ZEE5 யின் அதிரடி படைப்பு, “ரேகை”இது ஒரு கிரைம் திரில்லராக வந்துள்ளது.
இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’, !
இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார்.
ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ .
இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.
கதை களம்
அமுதன் கொலை வழக்கில்
S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) விசாரிக்க துவங்க அது, மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.
ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.
அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
முடிவில் எதிர் பாராத அதிர்ச்சி கொலைகாரன் யார்?
எதற்காக இப்படிபல சம்பவம் நடக்கிறது.
அதை எல்லாம் முறியடித்து வெற்றி கண்டாரா? வெற்றி!!
,மார்ச்சு வரியில் நடக்கும் சில முறைகேடுகள்
தெரிய வருகிறது. அதற்கு காரணமானவர்களை ஹீரோ தேடும்போது மெடிக்கல் கிரைம் தெரிய வருகிறது. அதை தீவிரமாக விசாரிக்கும்போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. பல திருப்பங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட மெடிக்கல் முறைகேடுகள் நடக்குமா ?என்று பதறும் ஹீரோ வெற்றி, அதற்கு காரணமான வில்லனை தேடுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்ற விறுவிறு திரைக்கதையில், இதுவரை யாரும் சொல்லாத, ஒரு விஷயத்தை கையில் எடுத்து ஒரு சமூக பிரச்னையையும் பேசியிருக்கிறார் இயக்குனர் தினகரன்.
போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.பாலஹாசன்” விசாரணை காட்சிகளில் கோபம் காண்பிக்கிறார். வில்லனை கண்டுபிடிக்கும் காட்சிகளில், துடிப்புடன் செயல்படுகிறார்
கிளைமாக்சில்
சதியைமுறியடிக்க ஆர்வம் காண்பிக்கிறார். சில இடங்களில் திணறவும் செய்கிறார். சந்தியாவாக வரும் பவித்ரா அந்த கேரக்டராக மாறி இயல்பாக நடித்து இருக்கிறார். ஒரு திருமண காட்சியில் அழகாகவும் இருக்கிறார். இவர்களை தவிர, இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் அருண் ஆகியோரின் நடிப்பும் ஓகே. வினோதினி யின் உண்மை முகம் திடுக்கிட வைக்கிறது.
கிளைமாக்ஸ் ஓகே சண்டை செம.
அமுதன், ஜோசப்,
மணி, முகில் இந்த நான்கு பேருக்கும் ஒரு ஒற்றுமை
வேலை இன்மை, கடன் பிரச்சினை
இந்த ரேகை யில்முக்கிய பங்கு வகிக்கிறது.
தெளிவான திரைக்கதை ,
நேர்த்தியான இயக்கம் .
என பரபரப்பான விறுவிறுப்பான திரைக்கதை ,வசனம் ரசிக்க வைக்கிறது.
வில்லியாக நடித்த அஞ்சலி ராவ் மிரட்டுகிறார்.
வினோதினி புஸ்ப வல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார்
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர்
இயக்குனர் தினகரன் செல்வராகவன் பட்டறையில் இருந்து வந்தவர்.
நேர்த்தியான இயக்கம்
ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் கதையை எப்படி கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று வித்தை தெரிந்த
இயக்குனர்.
முத்து நாயகியின் காஸ்ட்யூம் நன்றாக இருக்கிறது.
Z5சவுத் ஹெட்
கௌசிக் மற்றும்
எக்ஸ்க்யூடிவ் புரொடியுசர்:முருகன்
வெற்றிக்கு உதவியிருக்கிறார் கள் .
ஒளிப்பதிவு
ஹென்றி செம ஹார்டுஒர்க்.
ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம்.
துரை பிரகாஷ் : படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
மிகவும் நேர்த்தியான முறையில் கொண்டு சென்று இருந்தார்
செம விறுவிறுப்பாக இருந்தது.
சரவணன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்
குற்றாலம் போலீஸ் ஸ்டேஷன், மார்ச்சுவரி,என கலக்கி இருக்கிறார்.
.
இந்த வெப் சீரிஸை
மதில், செருப்புகள் ஜாக்கிரதை போன்ற வெப் சீரியஸ்களை தயாரித்த சிங்கார வேலன்
தயாரித்துள்ளார் அவருக்கு இந்த “ரேகை சீரியஸ் வெற்றி தேடித் தரும்.
ராஜேஷ் குமார் 1969 லிருந்து 59வருடமாக
கதை எழுதி கொண்டு இருக்கிறார்.
அவருக்கு இது வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்.
மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா (AIM)
மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🌷🙏
