தி பெட்”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

ஒரு கட்டில் ,தன் அனுபவங்களை சொல்லும்”புதுமையான வித்தியாசமாக படமாக வந்திருக்கிறது “தி பெட்”

ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்தை, கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது.

கதை களம்

வேலு,பாலு,பாண்டி, தீனா நால்வரும் நண்பர்கள் .ஐ.டி துறையில் வேலை செய்யும் இவர்கள் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் ஒரு பெண்ணோடு ஊட்டிக்கு சென்று டேட்டிங் செய்ய ஆசைப்பட்டு , கிருஷ்டி யை ,அம்மா மரியத்திடம் ,பேரம் பேசி ஊட்டிக்கு அழைத்து செல்கிறார்கள். ஊட்டிக்கு சென்று லூட்டி அடித்து குடித்து ,கும்மாளம் போடும் நால்வருக்கும் , கட்டில் சுகம் மட்டும் கிட்டவில்லை .

அங்கு அருண், என்ற வில்லன் வர வில்லங்கம் வந்து சேர ,அடி தடி படலம் நடக்கிறது. அடுத்த நாள் கிறிஸ்டி, மற்றும் பாலு ,காணாமல் போக, கிருஷ்டி அம்மா ஊட்டிக்கு வந்து போலீஸிடம் புகார் செய்ய, அடுத்து கதை போலீஸ் இடம் போகிறது. கிறிஸ்டியும் , பாலுவும் என்னஆனார்கள்? என்ற விசாரணையில், படம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

பெண் மீது சபலம் கொண்ட நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த்,பிளாக் பாண்டி, விக்ரம், பப்பு, நடித்திருக்கிறார்கள் இவர் செய்யும் காரியங்கள் சுவாரஸ்யமானவை. ‘மன்மத லீலை’ யை வென்றார் உண்டோ என்ற பாணியில் இடை வேளை வரை செம கிளுகிளுப்பு.

காமெடி, கலந்த த்ரில்லர் படமாக இருந்தாலும், புதுமையான கதைக்களம் . ரசிக்க வைக்கிறது திரைக்கதையில் உள்ள வேகம், இரண்டாம் பாதியில் இன்வெஸ்டிகேஷன்என்று ரெக்க கட்டி பறக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களும் அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது புதுமையான கதைக்களம்:

ஸ்ரீகாந்துக்கும் நாயகி இடையிலான உறவு ஒரு நல்ல கதைக்கருவை வழங்குகிறது.
திரைக்கதை: கதைக்களம் வலுவாக இருப்பதாலும், அதைத் திறமையாகக் கையாள்வதில் இயக்குனர் பாராட்டப்படுகிறார். முதல் பாதி ஸ்ரீகாந்தின்,காதல்
நண்பர்களின் காமெடி காட்சிகளால் நீட்டிக்கப்பட்டு, இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கிறது

நடிகர்கள் & நடிகைகள்

வேலு,என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த், கதாநாயகனாக நடித்துள்ளார்‘ இவர் ஆரம்பக் காட்சியில் தன்னுடைய தாயின் தாலியை உருக்கி மோதிரமாக செய்யும் பொழுது இந்த மோதிரம் கதையின் முக்கியத்துவம் பெறுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

இவரின் அம்மா ஒரு ஓவியர் என்பதால் ஸ்ருஷ்டி படத்தை வரைந்து இதுபோன்ற ஒரு பெண் வேண்டும் என்று அதை நினைத்து உருகுவது

நாயகி வந்த பிறகு நண்பர்கள் காமக்கண்ணோடு பார்க்க ,இவர் காதலை சொல்ல முயற்சிப்பது அதற்காக இவர் சிரமப்படுவது என இவருக்கு லட்டு சாப்பிடுவது போல கிடைத்த கதாபாத்திரம் சிறப்பாக செய்து இருக்கிறார்.
சண்டைக் காட்சிகளிலும், அனல் தெறிக்க பறந்து பறந்து சண்டை செய்திருக்கிறார்.

