நிர்வாகம் பொறுப்பல்ல”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7-/5

ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
:அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’
ஒரு சமூக விழிப்புணர்வு மிக்க படமாக வந்துள்ளது .
மக்கள் ஏமாற கூடாது என்று சொல்லி இருக்கும் படம்.
மோசடிகள் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்🌷

கதை களம்
வங்கியால்₹25ரூபாய் ஏமாற்றப்படும் இளைஞன் அதே பாணியில் சமூகத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றுவது தான் ஒன் லைன்….

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக அந்த பணத்திற்காக ஊரையே ஏமாற்றும் கே .எப்படி மக்களை ஏமாற்றினார் ,என்று சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது.
பத்திரிகைகளில் படித்து கடந்துபோன செய்திகளை கதைக்களம் ஆக்கி அதுவே ஒரு அசத்தல் ட்ரீட்மெண்டில் திரைக்கதை, அமைத்து வைட் கலர் பிராடுகளை ஏமாற்றுவது எப்படி என்று புட்டு புட்டு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் .
டீடைலிங் அசத்தலாக இருக்கிறது.

ஆன்லைன் மோசடி,
எம் .எல் .எம் மோசடி,
அதிக முதலீடு செய்தால் இரட்டிப்பாகும் வட்டி மோசடி,
என்று பல விதமான வடிவங்களில் மோசடிகள் கடைபரப்பப்பட்டு வருகின்றன. எவ்வளவுதான் ஊடகங்கள் இவற்றை அம்பலப்படுத்தினாலும் மக்கள் தொடர்ந்து ஏமாந்துதான் வருகிறார்கள். இந்த மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்தும் படம்தான்
’”நிர்வாகம்பொறுப்பல்ல”

எம்.எல்.எம். முறையில் மோசடி,
செய்து ஐ.எம்.எஸ்
என்ற மோசடி நிர்வாகம் மூலம்
4 500″கோடிக்கு ஆட்டை போடுகிறார் நாயகன் கே.
மீண்டும் “250 ரூபாய்க்கு” ஒரு மொபைல் போன் கொடுக்கிறேன் என்று மீண்டும் ஒரு 5000″ கோடி ஆட்டையை போடுகிறார்.
மொத்தத்தில் 9 ஆயிரத்து 500 கோடி பத்தாயிரத்துக்கு இன்னும் 500 கோடி தேவைப்படுகிறது.
இப்படி
மக்களை ஏமற்றுவது குறித்து சிறிதும் குற்ற உணர்வற்ற கே.என்னும் இளைஞன், தன் புத்திசாலித்தனத்தாலும் பேச்சுத் திறமையினாலும் பெரும் மோசடிப் பேர்வழியாக வலம்வருகிறான். சட்ட அமைப்பை பணத்தைக் கொடுத்துச் சரிக்கட்டுகிறான். ரவுடிகளைப் பணத்தாசை காட்டி ஏமாற்றுகிறான்.
மீண்டும் ஒரு” 500 கோடிக்காக மோனிகாவை ஏமாற்றும் பொழுது போலீஸ் அதிகாரி அன்பரசியிடம் சிக்குகிறான்.
அதிலிருந்து தப்பித்தானா? என்பதே கதை.

மோசடி வலை மக்களை ஏமாற்றுகிறது என்பதைவிடவும், மக்களின் பேராசை எப்படி அவர்களை மோசடி வலையில் விழ வைக்கிறது என்பதைத்தான் படம் காட்சிப்படுத்துகிறது. இந்தப் பேராசைதான் மோசடிக்காரர்களின் பிரதான ஆயுதம் என்பதை இயக்குநர் அழுத்தமாகக் காட்டுகிறார். அடுத்தபடியாக மோசடி செய்பவர்களின் சாமர்த்தியத்தையும் நன்றாக வெளிப்படுத்துகிறார்.வசனங்கள் பெரிதும் துணை புரிகின்றன.

