சாக்ஷி அகர்வால் நடித்துள்ள திரைப்படம் ‘சாரா’ , விஜய் விஷ்வா, மற்றும் சாக்ஷி அகர்வால் இணைந்து நடிக்கும் ஒரு அம்மா, மகன் கலந்த திரில்லர் படமாகும்
.இந்த படத்தில்
யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கதாபாத்திரங்கள்: விஜய் விஷ்வா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு: இந்த திரைப்படம் செப்டம்பர் 2023 இல் பூஜையுடன் தொடங்கிய இப்படம்
2025 டிசம்பரில் வெளியாகிறது.
இரண்டு வருட காலம் இந்த படத்திற்காக கடுமையாக போராடி தயாரித்து, இயக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
நாயகி சாக்ஷி அகர்வால்,நாயகன் விஜய் விஸ்வாவும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் பொறியாளராக பணிபுரிகிறார்கள். ஐந்து வருடங்களாக காதலித்து வரும் இருவரின்திருமணம்
நடக்க விருக்கும் சூழலில்….
திருமணத்துக்கு நாயகி அப்பா பொன்வண்ணன் பத்திரிக்கை அழைப்பெல்லாம் செய்து வருகிறார்.
சாக்ஸி அகர்வால், விஜய் விஸ்வா,
இருவரும் பணி புரியும் கம்பெனியின் கட்டிட வேலை நடந்து வருகிறது அங்கு
தண்ணீர் வண்டி ராஜிவாக ரோபோ சங்கர், இன்னொருவர் டுமில் பாபுவாக யோகி பாபு, இன்னொருவர் பழைய ஜோக் தங்கதுரை, இன்னொருவர் கொத்தனார் வேலை செய்யும் செல்லக்குட்டி இந்த நால்வரும் தான் கதையின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த நால்வரில் செல்ல குட்டி யார்?
இவர் கொத்தனாராக வேலை செய்து கொண்டு அங்கு இருக்கும் பெண்களை கலாய்த்துக்கொண்டு யோகிபாபு, தங்கதுரையிடம் காமெடி செய்து கொண்டு என்ன செய்கிறார்? என்பதற்கு இடைவேளைக்கு பிறகு சரியான ஒரு பிளாஷ்பேக் காட்சி வைத்திருக்கிறார். அது படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
அந்த பிளாஷ்பேக் காட்சி படத்திற்கு பலம்..
அந்த அம்மா மகன், சென்டிமென்ட் படத்தை தூக்கி நிறுத்துகிறது!! ரசிகர்களுக்கு ஒரு நல்ல படம் பார்த்தோம். என்ற திருப்தியை ஏற்படுத்துகிறது!!
இடைவேளைக்குப் பிறகு விரியும் கதையில் செல்ல குட்டியும் , சாக்ஷி அகர்வால், பள்ளி தோழர்கள் ஒரு இக்கட்டான சூழலில் சாட்சிக்காக செல்லக்குட்டி பரீட்சை எழுதி பாஸ் பண்ண வைக்கிறார். அப்பொழுது ரோட்டில் மயங்கி விழுந்த அம்பிகாவை அதாவது செல்ல குட்டியின் அம்மாவை சாரா, காப்பாற்றுகிறார் சாராவாக வந்து அம்பிகா மனதில் இடம் பிடிக்கிறார். அம்பிகாவுக்கு திடீரென்று வாதம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது சாரா வந்தால் தான் பிழைப்பேன் என்று மகன் செல்லக் குட்டி இடம் சொல்ல, சாராவை தேடி வருகிறார் செல்ல குட்டி .அங்கு சாராவுக்கும், மகேசுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு நாள்தான் என்ற செய்தியை அறிந்து செல்ல குட்டி எப்படி சாராவை தன் தாயான அம்பிகாவிடம் அழைத்துச் செல்வது என்று புலம்புகிறார். அதற்கு பிறகு அவர் எடுக்கும் விபரீதம் முடிவுதான் !!படத்தின் கதைக்களம். இடைவேளைக்குப் பிறகு வரும் அம்மா மகன் ,பாசம் சென்டிமென்டாக நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில், சாரா அம்பிகாவை தேடி வந்து உதவி செய்து அவர் உயிரை காப்பாற்றுவது இடம் ரொம்பவும் டச்சிங்காக இருக்கிறது. காமெடியும் கலகலப்புமாக செல்லும் இந்த படம் இடைவேளைக்குப் பிறகு ,அம்மா ,மகன் சென்டிமென்ட் நட்பு காதல் என்று பேசி இருக்கிறது .
ஒரு படம் பார்க்க வரும் ரசிகர்கள் என்னவெல்லாம் விரும்புவார்கள்? காதல் காட்சி விரும்புவார்கள். நகைச்சுவை விரும்புவார்கள். சண்டை காட்சி விரும்புவார்கள். அடுத்து என்ன நடக்கும்! என்று த்ரில்லர் காட்சியை விரும்புவார்கள்? அம்மா மகன் சென்டிமென்ட் காட்சியை விரும்புவார்கள்! பள்ளியில் படிக்கும் ஆணும், பெண்ணும் நண்பர்களாக பழகுகிறார்களா? அல்லது காதலராக பழகுகிறார்களா?என குழப்பத்தை ஏற்படுத்தும் காட்சி விரும்புவார்கள்!! நாயகியின் கவர்ச்சி விரும்புவார்கள் .
. இப்படி எல்லாம் விஷயங்களும் கலந்து கட்டி இயக்குனர் கொடுத்திருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
சாக்ஷி அகர்வால்
படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார். கவர்ச்சி காட்சிகளில், குட்டி ஜட்டியுடன்வளம் வந்து இளைஞர் களை கவர் கிறார்.
காதலன் முத்தத்துக்காக ஏங்கி தவிக்கும் போது அதெல்லாம் திருமணமான பிறகு தான் என்று ஒதுங்கி போவது தமிழ் பெண்ணின் பெருமையை சொல்கிறார். பிறந்தநாள் கொண்டாட வீட்டில் எல்லாரும் தயாராக கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடமையே கண்ணாக ஆபீஸ் வந்து வேலை செய்கிறார். சிறுவயது நண்பனின் கொடூர தாக்குதலில் ரத்தம் சிந்துகிறார். திருப்பி தாக்கும்போது ஆத்திரத்தின் உச்சத்தை காட்டுகிறார் .
பள்ளி சீருடையில் வலம் வருகிறார். மென்மையான பெண்ணாகவும், வன்மை மிகுந்த பெண்ணாகவும் உணர்வுகளை பிரதிபலித்து காட்சிகளுக்கு பொருந்தி இருக்கிறார் .
நாயகன் விஜய் விஸ்வா மகேஷ் என்கிற கதாபாத்திரத்தில் திருமணத்திற்காக உருவாகிற தடைகளை பற்றி அவர் கவலைப்படுவதும், சாராவுடன் கொஞ்சிக் கொண்டும், சில்மிஷம் செய்ய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டும் பொழுதை கடத்துவதென நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பொங்கி எழுந்து செல்ல குட்டியை விளாசும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் மிரட்டல் செல்வா,
தன் பெயரில் இருக்கும் அடைமொழிக்கேற்ப மிரட்டலாக நடித்திருக்கிறார். சாராவின் கனவில் வந்து அடிக்கடி மிரட்டுவதோடு, சண்டைக் காட்சிகள் சிறப்பாக செய்திருக்கிறார் .
படத்தை இயக்கியிருக்கிற செல்லக்குட்டி சாராவின் நண்பனாக வந்து, அம்மாவிடம் அன்பும், அநியாயங்களை கண்டு கொதித்து எழுவதும், வசனங்களை ஹை டெசிப்பில் கத்திக் கொண்டு பேசுவதும், ஒரு வித்தியாசமாக
காட்டி இருக்கிறார். ஜட்டி போட்டு அதன் மீது கோவணம் கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகிறார். இடைவேளை வரை காமெடி என்ற பெயரில் கலகலப்பு ஊட்டுகிறார்.
யோகி பாபு தங்கதுரையும் சேர்ந்து இவரும் காமெடிக்கு கை கொடுக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் சாராவை உண்டு இல்லை என்று துவம்சம் செய்யும் செல்லா,சாரா தம்பியை அடித்துக் கொள்வது, தந்தையை கொள்வது, என உக்கிரத்தின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிறார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு உச்சஸ்தாயியில் டயலாக் பேசி நடித்தவர்கள், வெகு சிலர் அதில் செல்ல குட்டி இணைகிறார். வித்தியாசமாக இருக்கிறார். வித்தியாசமாக நடிக்கிறார். வித்தியாசமாக பேசுகிறார். வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார். கிளைமாக்ஸ் முடித்த விதம் அவருக்கு கைதட்ட வைக்கிறது.
ரோபோ சங்கர் தண்ணி வண்டி ராஜூவாக அவ்வப்போது போதைக்கு அடிமையாகிறார். செக்யூரிட்டியாக நடித்திருக்கிறார். சில நிமிடங்களில் வில்லன் போல பேசுகிறார் .
யோகி பாபு” டுமில் பாபு “என்கிற கதாபாத்திரத்தில் அவருக்கு கொடுத்த காட்சிகளை சிறப்பாக, சிரிப்பாக சில்லறைகளை சிதறி விட்டிருக்கிறார். பொன்வண்ணன் சாராவின் அப்பாவாக தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். அஸ்மிதா வழக்கம்போல் குத்தாட்டம் போடாமல் போலீஸ் அதிகாரியாக” ஜிம் என்று “கும்மென்று வருகிறார். அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. அடப்பாவிகளா? மஸ்தானா போட்டு மயக்கிறியே ” என்ற பாட வேண்டிய அஸ்மிதாவை ஃபுல் டிரஸ் ல காட்டிவிட்டீர்கள் என்று ரசிகர்கள் பதறுகிறார்கள்!! அடுத்து பழைய ஜோக் “தங்கதுரை இன்னும் நிறைய ஜோக்குகளை சொல்வார் என்று எதிர்பார்த்தோம், ஒன்று இரண்டு ஜோக்குகளை சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார்.
” அம்பிகா அம்மாவாக தன் மகன் பரிட்சையில் தோல்வி அடைந்து விட்டான் என்று உறவுகள் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பொழுது கண்ணீர் சிந்தி கதறிக்கொண்டு வெளியே வந்து பக்கவாதம் ஏற்பட்டு ஆஸ்பத்திரி படுத்திருக்கும் பொழுதும் முகம் வாடாமல் இருக்கிறார் .
அந்த காட்சிகளில் கொஞ்சம் மேக்கப்பை தவிர்த்திருக்கலாம் .
அந்த அம்மா ,பாடலும் அம்மா மகன் சென்டிமென்ட், அம்மாவுக்காக சாராவிடம் கெஞ்சும் காட்சிகளும் மனதை தொடுகிறது. அதையே முழு கதையாக எடுத்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும் .
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. சோகப் பாட்டு மனதை தொடுகிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்சுமணன் கதை ஓட்டத்துக்கு போதுமான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார். ஃபிளாஷ் பேக் காட்சிகளிலும்,
சரி “சாரா பணிபுரியும் அலுவலகத்தில் ரிச்சாக காட்டி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் அந்த முடிவடையாத பங்களா கீழ் நடக்கும் திகிலை காட்சிப்படுத்திய விதம் ஒரு திகிலை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர், ஒப்பனையாளர், காஸ்ட்யூமர்,
வி எஃப் எக்ஸ் காட்சிகள் செய்தவர்கள், உதவி இயக்குனர்கள், காஸ்டியூம் டிசைனர், தயாரிப்பு நிர்வாகி என ஒரு பெரிய பட்டாளமே இந்த படத்திற்கு பணிபுரிந்து இருக்கிறார்கள்
கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர் எல்லோரும் திரைக்குப் பின்னால் உழைத்திருக்கிறார்கள்” திரைக்கு முன்னால் நடித்த கலைஞர்கள் மக்களை மகிழ்விக்க மிகவும் சிறமபட்டு நடித்தி ருக்கிறார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குனர் ஒரு வித்தியாசமான கதை யை எடுத்து பள்ளியில் படிக்கும் ஆண், பெண் நண்பர்கள், நட்பாய் பழகுவது நல்லதா? காதலிப்பது நல்லதா? என்ற குழப்பத்திற்கு விடையைத் தேடி பயணித்திருக்கிறார்!
சித்தர் வாக்கு பொய்க்காது என்ற தத்துவத்தையும் சொல்கிறார் .
ஆரம்பக் காட்சியில் கருப்பு சாமி காட்டி கருப்பனுக்கு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து சொல்கிறார். நண்பர்கள் இக்கட்டான சூழலில் உதவுவார்கள் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் ,போலீஸ் வரும்போது யோகி பாபு, தங்கதுரையும் பேசி அவர்களை அனுப்பும் காட்சியில்
நட்பு பலம் பற்றி காட்டுகிறார்.
தன் காதலிக்காக சொந்த பந்தங்களை உதறி விட்டு வந்த மகேஷ் என்ற கதாபாத்திரம் காதலியை உருகி காதல் செய்து திருமணம் ஆகும் நேரத்தில் இப்படி ஒரு தடை ஏற்பட்டு விட்டது என்று கலங்கும் காதலன் காட்சியை காட்டுகிறார்.
இப்படி வித்தியாசமான சிந்தித்து, ஒரு எண்டர்டெயின்மென்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.
அவராலும் குத்துப்பாட்டும் நடனமும் அதற்கு காஸ்ட்யூம் கோமணமும் ரசிக்க வைக்கிறது.
அவரின் டயலாக் டெலிவரி ரசிக்க வைக்கிறது.
நல்ல காமெடி நடிகராகவும் காமெடி கலந்த வில்லன் நடிகர் ஆகும் தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்பது உறுதி. இயக்குனர் அவருக்கு நமது வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் ராஜா
மொத்தத்தில் இந்த “சாரா”காமெடியும் அம்மா மகன் சென்டிமென்ட் பள்ளி தோழர்களின் நட்பும் அவர்கள் செய்யும் தியாகத்தை பற்றி பேசும் படம்.
புல் என்டர்டைன்மென்ட் படமாக வந்திருக்கிறது
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏🌷
