மகா சேனா”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கதை களம்

அடிவார கும்பலைச் சேர்ந்த கங்கா , யாழி மலையைச் சேர்ந்த செங்குட்டவன், விமல்) இருவரும் காதலிக்க , கங்காவின் அப்பா ஏமாற்றி ,யாளீஸ்வரர் சிலை எடுத்து செல்லும் போது இறந்து விடுகிறார். தெய்வீக சக்தியால், இது செங்குட்டுவன் அப்பா மீது பழிவிழ, கங்கா, செங்குட்டுவனின் காதல் பிரிகிறது. வஞ்சம் தொடர்கிறது. கங்கா அடிவாரக் கும்பல் தலைவி ஆகிறார். செங்குட்டுவன்
யாழிமலை கும்பலுக்கு தலைவனாகிறார்.

இந்த இரு கும்பலுக்கும் தொடர்ந்து பகை, இதற்கு இடையில் கல்லூரி மாணவர்கள். குரங்கணி மலைக்கு கோயில் திருவிழாவை பார்க்க வருகிறார்கள்

அவர்கள் காட்டுக்குள் மாட்டிக் கொள்ள , மதம் பிடிக்கும் யானையிடம் செங்குட்டுவனின் மகள் அல்லி இறந்துவிட, காட்டுக்குள் காணாமல் போன கல்லூரி மாணவர்களில் ராம் ,மைதிலி அவர்கள் பிரிந்து போக , ஃபாரஸ்ட் ஆபிஸர் பிரதாப் இரண்டு குழுக்களையும் மோத விட்டு யாழீஸ்வரர் சிலையை திருட நினைக்கிறார்.

முடிவில் யாழீஸ்வரர் தனது சக்தியால் அதர்மம் செய்யும் பாரஸ்ட் ஆபீஸர் பிரதாப், மற்றும் அடிவாரக் கும்பலுக்கும், யாழீஸ்வரர் என்ன தண்டனை கொடுத்தார்? என்பது கதை களம் .

படத்தை எமோஷனல் கலந்த தெய்வீக சக்தி என்ன செய்யும் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படம் கூடலூர், வயநாடு, கொல்லிமலை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 90% உண்மையான காடுகளில் படமாக்கி இருந்தார்கள். தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் அழிவை நோக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை ஆழமான காட்சிப்படுத்தலுடன் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் .மாபெரும் திருவிழா கிளைமாக்ஸ், உணர்ச்சி நிறைந்த கதைக்களம் மற்றும் மேம்பட்ட CGI தொழில்நுட்பங்கள் ஆகியவை பார்வையாளர்களை தெய்வீகமும் சாகசமும் இணைந்த உலகிற்குள் நிச்சயம் இழுத்துச் செல்லும். என்பது உறுதி பரபரப்பான திரைக்கதை மூலம் அசுரத்தனமாக “மகா சேனா”வாக வந்திருக்கிறது.

நடிகர் & நடிகைகள்
விமல்

செங்குட்டுவன், என்ற கதாபாத்திரத்தில் யாழி மலை,மக்களை காப்பதிலும், யாழீஸ்வரரை காப்பதிலும் ,சேனா வாக வரும் யானை மீது பவனி வரும் பொழுதும் ,தன் மகள் அல்லியிடம் பாசம் காட்டும் போதும், ஊர் மக்கள் தலைவனாக உயர்ந்து நிற்கிறார் .
கம்பீரமான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் வெகுண்டு எழுந்து சண்டை போடும் பொழுது வித்தியாசமான விமலை பார்க்கலாம்.
இதுவரை அவர் ஏற்று நடிக்காத ஒரு நல்ல வேடம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே

பொம்மி, என்ற கதாபாத்திரத்தில் அல்லி, என்ற பெண் குழந்தைக்கு அம்மாவாக, விமல் மீது பாசம் கொண்ட மனைவியாக,
ஊர் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்ற வுடன், வீரபெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார் .

யோகி பாபு

பாரஸ்ட் கைடு சுருளி என்ற கதாபாத்திரத்தில்
கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
கல்லூரி மாணவர்களை, மற்றும் புரபசரை, கலாய்த்து கொண்டு அவர் வரும் காட்சிகளில் காமெடியை அள்ளி தெளித்து இருக்கிறார்.

மஹிமா குப்தா,

கங்கா ,என்ற கதாபாத்திரத்தில் விமலைபழி தீர்ப்பதற்காக , படம் முழுவதும், வெஞ்சினம் கொண்ட பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் சேயோன்,

இடும்பன் என்ற கதாபாத்திரத்தில் கங்கா கணவராக வரும் இவர் படம் முழுக்க விமலை பழிதீர்க்க வில்லனாக அவதரித்திருக்கிறார்
கட்டுமஸ்தான உடல் அமைப்பு, வெறித்தனமான பார்வையும், இவருக்கு சபாஷ் போட வைக்கிறது.

ஜான் விஜய், ஃபாரஸ்ட் ஆபிஸர் பிரதாப் கதாபாத்திரத்தில் சகுனித்தனம் நிறைந்த வில்லனாக நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார் .

கபீர் துஹான் சிங்,

கிளைமாக்ஸ் காட்சியில் யாழீஸ்வரர் சிலைக்காக ,சன்டை யிட்டு வில்லன் நடிப்பை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், கங்காவையும், செங்குட்டுவன் இருவரையும் எதிர்த்து சண்டை போடும் தைரியமான வில்லனாக காட்சி தருகிறார்.

மற்றும் இப்படத்தில்
அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர்

தினேஷ் கலை செல்வன்
கதை, திரைக்கதை & இயக்கம்:
சிறப்பாக இருக்கிறது.

காடு ,மலை வாழ் மக்களின் கோபம், கருணை, அன்பு இவைகளையும் யாளீஸ்வரர் என்ற மூவாயிரம் வருடம்
பாரம்பரியமிக்க தெய்வீக சக்தியை எடுத்து சொன்னதிலும், யானைகளின் அன்பு, மனிதர்களின் பகை, இப்படி சரி விதத்தில் கொடுத்து படத்தை
விறுவிறுப்பாக பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்
இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகளை மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் .

பின்னணி இசை: உதய் பிரகாஷ் (UPR)
இத்திரைப்படத்தின் சவுண்ட்டிராக் ஏ. பிரவீண் குமார் மற்றும் உதய் பிரகாஷ் (UPR) ஆகியோரால் உருவாக்கப்பட்ட நான்கு பாடல்களை சிறப்பாக வந்துள்ளது. பிரபலப் பாடகர்கள் வைக்கம் விஜயலட்சுமி, வி.எம். மகாலிங்கம், வி.வி. பிரசன்னா மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோர்கள் பாடியுள்ள இப்பாடல்கள், பழங்குடி இசைத் தாளங்களையும் ஆன்மீக நாதங்களையும் இணைக்கின்றன

.பாடல் வரிகளை தினேஷ் கலைசெல்வன்
எழதி இருக்கிறார்
விமல் மகள் அல்லி இறந்த பிறகும், சேனா இறந்த பிறகு வரும் காட்சிகளிலும் பாடல் வரிகள் மனதில் இடம் பிடிக்கிறது.

டி.ஆர். மனஸ் பாபு வின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது.
படத்தின் நிஜமான ஹீரோ மனஸ் பாபு தான். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த ஒளிப்பதிவு தான். அந்த மலை கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் ஒளிப்பதிவாளரை
கேட்டுத் துளைக்கக் கூடும்.

நாகூரான் ராமச்சந்திரன்:
படத்தொகுப்பாளராக
கச்சிதமாக இரண்டு மணி 15 நிமிடம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் .

ராம் குமார்; சன்டை பயிற்சி கொடுத்து இருக்கிறார் .
கங்கா கூட்டமும், செங்குட்டுவன் கூட்டமும் ,அடிக்கடி மோதும் காட்சியில், கிளைமாக்ஸ் காட்சியில், விமல் உடன் வில்லன் மோதும் காட்சி, ஊர்மக்கள் அனைவரும் கங்கா கூட்டத்தில் மோதும் காட்சி ,என சண்டைக் காட்சி அனல் தெரிக்கிறது.

நடன அமைப்பு: தஸ்தா, ஆமீர்
ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சிகளும் கிளைமாக்ஸ் காட்சியில்வரும் பாடல் காட்சிகளிலும் நடனம் அற்புதமாக இருக்கிறது.

வி.எஸ். தினேஷ் குமார்:, ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்
யாளீஸ்வரர் சிலையை வடிவமைத்ததிலும் ,
கங்கா கூட்டத்தில் அகோரமான காளி சிலையை நிறுவியதிலும், மற்றும் பல காட்சிகளில்
ஆர்ட் டைரக்டரின் பங்கு சிறப்பாக இருக்கிறது.

தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வேல்முருகன்

DI: ஜான் ஸ்ரீராம்
VFX: ஐ-மேட் மீடியா
இவர்கள் பணி படத்தில் பிரமாண்டத்தை காட்டி இருக்கிறது.

ஆடியோ கிராபி: பாலாஜி, ராஜு ஆல்பர்ட்

போஸ்டர்கள்: தினேஷ் அஷோக்

அசோசியேட் புரொட்யூசர்: ராணி ஹென்றி சாமுவேல்

மக்கள் தொடர்பு: ரேகா அவர்கள்
படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த படம் முழுக்க முழுக்க
படம் இப்படி தான் போகும் என்று அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றால் அது ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. படத்தின் பலம்
நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விமல், கதாநாயகி ஸ்ருஷ்டி, ஜான் விஜய், மற்றும் கைடுஆக நடிக்கும் யோகிபாபு. அனைவரும் அருமையாக நடித்துள்ளனர் .விமல் மகளாகநடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக இருப்பதற்கு இயக்குனர் புத்திசாலி தனம் காரணம்.
.ஜான்விஜய், அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது.
படத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர்
பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள
இந்த படம் . காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமாக வும்
இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு படமாக வந்துள்ளது.

நிச்சயம் படம் பார்கலாம் .