(சம்பவம் ஒன்று) பிளாக் பாண்டி ஐந்து நிமிட சுகத்துக்காக 50,000 இழப்பது.
(சம்பவம் இரண்டு )
காக்கா, கதையில் லிவிங்ஸ்டன் பேராசை பட்டு ஒரு கோடியை இழப்பது .
(சம்பவம் 3 )பச்சோந்தி
இதில் பொதுமக்கள் எப்படி பணத்தை இழக்கிறார்கள் என்பது.
(சம்பவம் நான்கு) கழுதை, இதில் 250 ரூபாய்க்கு ஒரு போன் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்பி பணத்தை கட்டுகிறார்கள் என்பது …..
(சம்பவம் ஐந்து) காதலன் என்கிற பெயரில் 500 கோடி ரூபாயை அசால்டாக
இழக்கும் மோனிகா வின் கதை அவரிடம் ஆட்டையை போடும் கதை ….

இதுபோன்ற திட்டங்களில் ,ஏமாந்த பலரும் இந்தப் படத்தைப் பார்த்து வெட்கமடைவார்கள். புதிதாக வேறு திட்டங்கள் கடைபரப்பப் பட்டால் அதில் ஏமாறாமல் ஒரு சிலராவது உஷாராக இருக்கக்கூடும். அந்த வகையில் இது வரவேற்கவேண்டிய படம்தான்.

நாயகன் தன் மூளையாலும் வாய் ஜாலத்தாலும் தப்பிக்கிறான்.என்பதுசுவராஸ்யம் ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. நூறு பேரை அடிப்பது மட்டும்தான் சூப்பர் ஹீரோயிஸம் என்றில்லை. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றும் திறமை உள்ளவனாக ஒருவனைக் காட்டுவதும் சூப்பர் ஹீரோயிஸம்தான். நாயகனின் வெற்றிகள் பலவும் கிட்டத்தட்ட மந்திர வித்தைகள்போலவே இருக்கின்றன. என்பதை காட்ட இயக்குநர் அதிகமாக மெனக்கிட்டிருக்கிறார்.
என்றாலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி அடைகிறார்.

நடிகர் & நடிகைகள்

. எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் அவர் நாயகனாகவும் நடித்திருக்கிறார்
நாயகனாக அல்டிமேட்டாக நடித்திருக்கிறார்.
அவர் பேசும் டயலாக் ஒவ்வொன்றும் சாட்டையடையில் விலாசுவதை போல இருக்கிறது
சமூகத்துக்கு நல்ல விழிப்புணர்வு.

கார்த்தி வாசன் நாயகனாக நடித்திருக்கிறார். தீவிரமான காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்தும் இவர் நக்கல், நையாண்டி,
என் வெளுத்து வாங்கி இருக்கிறார்
வில்லன் கோஷ்டி இல்லாததுகுறை.
ஆனால்
விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்பு ணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருக்கிறது.

லிவிங்ஸ்டன் ,
கோழி பண்ணை அதிபராக வந்து ஆவுடையப்பனாக, பேராசையால் ஏமாந்து , இரண்டு பெண் குழந்தைகளை கரையேற்ற முடியாமல் தற்கொலை செய்யும் முடிவு பரிதாபம் .

பிளாக் பாண்டி,
கதாபாத்திரம் இன்றைய இளைஞர்கள் செல்போனில் ஆபாச படத்தை பார்த்து சாட்டிங் செய்து பணத்தை இழக்கும் அவலம் .

ராணா,
நாயகி மோனிகாவின் பாதுகாவலராக வந்து 500 கோடி ரூபாய் இழக்கும் மோனிகாவுக்கு அட்வைஸ் செய்யும் நல்ல ஆலோசராக வந்திருக்கிறார்.

ஆதவன்,
நாயகனுடன் வித்தியாசமான குரலில் பேசி ஏமாற்றும் கலையை கலகலப்பாக செய்திருக்கிறார்.

அகல்யா வெங்கடேசன்,
இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

ஸ்ரீ நிதி, இன்ஸ்பெக்டர் அன்பரசி வேடத்தில் அம்சமாக பொருந்தி போகிறார் இவர் வரும் காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு கெத்தான ஒரு காவல் துறை அதிகாரியை பார்த்தது போல
இருந்தது.
கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்தமாக நடித்திருக்கிறார் அன்புக்கரசி,
பெரிய விழிகள், கெத்தான பார்வை, போலீஸ் அதிகாரிக்கு உண்டான திமிரென நல்ல நடிப்பு .மொத்த படத்தையும் அவர் உள்வாங்கிக் கொள்கிறார்.

மற்றும்
கோதை சந்தானம்,
அம்மன்புரம் சரவணன்,
ராதாகிருஷ்ணன்,
எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
பெரும்பாலான பாடல்கள் திரைக் கதையின் ஓட்டத்தைக் கெடுக்காமல் கதையோட்டத்தை நகர்த்தும் விதத்தில் எடுக் கப்பட்டிருப்பது ஆறுதல்
ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு உதவுகிறது. அன்பரசி, நாயகனை பிடிக்கும் காட்சி காட்சியில் துடிப்பைக் கூட்ட இசை உதவுகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள

கதை வசனம் எழுதி நாயகனாக நடித்து இயக்கி இருக்கிறார் கார்த்திஸ்வரன் இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு கதையை தேர்வு செய்து விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்கியிருக்கிறார். 2 மணி நேரம் அவரின் மாயாஜாலம் திரைக்கதையில் மயக்கியது.

ஐ .எம் .எஸ். என்ற கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பில் பாலிசான பயிற்சிகளால் மயக்கும் இவர், மோசடி பேர்வழிகளை உஷாராக இருங்கள் என எச்சரிக்கிறார். இயக்குனர் இதையும் மீறி மக்கள் ஏமாந்தால் ” நிர்வாகம் பொறுப்பல்ல” படத்தின் பெரும் பங்கு வசனங்கள், சைக்காலஜி தூண்டில் வீசி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். என்று சிறைக்குள் இருந்தவாறு பாடம் எடுக்கிறார். ஏமாற்றி அபகரித்த ,பணம் என்னவெல்லாம் செய்யும் என கேட்டு சினிமாவாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் இறுதியில் தன் பக்கம் நியாயம் இருப்பதை போல முடித்திருப்பது கொஞ்சம் ஏமாற்றம் என்றாலும் ரசிக்க வைக்கிறது.
நாயகியிடம்” 500 கோடி ஆட்டையை போடுவதை விட, போலீஸ் வளைத்து பிடித்த பிறகு, எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்து தப்பிப்பது போலகாட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சாஜின் படத்தொகுப்பு மிகக் கச்சிதமாக விறுவிறுப்பாக இருந்தது .ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக படத்தொகுப்பு செய்திருந்தார்.

என் எஸ் ராஜேஷ் ஒளிப்பதிவு” ரிச்சா இருந்தது .குலு மணாலி பாடல் கண்களுக்கு குழுமையாக இருந்தது.
ஏ.ஐசெய்த ஃபிளாஷ் பேக் ரசிக்க வைத்தது
பாடல் காட்சியில் கேமரா புகுந்து விளையாடுகிறது

.
கருணாகரனின் பாடல் வரிகள் ரசிக்க வைத்தது அப்பா பாடலும் குத்து பாடலும் மெலோடி பாடலும் கேட்பதற்கு செவிகளுக்கு இனிமையை ஊட்டியது .
மாரியப்பன் ஆர் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் நாயகனின் அலுவலகம் மோனிகாவின் வீடு காவல் நிலையம், என எல்லா இடங்களிலும் இவர் கைவண்ணம் பளிச்சென்று இருக்கிறது.

லோகநாதன் ஆடை வடிவமைப்பு சூப்பராக இருந்தது. காவல்துறை அதிகாரி அன்பரசிக்கு, ஆடை வடிவமைப்பு கச்சிதமாக இருந்தது. நாயகனுக்கும் நன்றாக இருந்தது.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்.

மொத்தத்தில் இந்த படம் தரும் பாடம்..
சொல்லும் சேதி..

“மக்கள் ஏமாற ரெடியா இருக்கும்போது நாம ஏமாற்றுவது தப்பே இல்லை”

“சட்டத்துக்குள்ளே ஓட்டை இல்ல
ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கு “

“அறிவு இருக்கிறவன் ஏன் நம்ம கிட்ட வற்றான் போன்ற வசங்கள் பார்த்து…
மக்கள் இது போன்ற படங்களை பார்த்து திருந்த வேண்டும் இது போன்ற படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் வெற்றி பட வரிசையில் இப்படம் சேர வேண்டும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா🌷🙏