டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கும்கி-2
கும்கி’ படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப்பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது.
அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் ‘கும்கி-2’ மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத கதையை தந்துள்ளார்
ஒரு மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்கும் அம்மா சிங்காரி(சூசன்) அவரின் காதலனாக பாபி, அப்பாவை இழந்து அம்மாவின் அன்பும் இல்லாமல் ஆதரவற்று வாழும் பூமி பள்ளியில் மாஸ்டராக இருக்கும் திருச்செல்வம் உதவியுடன் படித்து ஆளாகிறார் .அவர் சொல்லும் அறிவுரை கேட்டு காடுகளில் உள்ள மலர்கள், மரங்கள் ,நதிகள், பறவைகள் இதையெல்லாம் நேசிக்க தொடங்குகிறான். அப்பொழுதுதான் குட்டி யானை அன்பு கிடைக்கிறது. இருவரும் தோழர்கள் ஆகிறார்கள். குட்டி யானைக்கு நிலா என்று பெயர் சூட்டுகிறார். தெய்வீகமான அன்பு இருவரும் செலுத்தும் பொழுது கல்லூரிக்கு ஐந்து வருடம் படிக்கப் போகிறான் மதி, அப்பொழுது வளர்ந்து ஆளாகும் அந்த நிலாவை அவனது அம்மா பல லட்ச ரூபாய்க்கு விற்று விடுகிறார். கல்லூரி முடித்துவிட்டு வந்து தேடும் பொழுது தனது நிலா என்கிற யாணை குட்டியை காணவில்லை என்று வருந்துகிறார். அதை தேடி புறப்படுகிறார்! அதை கண்டறிந்தாரா? இல்லையா?
இந்த சூழ்நிலையில் தன்னுடைய அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இருக்க வேண்டும் எதிரிகள் அழிய வேண்டும் என்று யாகம் நடத்தி கஜபதி பூஜை செய்கிறார் . முதல்வர்.
அந்த பூஜைக்கு வளர்ந்து கும்கி யாக இருக்கும் வீராவை
அதை வளர்க்கும் செம்பட்டையிடம்
வாங்கி
பலி கொடுக்க துணிகிறார்கள். அதில் இருந்து நிலா என்கிற வீராவை நாயகன் பூமி காப்பாற்றினாரா? இல்லையா? என்பது கதைக்களம்.
ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்த படம், மனிதன்–இயற்கை–யானை இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது இந்த படம்
பூமிக்கும், யானைக்குமான பாசம்தான் படத்தின் மையக் கதை. இருந்தாலும் ஆக்ஷன் கதையாக மாற்றுவதற்காக அரசியல், கடத்தல் என சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள்அதுவும் விறுவிறுப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி, தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதியின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன
நிலா கிடைத்தவுடன் துள்ளி குதிப்பது,
பிரியும் போது அழுது துடிப்பது, அம்மாவிடம் சீறுவது என அசத்தியிருக்கிறார்.
பிரபு சாலமன் இதை ஒரு ‘கும்கியின் தொடர்ச்சிஇல்லைஎன்று விளம்பரப்படுத்தினார், கதைக்களத்தில் அமைக்கப்பட்ட புதிய முன்மாதிரி மற்றும் பாடல்களுக்காக, அழகாக படமாக்கப்பட்டுள்ளது. யானை நன்றாகப் பயன்படுத்தப்பட்டது, இது பாராட்டத்தக்கது மற்றும் குழுவினரின் கடுமையான கடின உழைப்புக்கு பாராட்டப்பட வேண்டும். கதாநாயகனின் இறுதி வசனங்கள் மிகவும் மனதைத் தொடும் வகையிலும், அற்புதமாகவும் இருந்தன,
எந்த சாமி பலி கேட்கிறது புண்ணியம் சேராது பாவம் தான் கிடைக்கும் என்று
இயக்குனர் பிரபு சாலமன் உணர்ச்சிப்பூர்வமான படம் . மற்றும் நேர்த்தியான படத்தை வழங்குவதில்
சிறந்த இயக்குனர் ஆவார்.
அவர் அயராத உழைப்பு பாராட்டத்தக்கது.
படம் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாய் எதையோ எதிர்ப்பார்க்க வைத்து இருக்கிறார் .. க்ளாமாக்ஸ் நெருங்கும்போதுகூடஏதாவது ஒரு அதிர்வை எதிர்நோக்குகிறது மனசு. மயங்கிநிற்கும்வீரா
கண் விழித்து அடித்து நொறுக்கும்அபாரமான கிளைமாக்ஸ் கைதட்டல் பெறுகிறது.
பிரபு சாலமனுக்கு இது அடுத்த ஹிட் படம் என்றே சொல்ல வேண்டும். படத்தின் துவக்க காட்சியிலேயே ரசிகனை படத்துடன் ஒன்றிப் போய்விட வைத்திடும் திரைக்கதை. படத்தின் க்ளைமேக்ஸ் வரைக்கும் தொடருகிறது.
படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
தொழில் நுட்பக் குழு:
பைசன்’ ஆடியோ வெற்றியைத் தொடர்ந்து நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக்குகிறது.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
காடுகள் ,மலைகள், அருவி ,பசுமையான பள்ளத்தாக்கு, என சுகுமாரின் கேமரா ஒவ்வொரு பிரேமிலும் அசத்தி இருக்கிறது.
யானைகள் இடம் பெறும் காட்சிகள், மூச்சு வாங்கும் அளவிற்கு அடர்த்தியான காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது.
எடிட்டிங் – புவன்
கச்சிதமாக இருக்கிறது.
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
ப்ரமோஷன் – சினிமா பையன்
PRO – யுவராஜ்
மொத்தத்தில் கும்கி 2
குழந்தைகளுக்கான படம் .மற்றும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் .
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.
