“‘உள்ளடக்கம் வலுவாக இருந்தால், திரைப்படங்கள் இயல்பாகவே மொழிகளைக் கடந்து செல்லும்'” .
என்று சினிமாவில் ஒரு வார்த்தை உண்டு!!
அத்திப்பூத்தது” போல், எப்போதாவது ஒரு படம் வந்து, அப்படியே உலுக்கியெடுத்து
விடும். ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகம் அந்தப்படத்தைக் கொண்டாடித் தீர்க்கும். ரசிகர்கள், சிலாகித்து சிலிர்ப்பார்கள்.. அநேகமாக”அது” போன்ற படம் தான்.
“அங்கம்மாள்”
பெருமாள் முருகன் எழுதிய கோடிதுணி
நாவலில் இருந்து உருவானவர் தான் “அங்கம்மாள்”
ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.
*கதை களம்*
“‘அங்கம்மாள்’ அவளுடைய மகன் இருவருக்கும் இடையில் ஒரு ரவிக்கை வருகிறது” .
அதை அழகான முறையில் பிரசன்ட் தந்துள்ளார்”கீதா கைலாசம் ”
இந்த நல்ல படைப்பில்
படத்தில் மொத்தம் ஆறு கதாபாத்திரங்கள். ஆறு பேரும் முத்தாய்ப்பாக தங்கள் பங்கை பங்களித்திருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தின் விதவிதமான மனிதர்களோடு, முக்கியமான அங்கம்மாள்” என்கிற தாயின் கதை. இங்கே ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும் ஒரு கதைதான். அவற்றை சினிமாவாக எடுத்துள்ளார்கள்.
ஒரு படம்
, நமக்குள் ஒரு மாற்றம் நிகழ்த்தணும். அப்படி மாற்றம் தரும் படம்…” அங்கம்மாள் ”
மிகவும் எதார்த்தமாக எடுக்க பட்டுள்ள இப்படத்தில்
பூக்களில் நாற்கோற்பது போல நாசுக்காக சில விஷயங்களை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
கிராமத்து மனிதர்கள் பேசும் சில கெட்ட வார்த்தைகள் உள்பட.
புழுதி வாய்ந்த பூமி,
பனை மரக்காடு, ஒரு கிராமம் அதை சுத்தி சுத்தி எடுக்க பட்டுள்ளது.
சுருட்டு பிடிப்பது, நகரத்தின் தாக்கத்தில் மகனும் கிராமத்தின் ஐதீகத்துல அம்மாவும் முரண் பட அதற்குள் ஈகோ … நாவலில் உள்ள
,அம்மா கதாபாத்திரத்தை விரிவாக்கி, அம்மா- மகனுக்கான உறவை இன்னும் ஆழமா சொல்லியிருக்காங்கஒரு காதலையும் சேர்த்திருக்காங்க. கதை களத்தை திருநெல்வேலி பத்மநேரியில்நடப்பதுபோல. திருநெல்வேலி பேச்சு வழக்குல
எடுக்க பட்டுள்ளது..
ஒரு சின்ன கிராமம். கிராமத்தின் நாலு தெருக்கள். ஆறு. ஆற்றங்கரை. மொத்த படத்தையும்
எடுத்தது… பாராட்டுக்கள்.
அங்கம்மாள் கதாபாத்திரத்தில்
மருமகள் மீது ஈகோ, எரிச்சல் ,சுருட்டு பிடித்த படி,கெட்ட வார்த்தை பேசுவது,
மகன்கள் மீது பிடிவாதம் பிடிப்பது
என கிராமத்து அம்மாக்கள் இப்படி தான் இருப்பார்கள் எஎன்பதை உறுதி செய்கிறது.. பிரபலமான நடிகர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக இருக்கிறது இந்தப் படம். பெரும் பொருட்செலவில் மக்களுக்குத் தொடர்பில்லாத எத்தனையோ கதைகளை திரையில் பார்த்திருக்கிறோம். இதுவொரு தனித்துவமான படம் என்று மனதாரப் பாராட்டலாம்.
இயற்கைக் காட்சிகளுக்காக ஊர் சுற்றவில்லை. உள்ளூர்களையே காட்டுகிறார்கள். சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லை.
ஒரு. கமர்ஷியல் நோக்கமின்றி உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். அசல் தமிழ் கிராமத்து வாழ்க்கையை நீங்களே நேரில் பார்ப்பதுபோல இருக்கும்.ரசிக்க நிறைய காட்சிகள் இருக்கிறது.
: இளம் வயதில் உருவாகும் காதல், அதில் ஏற்படும் பிரச்னைகள், வில்லன்கள், க்ளைமாக்ஸ் தீர்வுகள் போன்றவற்றைப் பற்றி தமிழ் சினிமா திகட்டத் திகட்ட நிறையப் பேசியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரதான கச்சாப் பொருளே காதல்தான். ஆனால் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆசாமிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கும் இடையில் உருவாகிற களங்கமற்ற நேசத்தைப் பற்றி தமிழ் சினிமா அதுவரை பேசியதில்லை. பழைய மரபுகளை உடைக்கும் வழக்க மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாபெரும் படைப்பாளியின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையுணர்ச்சி இது. நம் பாசத்திற்குரிய இந்த அங்கம்மாள்
தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதையும் இந்தக் கதை பேசுகிறது. பாரம்பரியமும் அசைக்க முடியாத சுயமரியாதையும் கொண்ட பெண்கள் மற்றும் அவர்களின் பெருமை ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் கதை கொண்டாடப்பட வேண்டிய கதை.
*நடிகர்& நடிகைகள்*
கீதா கைலாசம்
அங்கம்மாவாக அற்புதமாக நடித்திருக்கிறார் .
இயல்பான நடிப்பு தன் கணவன் இறந்த பிறகு 30 வருடங்களாக பிறகும் போராடி, உழைத்து, இரண்டு மகன்களை காப்பாற்றி ,அந்த ஊருக்குள்ளே ஒரு கெத்தாக வரும் அங்கம்மா ,வீரத்தில் மங்கம்மா வாகவும் தெரிகிறார்.
அதே சமயம் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் தங்கம்மாவாக வருகிறார்.பழைய
காதலனை மறக்க முடியாமல் இருப்பது .
பேச்சி கணவன் குடித்துவிட்டு தினமும் தவறு செய்தான் என்று அருவாமணையை வைத்து கதையை முடிப்பது.
தன் பேத்தி மஞ்சுவுக்கு உச்சி காத்தும் உச்சாணிப்பூ கதையை சொல்வது
மருமகள் எதை சொன்னாலும் அதற்கு ஏட்டிக்கு போட்டு பேசுவது,
என
வாழ்ந்திருக்கிறார்.
சரண் சக்தி,
மருத்துவம் பயின்ற பவளம் என்ற கதாபாத்திரத்தில் ஜாஸ்மினை காதலித்து ,
அவரின் அப்பா அம்மா ஏதாவது சொல்வார்களே என்று தன் அம்மாவை ஜாக்கெட்அணிய, வற்புறுத்துவது அண்ணனிடம் அண்ணியிடம் கெஞ்சுவது, இப்படி இயல்பான அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்,
நாடோடிகள் புகழ் பரணி,
இவர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டே இருப்பது அம்மாவிடம் அமைதியாக இருப்பது, மனைவியிடம் அமைதியாக இருப்பது, கிளைமாக்ஸ் காட்சியில்பொங்கி எழுந்து ,ஒரே சிங்கிள் ஷாட்டில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் கதாபாத்திரம் பேசப்படும் கதாபாத்திரம்.
தென்றல் ரகுநாதன்
மருமகள் ஆக வந்து இயல்பான கிராமத்து மருமகளாக சிறப்பாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் கட்சியில் மாமியாரிடம் பொங்கிஎழும் காட்சி சிறப்பாக இருக்கிறது. மற்றும் முல்லையரசி,
வினோத் ஆனந்த் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அங்கம்மாவின் பேத்தியாக வரும் மஞ்சு என்ற கதை பாத்திரத்தில் எடுத்திருக்கும் குழந்தை சிறப்பாக நடித்திருக்கிறது.
*தொழில்நுட்பக்குழு* :
விபின் ராதாகிருஷ்ணன்,
திரை கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் .
ஒரு வித்தியாசமான கதையை பெருமாள் முருகனிடம் “கோடி துணி” நாவலை வாங்கி அதை திருநெல்வேலி மக்கள் கதைக்களமாக மாற்றி ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். வாழ்வில் சார்ந்த மனதிற்கு நெருக்கமான படங்கள் பேசப்படும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஷாட் டிலும் கலைநயத்துடன் இயக்கியிருக்கிறார்.
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
புழுதி காற்றும், பசுமையான மலை அழகும் ,
இயற்கையான இரவு காட்சிகளும், பரணி நாதஸ்வரம் ஊதும் பொழுது வீசும் காற்றின் அலையாடும் மின்சார விளக்கும் ,
அங்கம்மாள் பயணிக்கும் மொப்பாட்டின் வழித்தடமும், ஊர் மக்களின் இயல்பான காட்சிகளும் ஒளிப்பதிவாளருக்கு ஜே. போட வைக்கிறது.
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்
உச்சி காத்தே பாடல் ரசிக்க வைக்கிறது, பின்னணி இசை உருக வைக்கிறது
படத்தொகுப்பு
பிரதீப் சங்கர்
கச்சிதமாக இருக்கிறது.
ஆர்ட் டைரக்டராக கோபி கருணாநிதி
பணி புரிந்திருக்கிறார் .
வீடு, மற்றும் நாதஸ்வரம் ஊதும் இடம் எல்லா இடங்களும் அருமையாக இருக்கிறது.
Movie Credits:
Stone Bench Films presents
Angammal
In association with Njoy Films & Firo Movie Station
Co-Producers: Shamsudeen Khalid, Anu Abraham
Executive Producers: Ashand Raju, Keerthi Nebu
Production Manager: Praveen Vamarajan
Co-Director: G. M. Pandeeshwaraa
Associate Director: P. Ananthan
Sound Mixing:
[30/11Executive Producers: Ashand Raju, Keerthi Nebu
Production Manager: Praveen Vamarajan
Co-Director: G. M. Pandeeshwaraa
Associate Director: P
Production Sound Mixer & Sound Design: Lenin Valapad
Dialogues: Sudahar Das, Vipin Radhakrishnan
Costume Design: Dhanya Balakrishnan
மக்கள் தொடர்பாளர்கள்
திரு. சுரேஷ் சந்திரா அவர்கள்.
திரு. அப்துல் நாசர் அவர்கள்.
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில் அங்கம்மாள்” தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி பூ🌷
