ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சாவீ ‘கைதி’, `மாஸ்டர்’ படங்களில் நடித்த உதய் தீப், ‘பேட்டை’ படத்தில் நடித்த ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம், சேஷாத்ரி, ஷியாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
: கதை களம்
சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் .
அன்னி மேரி,ஜீட்மாரிமுத்து
இருவரும் காதலிக்கிறார்கள்.
இவர்கள் காதலுக்கு
(பிரேம் ஷேசாத்திரி)
எதிர்ப்பு தெரிவிக்க
அவர் ஒரு நாள் இறந்து விடுகிறார்.
அவரின் தங்கை ஸ்டெல்லா, ஜூபின் மாமா, பிரேம் சாவு வீட்டுக்கு செல்லும்
ஜூட், அவனது அம்மா, இருவரும் அடுத்த நாள் தான் அந்த பிணத்தை எடுக்கிறார்கள். என்று சொல்ல இரவு முழுதும் ஜீடும், ஜோஸ்வா இருவரும்
காவல் காக்கிறார்கள்.
அந்த இரவில் பிரேம் பாடி காணாமல் போக ,
அதை கண்டுபிடிக்க சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஆதேஷ் பாலா வருகிறார். அதன் பிறகு கதையால்
பல டிவிஸ்ட்கள்.
நாயகன் உதய் அப்பா அமரனை கொன்றது, ஆரோக்கியராஜிம்,
சகாயராஜ்
இருவர் மீதும் ஆதேஷ் பாலா சந்தேகப்படுகிறார்?
20 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன இமான், ப்ளோரா, இவர்கள் மீதும் ஆதேஷ் பாலா சந்தேகப்படுகிறார்?
சகாயராஜ் மனைவி எலிசபெத், மற்றும் ஆரோக்யராஜ் தங்கை
ஸ்டெல்லா, இவர்கள் மீது இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா மீது சந்தேகப்படுகிறார்!!
ஆரோக்யராஜ் மகள் அண்ணி மேரி, தன் காதலன் ஜீட்மீதுசந்தேகபடுகிறாள்?
இதற்கிடையில் மர்மமான ஒரு லாரி ஆக்சிடெண்ட் ஆவது போலவே வந்து போகிறது. பார்வையாளர்களுக்கு இந்த லாரி மீதும் சந்தேகம் வருகிறது.!
முடிவில் ஆரோக்கிய ராஜ் ,பாடி காணாமல் போனதற்கு யார் காரணம்? என்ன நடந்தது ?என்பதை விறுவிறுப்பாக, சஸ்பென்ஸ் திரில்லர் உடன், டார்க் காமெடி படமாக நன்றாக விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி யுள்ளனர்
நடிகர் & நடிகைகள்
ஆதேஷ் பாலா படங்களில் சிறப்பாக நடித்துள்ளார் .இந்தப் படத்தில் கதையில் முக்கிய கதாபாத்திரமான சக்கரவர்த்தி, என்ற வேடத்தில் காவல்துறை அதிகாரியாக வந்து இறந்து போன ஆரோக்கியராஜ் உடல் எங்கே என்று தேடுவதில் ஆர்வம் காட்டி ,நடிப்பில் நம்மை கட்டி போடுகிறார்.
அவர் இன்வெஸ்டிகேசன் நடத்தும் பாணியே புதுமையாக இருக்கிறது.
எல்லோரையும் சந்தேகப்படுவது.
youtube பார்த்து சிக்கன் செய்த மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது,
நண்பன் ஆரோக்கியராஜிடம் தன் இரண்டாவது மனைவி மாதவி பற்றி சொல்வது,
கான்ஸ்டபிள் பல்ராமிடம் கண்டுபிடிக்க, முடியாமல் கத்துவது
என ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.
இனி அவருக்கு நாயகனாக நடிக்க நிறைய படங்கள் வரும். அதற்கு இயக்குனர் வழி வகுத்து கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள் ஆதேஷ் பாலா சார்.
உதயதீப், ஜீட் என்ற கதாபாத்திரத்தில்,
காமெடியும் கலகலப்புமாக நடித்திருக்கிறார்
இன்றைய இளைஞர்கள் போதை கலாச்சாரத்தில் மூழ்கி செய்யக்கூடாத தவறை செய்து தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இந்த கதாபாத்திரம் உதாரணம்.
நன்றாக நடித்திருக்கிறார்.
ஆஷிகா “அன்னி மேரி
என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரிச்சியமான நடிகை ஆகிறார்.
காதலனை சிகரெட் பிடிக்காதே” என்று எச்சரிக்கை விடுப்பதும், அப்பாவின் மரணத்திற்கு யார் காரணம்? என்று இவரும் கண்டுபிடிப்பது!
என அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
யாசர் “கிரண் என்ற கதாபாத்திரத்தில் உதய் நண்பராக வருகிறார்.
பிரேம் சேஷாத்ரி,”ஆரோக்கிய ராஜ்
என்ற கதாபாத்திரத்தில்
வருகிறார் .
ஒரு சொந்த படம் எடுத்துவிட்டு அதை விற்பனை செய்ய முடியாமல்,
தன் தங்கை ஸ்டெல்லா வீட்டுக்கு வருகிறார். நாயகன் உதய் குடிபோதையில்
பிறந்தநாளின் பொழுது அவமானப்படுத்திவிட தன் மகளை தர மாட்டேன் என்று சொல்லும் கதாபாத்திரம் .
பிறகு பிணமாகி கிடக்கும் பொழுதும் நன்றாக நடித்திருக்கிறார்.
வழுக்கை தலை பரிதாபம்.
சியாம் ஜீவா, சகாயராஜ் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார்.
நாயகன் உதய் அப்பா
இறந்ததற்க்கு நானும் ஆரோக்யராஜ் காரணம் அல்ல
என்று அவர் சொல்லும் காட்சிகளும் ,
மகன் பிடித்த சிகரட்டை பிடித்து விளையாட்டு காட்டி
இறந்து போவதும் வேடிக்கையான நிகழ்ச்சி.
மற்றும் இப்படத்தில்..
கவிதா சுரேஷ்,பவனா, மாஸ்டர் அஜய் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜோஸ்வா என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி போதைக்கு அடிமையாகும் இளைஞனாக நன்றாக நடித்தி ருக்கிறார்.
இயக்குனர்
கதை ,வசனம், எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார் .
ஆண்டன் அஜீத்
சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார். அறிமுக இயக்குனர் ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஒன் லைனும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். தமிழ் சினிமாவில் கலகல வரவேற்பு!
, பின்னணி இசையில் மிரட்டும்
டியூனர்ஸ்” என எல்லாருமே அவரவர் வேலைகளில் செம ஃபிட். அரூபக் ?
பணப் பை கொண்டு வரும் கலீல் அஹ்மத் படத்தில் செம டிவிஸ்ட். ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது காமெடி!
வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான ‘படங்களுக்கும் இயக்குனருக்கும்
நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்!.
பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு அருமை .
இரவு நேர காட்சிகளும் ,அந்த சாவு வீடும், காவல் நிலையமும் ஒளிப்பதிவில் கண்களுக்கு குளுமையாக இருக்கும் காட்சிகள்.
சுந்தர் மற்றும்
ராகேஷ் லெனின் படத்தொகுப்பு. கச்சிதமாக இருக்கிறது
படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார்கள்.
ராஜேஷ் கண்ணா
முருகேஷ் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார்.
அந்த சாவு வீடு செட்டப், காவல் நிலையம்,
இன்ஸ்பெக்டர் வீடு,
நாயகன் உதய வீடு
என எல்லா இடங்களிலும் இவர் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது.
திரைக்கு பின்னால் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்…..
Costume Designer: Ponni R
Sound Designer: Renjith Venugopal and M.Saravanakumar
Sound design & mix Studio: Sound Vibe Studios
Sound Mix: T. Udhay Kumar
Stunt Master: Sharp Sankar
DI & VFX Studio: I-matte media
Vfx Head: Vetri Selvan B
Publicity Designer: Djinn studios/ Monic
Makeup: Aishwarya
Title Design: Bovas
Stills: Martin
Audio Label: ETC Music
Pro: R Mani Madhan
Production Manager: KNR Samy
Banner: Anton Ajith Productions
இப்படத்தை வெளியிடுகிறார்
சிவானி ஸ்டுடியோ
செந்தில் குமார்.
மொத்தத்தில் இந்த படம் “வித்யாசமான கதையில் எல்லோரும் ரசிக்க தக்க வகையில் வந்துள்ளது.
மக்கள் கொண்டாடினால் தான் இது போன்ற வித்யாசமான படங்கள் வரும்.
எனவே வரவேற்போம் 💐
