சுப்பன்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் SPS குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் பரபரப்பான திரைக்கதை ,மற்றும் விறுவிறுப்பான, கதை களத்தில் வெளிவந்துள்ள படம்”சுப்பன்”

நடிகர்கள் & நடிகைகள்

ஆனந்த முருகன் (அறிமுகம்), பாலஹாசன், யாசர், நடிகைகள் காயத்ரி ரேமா, ஷார்மிஷா, ஸ்வாதி எஸ் பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் டாக்டர் சரவணன், ரொட்டேரியன் விஸ்வ நாராயண், ஸ்ரீதேவா, மிதுன் சக்ரவர்த்தி, கஜராஜ், சரவண சக்தி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🌷

கதை களம்

“தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்”
இந்த கதைகளத்தில் வீரன் என்ற அரக்கனையும் அவன் தம்பி ரவியையும்,
செய்ய ஸ்ரீராம் ,தாஸ், அருண், அன்பு
ஆகியோர் போடும் ஸ்கெட்ச் என்ன?

அனன்யாவுக்கு,(காயத்ரி ரமா) திருமணம் நிச்சயம் செய்யபடுகிறது
வீரன் ,தம்பி ரவி, அவளை நிர்மூலமாக்கி போட்டோ எடுத்து மூன்று டீல் போடுகிறார் “ஒன்று நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும். “இரண்டு உனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை கொண்டு வந்து விட்டுவிட்டு நீ சென்று விட வேண்டும். “மூன்றாவது இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று!!!

தன்மானம் போய்விட்டது என்று அனன்யா” தற்கொலை செய்து கொள்ள , அவர் அண்ணன் ஸ்ரீராம், தன் நண்பர்கள் அருண், அன்பு ,தாஸ் உடன் வீரனுக்கு ஸ்கெட்ச் போட்டு அவரையும் ,அவன் தம்பியையும் எப்படி பழி வாங்குகிறான்? என்பதை விறுவிறுப்பாக, சொல்கிறது இந்த படம்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகும் காதலன் அல்லது தோழி இவர்களால் ஒரு பெண்ணுக்கு எப்படி பிரச்சினை வருகிறது. என்பதை சொல்கிறது இந்த படம்.

மற்றவர்களுக்கு ஜாமீன் போட்டால் கடன் வாங்கியவன் ஓடிவிட்டால் ஜாமீன் போட்டவன் குடும்பம் என்ன ஆகிறது? என்பதை சொல்கிறது இந்த படம்.

நெருங்கிய தோழியாக இருந்தாலும் அவளை நம்பி எங்கும் செல்லக்கூடாது என்பதை சொல்கிறது இந்த படம்.

பெண்களுக்கு இன்று எந்தெந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கிறது இந்த படம்.

பெண்கள் எல்லோரும் குடும்பத்தோடு அவசியம் காண வேண்டிய அற்புதமான படைப்பு சுப்பன் “

இன்றைய சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படம் பேசுகிறது. நாடு முழுவதும் ரோட்டரி சங்கங்கள் செய்து வரும் சமூக செயல்பாடுகளைக் குறிக்கும் வகையிலான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி யுள்ளனர் .
காட்சிகள் கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தை குகநேசன் சோனைமுத்து செய்துள்ளார்.
கதை திரைக்கதை, செம விறுவிறுப்பாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? அனன்யாவின் குடும்பம் என்ன ஆகும்!!! மற்ற பெண்களின் நிலைமை என்ன ஆகும்! என்பதை பரபரப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான படமாக வந்திருக்கிறது சுப்பன்”

தெளிவான திரைக்கதை ,சீரான இயக்கம் ,எடுத்து கொண்ட கதையை
கொண்டு சென்ற விதம், கிளைமாக்ஸ் முடித்த விதம் என எல்லாமே ரசிக்க வைக்கிறது.
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🌷

தயாரிப்பு:
ரொட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகனின் ஶ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இவர்களுக்கு வாழ்த்துக்கள் .ஒரு நல்ல படத்தை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் நிச்சயம் இப்படம் அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும்” ரொட்டேரியன் என்றாலே மக்களுக்கு உதவி செய்பவர்கள், இந்த படம் மூலம் நிறைய பெண்களுக்கு விழிப்புணர்வு உதவியை செய்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🌷

ஜோஸ் ஃப்ராக்ங்ளின் இசையமைத்துள்ளார்.
அந்த கல்யாண பாடல்” வலி என்ற பாடல்”மற்றும் பின்னணி இசை, சிறப்பாக இருக்கிறது வீரன் வரும்பொழுது எல்லாம் ஒரு தீம் மியூசிக் போடுகிறார் இசையமைப்பாளர் அது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல் ஆக இருக்கிறது.

பாடல்களை மோகன்ராஜன், கருமாத்தூர் மணிமாறன், எழுதி, முகேஷ், ஷிவானி பாடியுள்ளனர்.
பாடல் வரிகளும் பாடல் பாடியவர் குரல்களும் ரசிக்க வைக்கிறது.

ஜெயகிருஷ்ணா,
படத்தொகுப்பாளராக
பணி புரிந்து இருக்கிறார். கச்சிதமாக இருக்கிறது .எந்த இடத்திலும் படம் லேக் ,ஆகாமல் விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர்.

ஆர்ட் டைரக்டராக தாமோதரன் ராம்,
அருமையாக பணி புரிந்திருக்கிறார். ரவியின் அந்த கெஸ்ட் ஹவுஸ், வீரனின் கெஸ்ட் ஹவுஸ், மற்றும் பார், என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது.

நடனம் நிஷார் கான்,
கல்யாண நிச்சயப்பட நடனம் ரசிக்க வைத்தது .நடன இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒப்பனை இதயா ஜேம்ஸ்,
காயத்ரி ரமா, மற்றும் இப்படத்தில் நடித்திருக்கும், நடிகைகளுக்கு, கவனமாக ஒப்பனை செய்து இருக்கிறார் ஒப்பனை மிகையில்லாமல் அழகை ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு நிர்வாகம் சிவகாசி பாலா, மற்றும் சமுத்ரா செந்தில்,

மக்கள் தொடர்பு என்.விஜயமுரளி
படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்🌷

இப்படத்தின் இயக்குநர் பற்றி

இயக்குனர் குகநேசன் சோனைமுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய படை (Indian National Army (INA)) வீரர் தியாகி திரு.சோனைமுத்து – திருமதி. ஜானகி தம்பதியரின் மகன் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் விமல் அவர்களுடன் இணைந்து “மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி” என்ற படத்தினை எடுத்தார். அந்த படத்தில் இணை தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட், ஒளிப்பதிவாளர் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். பஸ் பயணத்தில் உருவாகும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து, ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ என்ற திரைப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றினார். இப்படம், DSLR ஸ்டில் கேமராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையுடன், “லிம்கா புக் ஆஃப் ரொக்கார்ட்” சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. இதற்காக அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் பயோகிராபிகல் இன்ஸ்டிடியூட்டில் SPS குகன் அவர்களது பெயர் இன்றும் இடம்பெற்றுள்ளது.

அதன் பிறகு, தமிழ் சினிமா தயாரிப்பில் புதுமை படைக்கும் எண்ணத்துடன், போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்களின் ஆதரவோடு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டார். “முயல்” என்ற பெயரில் உருவான அந்த படத்தை குகநேசன் சோனைமுத்து இயக்கியிருந்தார். தொடர்ந்து, தனது நண்பர் சிவகாசி பாலாவுடன் இணைந்து மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். அதில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். அத்திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஆன்லைனில் வெளியிடப்பட்டது. பள்ளிப் பருவத்தில் இருந்தே கேமரா துறையில் அனுபவம் கொண்ட இவர், பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

இதுவரை தனது பெயரை SPS குகன் என்று பயன்படுத்தி வந்த இயக்குனர், தற்போது குகநேசன் சோனைமுத்து என்று மாற்றியிருப்பதுடன், மதுரையைச் சேர்ந்த ரொட்டேரியன் ஆர்,ஆனந்த முருகன் அவர்களின் தயாரிப்பில் “சுப்பன்” என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மொத்தத்தில் இந்த சுப்பன்” திரைப்படம்
பெண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.

ரசிகர்கள் இது போன்ற நல்ல படத்தை கொண்டாட வேண்டும் வரவேற்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் இது போன்ற விழிப்புணர்ச்சி ஊட்டக்கூடிய நல்ல திரைக்கதை யுள்ள
திரைப்படங்கள் உருவாகும்.

இப்படத்தில் நடித்த நடிகர், நடிகையர்,
தொழில்நுட்ப கலைஞர்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகிறது” கிளாசிக் சினிமா🌷🙏