WIIL திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், விறுவிறுப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்).

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு விக்னேஷ் ரெட்டி, என்பவர் ஷ்ரத்தா என்ற பெண்மணிக்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள வில்லா வை, உயில் எழுதி வைத்து விடுகிறார்.
அந்த உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன?

யார் அந்த ஷ்ரத்தா ?

அவருக்கும் அந்த விக்னேஷ் ரெட்டிக்கும் என்ன உறவு ,என்பதை நீதிபதியான சோனியா அகர்வால் சப்-இன்ஸ்பெக்டர் விக்ராந்திடம் இன்வெஸ்டிகேஷன் நடத்த சொல்கிறார் . அதற்குப் பின்னால் நடக்கும் சுவாரசியமான திரைக்கதை தான் இந்தப்படம்.

உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக இப்படம் உருவாகியுள்ளது

நடிகர் & நடிகைகள்

இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் உண்மையை வெளிக்கொண்டு வரும் மனித நேயம் உள்ள நீதிபதியாக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

சோனியா அகர்வால் ஆணைக்கு இணங்க பழனிவேல், என்ற கதாபாத்திரத்தில் விக்ராந்த் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் இன்வெஸ்டிகேஷன் செய்து உண்மையை வெளிக்கொண்டுவரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பில்லா போஸ் மோட்டார் உதிரிபாகனத்தில் வேலை செய்யும் வரதராஜனாக வந்து தன் மகனுக்கு கல்லூரியில் பணம் கட்ட ஏழு லட்சம் நண்பரிடம் வாங்கி, மோசடி கும்பலின் சதி வலையில் வீழ்கிறார். அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது. அவருக்கு மகளாக வரும் ஷ்ரத்தா நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்து, பொறுப்புள்ள ஒரு மகளாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

இந்த வேடத்தில் நடிகை அலிகியா ஷ்ரத்தா என்ற கதாபாத்திரத்தில் எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்துள்ளார் . அவரின் கதாபாத்திரம் படத்தின் மைய புள்ளியாக உள்ளது. அம்மா ,அப்பாவிடம் அன்பாக நடந்து கொள்வது, விக்னேஷ் ரெட்டியிடம் நட்பாக பழகுவது, என பல முகங்களை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்றும் பதம் வேணு குமார், மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன்,சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

வழக்கறிஞராக பணியாற்றிய S சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

எடுத்துக்கொண்ட கதையை சீராக, தெளிவாக சொல்லி இருக்கிறார் .ஒரு பெண் தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யும் கதை புதிய கதைக்களம் .

படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை, விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

வசனம் இவரே எழுதி இருக்கிறார். வசனம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா பெண்களைப் பற்றி உருவாக்கிய பிம்பங்கள் எண்ணிடலங்காதவை. அன்றைய தமிழ் சினிமாவும் மக்களின் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்ி இருக்கிறார் இயக்குனர்.

இசை அமைப்பாளராக,

சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அல்ல அல்ல தீராத, என்ற அந்த சந்தோஷமான பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மிகவும் நன்றாக இருக்கிறது .

பின்னணி பாடிய கலைக்குமார் குரல் ரசிக்க வைக்கிறது.

இப்படத்தை சென்னை ,மற்றும் கோத்தகிரியில் படமாக்கியுள்ளார்

ஒளிப்பதிவாளர் : TS பிரசன்னா

காட்சிகள் குழுமையாக இருக்கிறது. சென்னையை காட்டியதும் கோத்தகிரி காட்டிய விதம் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர்: G தினேஷ்

படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பாளர் பங்கு அதிகமாக இருக்கிறது. படத்தை மிக நேர்த்தியாக அருமையாக தொகுத்திருக்கிறார்.

ஆர்ட் டைரக்டராக

மணி பணி புரிந்திருக்கிறார் அந்த கோர்ட் அரங்கம் ஆரம்பத்தில் வரும் அந்த கிளப் டான்ஸ், அரங்கம் மற்றும் கோத்தகிரி முதியோர் இல்லம், என எல்லா இடங்களிலும் சிறப்பான ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.
நடன இயக்குனராக அபு & சால்ஸ் பணி புரிந்து இருக்கிறார் ஆரம்ப கால அந்த நடன காட்சி ரசிக்க வைக்கிறது.

தீ கார்த்தியின் சண்டைக்காட்சிகள்: அனல் தெரிக்கிறது.
ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS)
ஃபோலே வடிவமைப்பாளர்: R.ராஜ் மோகன் டப்பிங் மற்றும் மிக்சிங் : DAW RECORDS டப்பிங் இன்ஜினியர்: வசந்த்
DI & VFX: Fire Fox Studios
போஸ்டர் : வியாகி
ஸ்டில்ஸ்: நவின் ராஜ்
டைட்டில் வடிவமைப்பு: சசி & சசி விளம்பர கட்ஸ் : அரவிந்த் B ஆனந்த்
ஒப்பனை: பாரி, கயல்
மக்கள் தொடர்பு :வேலு
புரமோசன் : Starnest Media
தயாரிப்பு நிர்வாகி: ரகுவரன்

என இந்த படத்தின் வெற்றிக்காக அனைவரும் உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

நமது நாட்டில் வருடத்திற்கு 15 லட்சம் கருக்கலைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இது போன்ற தாய்மையை போற்றும் விழிப்புணர்வு மிக்க படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் நிச்சயம் மக்களிடம் பேசப்படும் என்பது உறுதி.

வில் “படத்தின் பெயரைச் சொல்லும்போதே, அந்தப் படத்தின் மிக முக்கியமான, ஆணிவேராகத் திகழும் கேரக்டரின் பெயரையும் சொன்னால்… அந்தப் படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படம் என்பதை பளிச்சென்று சொல்லிவிடலாம். அப்படி, படத்தையும் கேரக்டர் பெயரையும் நாம் சொல்கிற படங்கள் ஏராளம். அந்த வகையில்…ஷர்தா… நம்மால் மறக்கவே முடியாதவள். காரணம்… நம்மூர்ப் பெண். நம் ஏரியாவில் இருப்பவள். நம் தெருவில் நாம் பார்த்த பெண். நம் வீடுகளில் இன்றைக்கும் உலவிக் கொண்டிருப்பவள் அவள்!
பெண் சுதந்திரம், முன்னேற்றம், பெண் வளர்ச்சி, சிந்தனைப் புரட்சி என்றெல்லாம் பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில்
இந்த “வில் திரை படம் .

தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்🙏