மாஸ்க்”திரை விமர்சனம் ரேட்டிங் 4/5

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “மாஸ்க்”
இப்படத்தில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சொக்கலிங்கமுடன் இணைந்து இப்படத்தை ஆண்ட்ரியா தயாரித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் மேற்பார்வையில் உருவாகியுள்ள இப்படம் மாபெரும் வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
விறுவிறுப்பான கதை களம், மற்றும்
பரபரப்பான சம்பவம் அடுத்து என்ன நடக்கும், என்று ஆவலை தூண்டும் வண்ணம் மாஸ்க்” திரைப்படம் வெளிவந்துள்ளது. இதன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

கதை களம்

கவின் (வேலு) தனியார் டிடெக்டிவ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இல்லீகளாக, தவறு செய்யும் தம்பதியர் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து பணம் சம்பாதிப்பதில் , “எத்திக்ஸ், ஆக இருக்கிறார். ஆனால் நல்லவராக, இருக்கிறார்.

இவருடைய அப்பா ராயப்பேட்டையில் ருசி மெஸ் ,நடத்தி வருகிறார். அங்கு தான் கவின் டீம் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை அன்னை தெரேசா வாக பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் போர்வையில் வலம் வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறார்
அங்கு பவன், பெண்கள் உடன் சில லீலைகளில் ஈடுபடுகிறார் ஆண்ட்ரியா அதையும் படம் பிடித்து வைத்துக் கொள்கிறார்.

கவின் மாமனார் சார்லி (சற்குணம்)

அவரது ஒர்க் ஷாப்பை சினிமாவுக்கு வாடகைக்கு விட கவின் சொல்ல சார்லி மறுக்கிறார்

கவின் தன் மனைவி கயல் உடன் பிரிந்து வாழ்கிறார்.

கவின் தன்னுடைய ஓட்டலுக்கு வரும் ரத்திஎன்கிற பெண்ணை விரும்புகிறார் ரத்தியும் விரும்புகிறார் . அவள் கணவர் வெளியே சென்று விட்டதால் வீட்டுக்கு வர சொல்கிறார். செல்லும் வழியில் பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் கவின் மாட்டிக்கொள்ள, பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவதற்கு தயார் நிலையில், இருக்கும் நிலையில், எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கூட்டம் பணத்தை திருடுகிறது.அவர்கள் யார் ?

டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் கவின் எப்படி இந்த வலையில் சிக்குகிறார்?! என்பதை இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவரில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். இடைவேளை காட்சியில் பணம் கொள்ளையடிக்கப்படும்காட்சியில் ,மற்றும் ஆண்ட்ரியாவிடம் கவின் வசமாக சிக்கிய காட்சி,ஆண்ட்ரியா பவனிடம் எப்படி சிக்கினார் ! என்பதை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கவின் அந்த மாஸ்க் அணிந்த முகமூடிதிருடர்களை கடைசி வரை அவர்கள் யார்? என்பதை, அந்த கூட்டம் எதற்காக இப்படிபல கோடி ரூபாய் கொள்ளையில் ஈடுபட்டது என்பதை கிளைமேக்ஸில் ரிவீல் ஆகும் இடம் என கடைசி வரை இயக்குநர் தான் சொல்ல வந்த கதையை கன்வின்சிங்காக சொல்லியிருக்கிறார். அந்த சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கொள்ளை சம்பவத்தில் கவின் சிக்கும் இடம் கனகச்சிதமாக பொருந்துகிறது.

கோலிவுட்டில் ஒரு மணி ஹெய்ஸ்ட் முயற்சியை மிடில் கிளாஸ் மக்களின் மனநிலையை மையப்படுத்தி படமாக்கிய விதம் மற்றும் கடைசி வரை என்ன நடக்கும் படம் எப்படி முடியும் யார் அந்த மாஸ்க் மேன் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தி படத்தை பக்கா என பாராட்ட வைக்கிறது.

ஆண்டி ரியா (பூமி)

நினைத்ததை சாதிக்கும் சகலகலா வல்லியாக, நிறைய சம்பாதித்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் ,என்று கனவோடு வாழும் பூமி….
இளம் பெண்களை பாதுகாக்கும் அன்னை தெரசா போல, ஆரம்பத்தில் காட்டப்படுகிறார். ஆண்ட்ரியாவின் இன்னொரு நீலம்பரி முகத்தை பார்க்கும் போதே பயம் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு கடைசி வரை பூமி கதாபாத்திரத்தில் நிலையாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் ஆண்ட்ரியா தனது பங்கை செலுத்தியுள்ள நிலையில், அவரது பேய்த்தனமான நடிப்பு நிச்சயம் படத்தை வெற்றிப் படமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை.
கவின் மகள் திவ்யாவை கடத்தும் போதும், சிறையில் வரப் பிரபலட்சுமி யாக இருந்து, அரசியல் வாதிமணிவண்ணனை டார்கேட் செய்யும் காட்சியிலும்,
பேட்டரியும், பூமியும் காருக்குள் பேசும் வசனம் ஆகட்டும், பேஸ் வாய்ஸ் ஆண்ட்ரியா அசத்தியிருக்கிறார். சரியான வில்லி என்பதை தன் நடிப்பில் மூலம் அசுரத்தனமாக நிரூபித்திருக்கிறார். கிட்ட வந்து பேசினா ஜாலியா “இருக்கு என்று சொல்லும் கவினிடம், அதே மாடுலேஷனில் பிற்பகுதியில் நான் கிட்ட வந்து பேசினா தாங்க மாட்டே” என்று சொல்லும் அந்த வில்லி தனம் சூப்பர்!

கவின் (வேலு)

படத்தின் ஆரம்பத்தில் கவினை அறிமுகப்படுத்தும் விதம், ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்கான இலக்கணங்களை மீறி நடித்து இருக்கிறார் கவின். காமெடி கலந்த, கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அந்த நடிப்பு அவருக்கு சூட் ஆகி இருக்கிறது. குறிப்பாக, வட இந்திய பெண் ருஹானிக்கும் அவருக்குமான நட்பு, எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பு. நானும் மோகன் மாதிரி என்று இருவரும் சொல்லும் அந்த சீனுக்கு தியேட்டரில் செம கைதட்டல். அதேபோல் ஆண்ட்ரியாவுடனான மோதல் சீன்களிலும் கவின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது. வழக்கமான காதல், கல்யாணம் இல்லாமல் கதை நகர்த்தியிருப்பதும், கவினை திருமணம் ஆனவராக, குழந்தைக்கு அப்பாவாக காண்பித்து இருப்பதும் ரசிக்க வைக்கிறது.

இடைவேளையில் சூப்பர் மார்க்கெட்டில்
மாட்டிக் கொண்டு விழிப்பது,
ஆண்டி ரியா விடம் ஜொள்ளு விடுவது,
440 கோடி 66 பேரிடம் இருக்கிறது .
என்பதை கண்டுபிடிக்க தன்னிடம் உள்ள ஆறரை கோடி ரூபாயை வைத்து குளு கண்டுபிடிப்பது ,
என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

சார்லி ,இந்த படத்தில் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார் நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஒரு கதாபாத்திரம் கவின் மாமனாராக வந்து கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் இவர் ஆண்ட்ரியாவிடம் அதகளம் பண்ணும்
காட்சி வரை இவர் நடிப்பு மிக நன்றாக இருந்தது.

அ.இ.த.த.கட்சியை
சேர்ந்த அரசியல்வாதியாக நடிகர் பவன் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் பெண்களுடன் குத்தாட்டம் போடும் காட்சியிலும், ஆண்டிரியாவிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் காட்சிகளும், இவரின் அரசியல் வில்லத்தனம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

கல்லூரி வினோத் கவின் நண்பனாக, போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இக்கட்டான டைமில் கவினுக்கு உதவி செய்யும் அந்த கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

பிக் பாஸ் அர்ச்சனாவும் நடிகர் பத்மனும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள் கணவன் செய்யக்கூடாது என்று சொல்லியும் பிக் பாஸ் அர்ச்சனா
திருடிய பணத்தை வெளியே எடுத்து மாட்டிக்கொள்வது அழுவது என நன்றாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா சில காட்சிகளே வந்தாலும் கவின் அப்பாவிடம் கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

வட இந்திய நடிகை ருஹானி சர்மா
சிறப்பாக நடித்திருக்கிறார்.
நானும் மோகன் மாதிரி தான் என்று சொல்லி நழுவும் காட்சி, கணவனிடம்
மாட்டிக்கொண்டு விழிப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றும்
ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், , உள்ளிட்ட
என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர்
விகர்ணன் அசோகன்
சிறப்பாக கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார்.
கவின் ஒரு மாமூல் ஹீரோவாக காட்டாமல்,
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் வில்லத்தனம், நிறைய நல்லவன் என்று காட்டியிருப்பதில் இயக்குனர் வித்தியாசப்படுகிறார்.
கவின் மனைவி யார்? என்று கடைசி வரை கயல் கதாபாத்திரத்தை காட்டாமல் இருந்தது புதுமை.
இறுதி கிளைமேக்ஸ் போர்ஷன் என ஏகப்பட்ட ஹை மொமண்ட்ஸை கச்சிதமாக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார்.
மிடில் கிளாஸ் மக்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை திரை கதையில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .
கோலிவுட்டில் ஒரு மணி ஹெய்ஸ்ட் முயற்சியை மிடில் கிளாஸ் காமன் மேன் மக்களின் மனநிலையை மையப்படுத்தி படமாக்கிய விதம் மற்றும் கடைசி வரை என்ன நடக்கும், படம் எப்படி முடியும் ?யார் அந்த மாஸ்க் மேன்? என்கிற ஆர்வம் படத்தை பக்கா என பாராட்ட வைக்கிறது.

இசை அமைப்பாளர்

ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் படத்துக்கு பெரிய பலமாக இருந்துள்ளார்.
பின்னணி இசை மிக மிரட்டலாக இருக்கிறது. பாடல்களும் ரசிக்க வைக்கிறது.
கண்ணுமுளி பாடலும்,
இரவினில்
ஆட்டம் ரீமீக்ஸ்பாடலும் சூப்பர்

ஆர்.டி .ராஜசேகர் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. ஆண்ட்ரியா வீடு, மற்றும் சிறைச்சாலை, கவின் நடத்தும் ஓட்டல், என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.
கலர் கரெக்ஷன் உடன் சேர்ந்து,கேமரா சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. .

ஆர் ராமன் படத்தொகுப்பாளராக, மிக வேகமாக சார்பாக படத்தை செதுக்கி இருக்கிறார். படம் விறுவிறுப்பாக, பரபரப்பாக, செல்வதற்கு
பட த்தொகுப்பாளரின் பங்கு அதிகம் .

ஆர்ட் டைரக்டராக விஜய் ஐயப்பன், பணி புரிந்திருக்கிறார். இரவினில் ஆட்டம் ரீமிக்ஸ் பாடலுக்கு போட்ட செட்டும், மற்றும் கவின் வீடு, ஆண்டிரியா வீடு, பவன் அரசியல் கட்சி அலுவலகம். என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் அற்புதமாக பணி புரிந்திருக்கிறார்.

மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த ஒப்பனையாளர், காஸ்ட்யூமர், அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது அவர்கள்.
பாராஸ் அகமது அவர்கள்.

மொத்தத்தில் இந்த “மாஸ்க்” சொல்லும் சேதி,நாலு பேருக்கு நல்லதுன்னா ஒரு கெட்டது செஞ்சாலும் தப்பு இல்லை என்கிற டயலாக்குகேற்ப, 66 குடும்பங்கள் பிழைப்பதற்காக கவின் நடத்தும் அந்த யுத்தத்தில், ஆண்ட்ரியாவை எப்படி ஜெயித்தார்? என்ற திரைக்கதையில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் மேற்பார்வையில் படம் ஜெயித்திருக்கிறது.

தரமான நல்ல படத்தை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், இதில் நடித்த நடிகர், நடிகர்களுக்கும்,
தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்🌷