பிளாக் பாண்டி இந்த படத்தில் பாண்டி, என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க காம நெடி, கலந்து கிளுகிளுப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி, நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே, கிறிஸ்டி என்ற கதாபாத்திரத்தில் அழகு புயலாக வந்து ரசிகர்களை அம்சமாக கவறுகிறார். கண்ணகுழியில் அழகை காட்டி படம் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார்.

இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தான்..

ஜான் விஜய், ஊட்டியில் இருக்கும் காவல்துறை அதிகாரியாக வந்து இடைவேளைக்கு பிறகு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் மனைவியிடம் ஒரு காபி கூட வாங்கி குடிக்க முடியாமல் நொந்து நூலாகி இறுதியில் ஒரு கப் காபியை வாங்கி திருப்தியாக குடிப்பது இன்வேஸ்டிகேஷன் நடத்தும் பாங்கு எல்லாமே ரசிக்க வைக்கிறது.

பப்பு, ஸ்ரீகாந்த் நண்பராக வரும் பப்பு ,தீனா என்ற கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டியோடு சில்மிஷம் செய்து கொண்டு சிரிக்க வைக்கிறார்
விக்ரம் ,பாலு என்ற கதாபாத்திரத்தில் , நான்கு நண்பர்கள் ஒருவராக வந்து பரிதாபமான முடிவை மேற்கொள்கிறார்.

திவ்யா (மலையாள நடிகை) மரியம் என்ற கதாபாத்திரத்தில் நாயகியின் அம்மாவாக அழகான அம்மாவாக நடித்திருக்கிறார்.

ரிஷா, ஜான் விஜய் மனைவியாக கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருக்கிறார்.
டிக்டாக் திருச்சி சாதனா ஊர்வசி என்ற ஊட்டியில் விலைமாது ,தொழில் செய்யும் இடத்தில் நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகுதேவி பிரியா ஜான் விஜய உடன் இன்வெஸ்டிகேஷன் நடத்தும் பெண் போலீசாக நடித்திருக்கிறார். பாடி பில்டப் கச்சிதமாக இருக்கிறது.

இயக்குனர் வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இளைஞர்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கொடுத்திருக்கிறார்.
திரைக்கதையை கொண்டு சென்ற விதமும், எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் பரபரப்பாக கொடுத்திருக்கிறார்.

ஒரு இன்வெஸ்டிகேஷன் படம் இப்படித்தான் இருக்க வேண்டும். என்பதை இயக்குனர் அழகாக அருமையாக சொல்லி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
கிளைமாக்ஸ் முடித்த விதம் வரவேற்புக்குரியதாக அமைந்திருக்கிறது.

இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும்

ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.. சிறப்பு.

ஒளிப்பதிவு செய்துள்ளார் கோகுல் இவரின் கேமரா கண்கள் இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கண்களுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மெய்மறக்க வைக்கிறது. ஊட்டியின் கடுங்குளிரில் நள்ளிரவில் படமாக்கப்ப்பட்ட காதல் காட்சிகள் அனைத்தும் இப்படத்தின் உன்னதங்கள்” கே.கோகுல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணிஇசையில் மிரட்டி இருக்கிறார் தாஜ்நூர்

யுகபாரதி பாடல்கள் எழுத, வரிகள் ரசிக்க வைக்கிறது.

ஜே.பி எடிட்டிங் செய்திருக்கிறார் கச்சிதமாக இரண்டு மணி நேரம் 10 நிமிடம் விறுவிறுப்பாக போவதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு அதிகம் என்று சொல்லலாம்.

ஆர்ட் டைரக்டராக பழனிவேல் அருமையாக அமைத்திருக்கிறார் காட்டேஜில் உள்ள கட்டில் ,மற்றும் ஓட்டல் டைகர் பார்க், இப்படி எல்லா இடங்களிலும்ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.

சன்டை பயிற்சி ஆக்ஷன் பிரகாஷ் அனல் தெரிக்கிறது.

மக்கள் தொடர்பாளர் ஜான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷

மொத்தத்தில் இந்தக் கட்டில் ,பல கதைகளை பேசும் கலகலப்பான படமாக வந்திருக்கிறது வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷🙏