தங்கள் எவ்வாறு அவளை அலைக்கழிக்கின்றன என்பதைப் பற்றியும் இப்படம் சொல்கிறது..
இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரியா நான் கன்னியாஸ்திரி
ஆக தொடர முடியாது. என்று பெற்ற தாயிடம் சொல்லும் பொழுது. தாயே வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.
அதன் பின் ஒரு தோழி வீட்டில் தங்கும் பொழுது அங்கு அவர்கள் இரவில் கூத்தடிப்பதும், நால்வரும் சேர்ந்து குடிப்பதும், மரியாவின் மனதை மாற்றியமைக்கிறது. பாலியல் இச்சைக்கு ஆளாகிறார்.
அதிலிருந்து மீள்வதற்கு சாத்தானின் அடிமைகளான பாவல் நவநீதனின் குரூப்பில் இணைகிறார்.
முடிவு என்ன ஆனது? அவர் பாதை விலகி ஊர் போய் சேர்ந்தாரா?
என்பதை பார்வையாளர் கற்பனைக்கே விட்டு இருக்கிறார் இயக்குனர்.
தமிழ்சினிமா பெண்களைப் பற்றி உருவாக்கிய பிம்பங்கள் எண்ணிடலங்காதவை. அன்றைய தமிழ் சினிமாவும் இன்றைய தமிழ் சினிமாவும், மக்களின் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கும் படமாக வந்து நின்றதுதான் ‘மரியா
அவளுக்குள்ளும் உணர்ச்சிகள் உண்டு. காம இச்சைகள் உண்டு, பேராசை உண்டு ,ஏக்கம் உண்டு ,பல பரிமாணம் உண்டு, முடிவில்லா தொடக்கம் உண்டு, என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது மரியா.
வரவேற்க வேண்டிய படம் “MARIYA”
நடிகர் & நடிகைகள்
மரியா வேடத்தில் நடித்திருக்கும்
சாய் ஸ்ரீ, அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அம்மாவால் வீட்டை விட்டு துரத்தப்படும் பொழுதும், நெருங்கிய உறவினர் மேக்னஸ் வீட்டில் தங்கி இருக்கும் பொழுதும், இரவில் இளசுகள் குடித்து, கும்மாளமி ட்டு ,கூத்தடிப்பதை பார்த்து மனம் தன் ஆற்றலை விட்டு விலகி, ஆடவன் ஒருவன் தொடும் பொழுது உணர்ச்சி வெள்ளத்தில் மிதப்பதும், என அற்புதமான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்து காட்டியிருக்கிறார். அவரது முகமும் உடல் மொழியும் அவர் மீது ஒரு பரிதாபத்தை வரவழைக்கிறது
நன் “என்ற பாத்திரத்தில் வெளிப்பட்டு சாத்தானின் அடிமையாகும் போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். படத்தையும் ஒத்தையாக தூக்கி சுமந்து இருக்கிறார்.
சாய்ஸ்ரீ பிரபாகரன். வெல்டன் ma’am 👌
அடுத்து
🧶பாவல் நவகீதன்,
கடவுள் மறுப்பாளராக, சாத்தானின் அடிமையாக அவர் சொல்லும் விளக்கம். தமிழ் சினிமா இதுவரை காணாதது. வித்தியாசமானது அவர் நடிப்பு மிகவும் பாராட்டுத்தக்கது .
🧶சித்து குமரேசன்,
ஐ.டி .ஊழியர் பெண்ணாக வார இறுதியில் குடிப்பதும், இரவு முழுக்க காதலுடன் கும்மாளமிடுவது, கன்னியாஸ்திரி ஒருவர் வீட்டில் இருக்கிறார்.
என்று மனதை அடக்க முடியாமல் அலைபாயுதே ,என்று நடித்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் மரியா வைஅடித்து துரத்தும் பொழுது வெறுப்புக்கு ஆளாகிறார்.
🧶விக்னேஷ் இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
ரவி சுதா ற்றும் புஷ்பா ஆகியோர் இப்படத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை’ டார்க் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜி. மணிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்ஷன் இசையமைத்துள்ளனர்
🧶இயக்குனர்
கதை ,வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்
ஹரி கே.சுதன்,
வித்தியாசமான இயக்குனர். என்று தன்னை நிரூபித்து இருக்கிறார் .
சொல்ல வந்த கருத்துக்களை திறமையாக சொல்லி மக்கள் மனதில் இடம் பிடித்த்திருக்கிறார்
ஒரு பெண்ணின் உணர்வுகளை மனப்போராட்டங்களை அவள் அப்படித்தான் படத்தின் இயக்குனர் ருத்ரய்யா, சொன்னது போல சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளரும் இவர் தான், துணிந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார் ,
வாழ்த்துக்கள் சார்
🧶ஒளிப்பதிவாளர்
மணிசங்கர்,
படத்தொகுப்பாளர்
கமலேஷ் &
நிஷார் ஷெரிப்,
பாடல் வீடியோ எடிட்டிங், பிரசாத்
அரவிந்த் கோபால கிருஷ்ணன் &
பரத் சுதர்சன் இசையில் ரசிக்க வைக்கிறது.
பாடல்கள் எழுதியுள்ளார்கள்
தினேஷ்,
மந்தேஷ்வரன்&
அரவிந்த் கோபால கிருஷ்ணன் ,
தயாரிப்பு நிர்வாகி
ஆதவன் அரசு .
🧶நல்ல படங்களை தேர்வு செய்து அதை வெற்றி படமாக்கும் விநியோகஸ்தர் இப்
படத்தை வெளியிடும் s.ஹரி உத்ரா
வெளியிடுகிறார் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும்.
அரங்க அமைப்பு
ஹரி கே சுதன்,
ஒப்பனை ஹரி கே சுதன்,
ஆடை அணிகலன்கள்
செல்வா,
ஷீப் அசோசியேட் எடிட்டர்
ஹரிஷ் குமார.
அஸோஸியேட்இயக்குனர்
பாலாஜி வேலன்.
மற்றும் இந்த படத்திற்கு உழைத்த டெக்னீசியன்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌
🧶Dubbing: Aravind Gopalakrishnan
Colourist: Balagangadharan
Sound design: Rajesh Sasindharan (&) Hari K Sudhan
VFX: Raja
Lyrical video : Timeline Studio
P. R. O: Sathish (AIM)
Stills: Ashwin Bernard
Poster design: King’s Gallery
Musician Details: Dhamma the band (&) Hryday Sunil, Adam
Singers: Nithyashree Kasiappan (&) Deeksha Rajesh
Music Producers: Aravind Gopalakrishnan (&) Rizvan Rajah
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தில் இனைந்ததற்கு.
மொத்தத்தில் இந்த மரியா, திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய சிந்தனைகளை, புதிய எண்ணங்களை, ஒரு பெண்ணின் உணர்வுகளை, பிரதிபலிக்கும் வகையில் வந்திருக்கிறது. இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின், சிந்தனையை ஒட்டிய படமாக வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார், ஆக்சன், மசாலா, காமெடி என்று அரைத்த மாவை அரைக்காமல் ஒரு புதுவிதமான படத்தை கொடுத்ததற்காக தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா, ஒப்பனையாளர், அரங்க அமைப்பாளர் என பல முகங்களை இந்த படத்தில் திறமையாளராக காட்டி, சகலகலா வல்லவனாக , இயக்கியிருக்கும்
ஹரி .கே .சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏
