நிறுவனம் -Sony Pictures 2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்! தப்பித்து விடுகிறார்!
இனி , இரண்டாம் பாகம் பற்றி …
ஹாலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஜான் விக் போல் ஒரு வயதான தாத்தா இருந்தால் எப்படியிருக்கும் என்ற அதிரடி ஆக்ஷன் களத்தில் வெளிவந்துள்ள சிசு படத்தின் இரண்டாம் பாகம் Sisu: Road to Revenge எப்படி என்பதை பார்ப்போம்.
கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி!
அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்!
அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!
2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!
இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன!
திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்!
இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது
நாயகன் ஜோர்மா இந்த வயதிலும் அவர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் அடி தூள் தான், நாயகன் குடும்பத்தை கொன்றதோடு அவரையும் கொல்லை வரும் வில்லன் நடிகர் ஸ்டிபன் லாங் அவர் பங்கிற்கு மிரட்டியுள்ளார்.
ஊருக்கு தன் வீட்டு மரக்கட்டைகளை நாயகன் ஜோர்மா கொண்டு செல்லும் போது வில்லன் ஸ்டீபன் கட்டையை போடுகிறார், அங்கு தொடங்குகிறது ஆக்ஷன்.
முதல் ஆக்ஷன் கார் துரத்துகிறது, பிறகு பைக் துரத்துகிறது, அதை தொடர்ந்து ப்ளைட் துரத்துகிறது, இதெல்லாம் முடிந்து இனி என்ன என்று பார்த்தால் ட்ரெயினில் வைத்துள்ளார்கள் பாருங்க ஒரு ஆக்ஷன், படம் முழுவதும் வித்தியாச வித்தியாசமாக எப்படி கொல்வது, உடல்கள் சிதறுவது 200 லிட்டர் இரத்தத்தை கொட்டுவது என இயக்குனர் இதற்காகவே கற்பனை குதிரையை பறக்கவிட்டுள்ளார்
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம், அதோடு அடித்தொண்டையில் கத்தும் அந்த BGM மிரட்டல், சிஜி ஒர்க், ஸ்டெண்ட் எல்லாமே டாப் க்ளாஸ் தான்.
Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் . 2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே! Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். Mika Orasmaa – ஒளிப்பதிவாளர் மிரட்டி உள்ளார்.
மொத்தத்தில் இந்த சிசு 2 அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது
