ஒண்டி முனியும் நல்ல பாடனும்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

கதை களம்

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ரத்தம் தெறிக்க கொலை கொள்ளைகள் படங்கள் மத்தியில் இயக்குனர் சுகவனம் தரமாக இயக்கிஇருக்கும் படம் தான்

“ஒண்டி முனியும் நல்ல பாடனும்”

இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல ஒரு சமூக நீதியை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

“வெட்டப்பட வேண்டியது கிடாய்களை அல்ல” கெட்ட குணம் கொண்ட கெட்ட மனிதர்களைத்தான்”

என்று அதிகார வர்க்கத்திற்கு ஓங்கி ஒரு மணி அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் சார் 🌷

இதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையும் இந்த ஒற்றைப் படத்தில் மூலம் மீறி இருக்கிறார்.

கடவுளுக்காக வேண்டப்படும் கிடாய்கள், தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்த சாமியிடம் வேண்டாதா? என்ற அந்த சிறுவனின் கேள்வி எவ்வளவு பெரிய தத்துவ ஞானியாக கேட்கிறார். அந்த ஒற்றை வார்த்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் வாங்கிய பட்டமா ?என்று கேட்ட அந்த சிறுவனை ஞாபகப்படுத்துகிறது. அற்புதம் அற்புதம்.

ஒரு பவுன் நகைக்காக மனைவியை அப்பா வீட்டுக்கு அனுப்பும் குடிகார கணவன். கல்லூரியில் ஒன்றாக படிக்கும் இளைஞர்கள் சுயநலம் வந்தவுடன் நீ மேல் ஜாதி பெண்ணை விரும்புவாயா? என்று அடித்து உதைப்பது ,

பஞ்சமி நிலங்களை தலித் மக்கள் எப்படி ஆதிக்க வர்க்கத்திடம் இழந்தார்கள் என்பதை சொல்லும் அந்த கதைக்களம் .

இரண்டு பொண்டாட்டிகளும் எப்படி அதிகார வர்க்கத்தின் மனைவிகளாக வெளியே புலியாக தெரியும் கணவன்மார்களை பூனையாக வைத்திருக்கிறார்கள் என்பதையும் பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் காலம் கடந்து எல்லோரும் ரசிக்கப்படுகிறது
என்பதை இந்த படம் நிரூபித்து இருக்கிறது.
கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
அதுதான் படத்தை இமய மலை அளவு தூக்கி நிறுத்தி இருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை,
கடைசி விவசாயி,
திரைப்படங்களின் வரிசையில்
எளிய மக்களின் வலியை உணர்த்தும் வகையில்
யதார்த்தமான சிறந்த படைப்பாக
படமாக்க பட்டுள்ளது.

யதார்த்தமான கதை
சிறந்த திரைக்கதை
வலிமையான வசனம்
நேர்த்தியான இயக்கம்
உயிரூட்டும் இசை
யதார்த்தமான நடிகர்கள் தேர்வு
என ஒட்டு மொத்தமாக
மனதை ஆட்கொள்கிறது !!

சமூக சீர்கேட்டை உருவாக்கும்
திரைப்படங்களுக்கு மத்தியில் …

சமூக சிந்தனையை தூண்டுகிறது
இந்த படைப்பு !!!

இயக்குனர் சுகவனம்

இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா என்ற பன்முக திறமையாளராக ஜொலிக்கிறார் சுகவனம்
தேவையற்ற சண்டை காட்சிகள் படு அபத்தமான காதல் நகைச்சுவை என்ற பெயரில் சினிமா போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

முக்கிய அம்சங்கள்: கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் உழைப்புச் சுரண்டல், மக்களின் வாழ்வு முறை மற்றும் நல்லபாடனின் போராட்டம் போன்றவற்றை இப்படம் காட்சிப்படுத்திய விதம் அருமை!!
யதார்த்தமான அணுகுமுறையுடன், எளிய மக்களின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தை கொடுத்து இருக்கிறார்.
படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வை அளிக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

பரோட்டா முருகேசன்

நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களை
கண் முன் நிறுத்தியிருக்கிறார்
புரோட்டா முருகேசன் இவர் ஆர். எஸ் மனோகர் நாடக பட்டைறைலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால்தான் நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார்.

ஒண்டி முனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை,நல்லபாடனின் போராட்டம் இவைகளை பரோட்டா முருகேசன் வெகு நுட்பமான நடிப்பு மூலம் நம்மை தலைமுறை கடந்தும் ரசிக்க வைக்கிறார். அழகான வசனத்தை பேசுகிறார் .கோபம் பாசம் வெறுப்பு, இயலாமை, எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை தொட்டு இருக்கிறார் . துரோகம், அவமானம், வெளி வேதனையை கதாபாத்திரங்களில்
கொடுத்துள்ளார்
ஆட்டுக்கிடாயை காணவில்லை, என்று தேடும் பொழுது,
மகனும் மருமகனும் அடித்துக் கொள்ளும் பொழுது,
மகள் மீது பாசத்தைக் காட்டி பேரனுடன் அன்பைப் பொழியும் பொழுது,
பன்னாடிகள் இருவரும் மாறி மாறி அலைக்கழிக்கும் பொழுது,
ஊரின் அவ சொல்லுக்கு பயந்து கடைசியில் தூக்குக் கயிறு தேடும் பொழுதும்,
கசாப்பு கடைக்காரர் இடம் காலில் விழுந்து கெஞ்சும் பொழுதும்
வெள்ளந்தியாக பன்னாடிகள் இருவரும் வாங்கும் வேலையை செய்யும் பொழுதும் ,
மனதில் இடம் பிடிக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தின் மீது அனுதாபத்தை வாங்கிக் கொள்கிறார்.

படம் பார்ப்பவர்கள் எப்படியாவது ஒண்டி முனிக்கு இவர்
கிடாயை நேர்ந்து தன் காணிக்கையை செலுத்தி விட மாட்டாரா? என்று ஏங்க வைக்கிறது ஜெயித்திருக்கிறார் பரோட்டா முருகேசன்.
விருது கிடைக்கும்.

மற்றும் விஜயன் வேலன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கார்த்திகேசன்
பெரிய பண்ணாடியாக ,கந்து வசூல் செய்து ஏழைகளின் உழைப்பை சுரண்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.

முருகன் சின்னப்பன்னாடியாக, மனைவியிடம் டபுள் மீனிங் திட்டுகளை வாங்கிக் கொண்டு கலகலப்பை ஏற்படுத்துகிறார்.

சித்ரா தங்கம் என்ற கதாபாத்திரம் பொருந்தி இருக்கிறார்.

விஜய் சேனாதிபதி
குடிகார கணவன் வேடத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்

ஊரின் பெரியவர்கள் இயல்பான நடைமுறைகளையும்
தந்து ரசிக்க வைக்கிறார்கள்

பண்ணாடியின் மனைவி “நைட்ல குப்புற படுத்துக்குவ பகல்ல மல்லாந்து படுத்துக்கோ” ஒரு வேலையும் செய்ய மாட்டேஎன்று கிண்டல் அடிக்கும் பொழுது தியேட்டரே கை தட்டுகிறது.

மற்றும் கௌசிகா, விகடன் ,மாஸ்டர் தமிழினியன், என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் கேமரா மேன் சுகுமார் அசிஸ்டன்ட்
அதனால் தான் என்னவோ படம் முழுக்க கேமரா கண்ணில் ஒத்தி கொள்ளத் தோன்றும் அளவுக்கு காட்சிகளை பிரமாதப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம்.

மூடர் கூடம் படத்துக்கு இசையமைத்த
நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். காட்சிகளுக்கு உயிர் ஊட்டி இருக்கிறது இசை.

சதீஷ் குருஷோ வின் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது. படம் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையவில்லை.

நவீன் ராகவேந்திராவின்
வி .எப் .எக்ஸ்
காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.

ஆண்டனியின்
ஆர்ட் டைரக்டர் பணி
அருமையாக இருக்கிறது. ஒண்டி முனி சிலையை வடிவமைத்த விதம் ஆரம்ப காலத்தில் வரும் கோயில் காட்சி
என சிறப்பான ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.

மாஸ் மோகன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.
Sound Design: Hari Prasad
Colorist: Karthik
Effects: Sekar
DI: Sara Studio
Stills: Theni Seenu
Publicity Designer: Kambam Sankar
இவர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல தரமான வெற்றி படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் .படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

உலக சினிமா வரிசையில், கொண்டாடப்பட வேண்டிய படமாக வந்திருக்கிறது “ஒண்டி முனியும் நல்ல பாடனும்”

இந்த படத்தை “திருமலை தயாரிப்பு”
நிறுவனத்தின் தயாரிப்பாளர்
திரு.கருப்புச்சாமி அவர்களும்,
இணை தயாரிப்பாளராக
திரு.அமராவதி அவர்களும்,
இணைந்து தயாரித்திருக்கிறார் கள்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நல்ல படைப்பு ,நல்ல உழைப்பு ,மக்கள் கொண்டாட வேண்டும் என்பது நமது எண்ணம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