வித்தியாசமான கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள ‘ இப்படத்தை பி.வி.கே. ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக்(சக்தி வேல்) என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்’, ‘ கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி,(தீப்தி) ஃபாத்திமா நஹீம்(ஆனந்தி), வைசாலி ரவிச்சந்திரன்(கயல்) என்ற வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. நாயகன் ஆன்மாவுடன் செய்யும் காதல் ஒரு வித்தியாசமான ஜீவனுள்ள கதாபாத்திரத்தில் உருக வைத்திருக்கிறார்.
மனிஷா, தீப்தி என்ற வேடத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக, இடைவேளைக்குப் பிறகு வந்து உதவி செய்கிறார்.
பாத்திமா ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அப்பா வாங்கி கொடுத்த செல்போனை ஆர்வத்தோடு பார்த்து குதூகளிக்கும் பெண்ணாக, பிறகு ஆன்மாவாக வந்து உருக வைக்கிறார்.
வைஷாலி, கயல் என்ற கதாபாத்திரத்தில் நாயகனை, ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாகவும், நாயகியின் தோழியாக வந்து கதையை விவரிக்கிறார். இந்த நால்வரும் தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் என்பதால் இவர்களை சுற்றியே கதை நகருகிறது. அடுத்து என்ன என்ற கேள்விகளோடு…
இவர்களுடன் லிவிங்ஸ்டன்,(போலீஸ் அதிகாரி பிரபாகர் என்ற வேடத்தித்திலும்) பிரியதர்ஷினி நாயகனின் அம்மாவாக, மற்றும் ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கதை களம்
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் இருக்கும் ‘மெஸன்ஜரில்’ ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஶ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு தான் இறந்து விட்டதாக சொல்கிறார்.
இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார்? அந்த பெண் யார் என்பதை ஶ்ரீராம் கார்த்திக் விடை தேடி செல்வதே இந்த ‘மெஸன்ஜர்’ படத்தின் சுவையான கதை. ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை
உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
தமிழ் சினிமாவும் காதலும், என்றென்றும் பிரிக்க முடியாதவை. , கடித வழிக் காதல், தொலைபேசி காதல், செல்போன் காதல், ஸ்மார்ட்போன் காதல், ஃபேஸ்புக் மெசஞ்சர் காதல் என பற்பல வகையான காதல்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. இந்த வரிசையில் ‘ஆன்மாவின்காதல்” என்னும் புதுமையான சிந்தனையை முன்வைத்தள்ள படம்தான் ‘ . மெசஞ்சர்” ஆன்மாவின் காதல் என்பது நினைத்துப் பார்க்கவே சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயத்தை அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக ரசிக்கப்படும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் cr இயக்குநர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் , கலை சார்ந்த பார்வையையும், அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில், நாயகியின் கரு, முட்டை வைத்து வாடகைத்தாய் மூலம், குழந்தை உருவாக்கி ஒரு ஜீவன் உள்ள காட்சியை அமைத்திருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.
உதாரணத்திற்கு…
நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சிதமாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் அப்பா, மகள் ,பாசம் என்று ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைபாராட்டாமல் இருக்க முடியவில்லை.…
ஆவியாக வந்து ஆனந்தி மிரட்டுவதற்கு நிறைய காட்சிகள் இருந்தது .இயக்குனர் அதை பயன்படுத்தி பார்வையாளர்களை இன்னும் கொஞ்சம் மிரட்டி இருந்தால் இன்னும் ஜோராக இருந்திருக்கும்.
அபு பக்கர் இசையில் ,
பாடல்கள் சிறப்பு என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத்திருக்கிறார் , காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. …
வானமே பாடல்.
பால் கணேசன் ஒளிப்பதிவு ,
காலை உதயத்தின் அழகு, விக்கிரவாண்டி கிராமத்தில் அழகு , அய்யனார் கோயில் கொண்டாட்டம். அந்த வயல் காடுகள், நதிக்கரை மீது பாலம் என வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலகனேசன்.
கண்களில் ஐஸ் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!
பிரசாந்த் படத் தொகுப்பு செய்திருக்கிறார். பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஒப்பனையாளர், மற்றும் காஸ்டியூம் டிசைனர், என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பாளர் சதீஸ்வரன்
அவர்கள் படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் .
வித்தியாசமான கதை உள்ள படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் அதை வடிவமைத்த இயக்குனருக்கும், நடித்த நடிகர்கள் நடிகைகள்,
தயாரிப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏
