கதை களம்
திரைக்கதை ரொம்பவே பிரில்லியன்ட்டாக உருவாக்கப்பட்டுள்ளது .படத்தின் கதையையும் ட்விஸ்ட்டையும் யூகிக்கவே முடியவில்லை.
க்ரைம் ,திரில்லர் படம் தமிழ் சினிமாவில் பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த ஆர்யன் ,படம் அமைந்திருக்கிறது. . படத்திற்கு என்ன தேவையோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே திரைக்கதையில் சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் .
ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நிலையத்துக்கு வரும் செல்வராகவன், தொடர்ச்சியாக ஐந்து கொலைகள் நடக்கப்போகிறது என்று சொல்லிவிட்டு அவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார் .
இப்பொழுது எப்படி அந்த கொலைகள் நடக்கும்? யார் செய்வார்கள் .என்ன நடக்கும்? என்பது யூகிக்க முடியாத மர்மமான திரைக்கதை,
ஒரே மாதிரியான இரண்டு கொலை நடக்கிறது . அதைப் பற்றி விசாரிக்க காவல் துறை அதிகாரி நம்பி அமர்த்தப்படுகிறார். . அவர் வந்த பிறகும் கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன, செல்வராகவன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா ? யார் கொலை செய்கிறார்கள்.
என்பதை பரபரப்போடு விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் திரைப்படம் “ஆரியன்”
ஒவ்வொரு காட்சியும் வேகமாகவும் திரில்லிங்காகவும் யூகிக்க முடியாமல் நகர்வதில் வெற்றி கோட்டையைதொட்டு இருக்கிறது “ஆர்யன்”
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால், இன்வெஸ்டிகேசன் நடத்தும் ,நம்பிக் கதாபாத்திரத்தில் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். இடைவேளை காட்சி வேறலெவல் என்று சொல்லும் அளவுக்கு அவர் நடிப்பு பட்டையை கிளப்பியிருக்கிறது .
அவர் ஒரு புதிய உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார். இப்படியொரு இன்வெஸ்டிகேஷன் ஜானர் படம் சமீபத்தில் வந்ததே இல்லை. அந்த அளவுக்கு படம் புதுசாகவும், கடைசி வரை விறுவிறுப்பாகவும் இருந்தது. போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார் : ஒரு முழுமையான க்ரைம் திரில்லர் படம்.
நாயகன் எப்போதுமே ஒரு கடுகடுப்புடன் நடந்து கொள்கிறார். அவர் எதைச் செய்தாலும் அதில் சிறு கோபம் ஒன்று இருக்கும். யாரிடமும் கொஞ்சம் கூட கனிவாகப் பழகாத கதாபாத்திரத்தை தனது அனுபவத்தால் மேலும் சிறப்பாக்கி இருக்கிறார் விஷ்ணு விஷால் அதற்குக் காரணமாக அவரது மனைவிக்கும்,. விஷ்ணு விஷாலுக்கு்ம், நடக்கும் விவாகரத்து பஞ்சாயத்து , இன்னொரு பக்கம் டென்ஷன் ,என நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.
செல்வராகவனின் நோக்கத்தை முறியடிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு, ஓடுகிறார் நாயகன் . நாயகனும் புத்திசாலியானவன். ஆனால் தனக்கு இருக்கும் அவர் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் கொலைகாரன் கொடுக்கும் நெருக்கடி இது எல்லாம் தாண்டி எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பது புதிய யுக்தி,
செல்வராகவன்
அழகர் என்ற கதாபாத்திரத்தில் வரும் செல்வராகவன் ” தனக்கு இந்த உலகத்தில் ஒரு நோக்கமிருப்பதாக நம்புகிறார்.
அந்த நோக்கம் என்ன?
ஐந்து பேரை அவர் ஏன் கொலை செய்ய வேண்டும் , என்பது புரியாத புதிர்.
அதே நேரத்தில் அசாத்திய திறமைசாளியாகவும் இருக்கிறார். அவரின் ஒவ்வொரு நகர்வும் துல்லியமாக கணக்கிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன.
படத்திற்கு இந்த திரைக்கதை மிகவும் பலமானதாகவும் செல்வராகவனின் கதாபாத்திரத்தை உயர்த்தியும் காட்டி இருக்கிறது.
நம்பி என்ற கதாபாத்திரத்திற்கு தண்ணி காட்டுகிறார் வில்லனாக நடித்துள்ள செல்வராகன், அதுவும் திரையில் தோன்றி,படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படத்தின் முக்கிய வில்லனாக செல்வராகவன், நிறையவே பயமுறுத்தியிருக்கிறார்.
மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் பிரவீன் தான் எடுத்துக் கொண்டு கதை திரைக்கதையில் முழுக்க முழுக்க ஒரு கிரைம், திரில்லர் பாணியில், அதோடு சமுதாய விழிப்புணர்வு மிக்க கதையாகவும் தேர்வு செய்து படத்தை கொடுத்திருக்கிறார்
ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று விரியும் திரைக்கதை, யார் அந்த கொலைகாரன் என்று படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பும்,
இயக்குனருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
இவருக்கு உதவியாக திரைக்கதையில் இயக்குனர் மனு ஆனந்த் ,உதவி செய்திருக்கிறார். பாராட்டத்தக்கது.
ஜிப்ரான் பின்னணி இசை த்ரில்லிங்கான காட்சிகளுக்கு நிறையவே உயிரூட்டியிருக்கிறதுஇரவு நேரக் காட்சிகளிலும், மற்ற காட்சிகளிலும் ஒரு
விறுவிறுப்பான இசை தந்திருக்கிறார்.
த்ரில்லர் படத்திற்குரிய மிரட்டலான ஒளிப்பதிவைச்செய்திருக்கிறார் ஹரீஸ் கண்ணன்.
படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்,
படத்தொகுப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். பரபரப்பான விறுவிறுப்பான படத்தொகுப்பு.
சண்டை பயிற்சியில் அவ்வளவு விறுவிறுப்பு ,ஸ்டண்ட் சில்வா, மற்றும் ஸ்டண்ட் பிரபு இருவரும் அனல் தெறிக்க விட்டுள்ளனர்.
காஸ்ட்யூம் டிசைனராக , வினோத் சுந்தர், மற்றும் வர்ஷினி சங்கர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்.
மற்றும் இப்படத்திற்கு பணிபுரிந்த ஒப்பனையாளர் , காஸ்ட்யூமர் , டி ஐ ,கலர் கரெக்ஷன், செய்தவர்கள் உதவி இயக்குனர்கள், உதவி கேமராமன்கள் என, அனைவரின் உழைப்பும் இந்த வெற்றிப் படத்திற்கு பெரிதும் பலமாக அமைந்திருக்கிறது.
Produced by Vishnu Vishal Studioz
மக்கள் தொடர்பாளர் சதீஷ் & சிவா( AIM)
மொத்தத்தில் இந்த ஆர்யன்” திரைப்படம் இன்சியல் எழுத்துக்களை வைத்து, கொலை செய்யும் ஒரு கொலை குற்றவாளி, எழுதும் புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் குளுவாக வைத்து, கண்டுபிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி, அந்த கொலைக்கான காரணத்தை கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லும் பொழுது, படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு அதிர்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் படத்தை முடித்து இருப்பது. படத்தின் வெற்றிக்கு மிகவும் உதவி இருக்கிறது.
