இறுதிப் பக்கம்’ திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘டியர் ரதி’. இந்தப் படத்தை ‘இறுதிப் பக்க’த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.
பல வெற்றி படங்களை வெளியிட்ட
.உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
: கதை களம்
படத்தின் நாயகன் மதன், பெண்களின் கண்களைப் பார்த்து பேசவே தயங்கும் சுபாவம் உள்ளவன் .
பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து ‘டேட்டிங்’கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் ‘டியர் ரதி’ படத்தின் கதை ‘ரொமான்டிக் காமெடி’யாக இந்த ‘டியர் ரதி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.
மதன் நண்பன் ராம் மதனை பாலியல் தொழில் செய்யும் பகுதிக்கு அழைத்து செல்கிறான். அது படத்திற்கு டர்னிங் பாயிண்ட்.
அங்கு ரதி என்ற பாலியல் தொழிலாளியை மதன் சந்திக்க இருவரின் மனது ஒத்து போகிறது. மதன் ரதியிடம் ஒரு நாள் என்னோடு டேட்டிங் செய்ய வேண்டும் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்கிறான்.
இது படத்தின் இன்னொரு முக்கியமான டர்னிங் பாயிண்டு.
ரதியால் சிறைக்கு சென்ற வரதன், ரதியை தேடி வர,சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் ரதியை வீட்டுக்கு அழைத்து தனிமையில் இருக்கும் பொழுது ரவி அவரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போய் விட, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை கண்டுபிடித்தாரா?
வரதன் நதியை கண்டுபிடித்தாரா? மதனும், ரதியும் ஒன்று சேர்ந்தார்களா? இந்த மூன்று சம்பவங்களையும் ஒன்றாக இணைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர். வித்தியாசமான கதை, புதுமையான கதைக்களம்.
” .
நாயகன் &நாயகி
சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார்.
மதன் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு.
பயந்த சுபாவம் பெண்களைக் கண்டாலே பேசத் தயக்கம்.
ரதியிடம் காதலை சொல்ல தயக்கம்
என்று இவர் தன்னுடைய கதையை பிளாஸ்பேக் உடன் சொல்வதுசிறப்பு.
இவர் அறிமுகமாகும் படமிது.
முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த ‘மீஷா’ படத்தில் நடித்தவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
ரதி என்ற கதாபாத்திரத்தில் பாலியல் தொழிலாளியாக புரட்சி பெண்ணாக நடித்திருக்கிறார். நாயகனின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் பொழுது, பாலியல் சார்ந்த பிரச்சினைகளை பேசும் பொழுது, துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார்.
ராஜேஷ் பாலச்சந்திரன் , வரதன், என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார் அவர் பேசும் டயலாக், மிரட்டலான தொணி தன்னுடைய அடியாட்கள் காடு, ஷெரீப் இரு வரிடமும் கிண்டலாகப் பேசிக்கொண்டு நாயகி ரதியை தேடி ட்ராவல் செய்யும் கோணம் வித்தியாசமாக புதுமையாக இருக்கிறது.
இவர்
நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான்.
நல்லநடிப்பு பாராட்டுக்கள் 🌷இவருடன் சாய் தினேஷ் பத்ராம்,
யுவராஜ், சுப்பிரமணியன், மற்றும் பலர் நடித்துள்ளனர் .
பசுபதி அவர்கள் நடிப்பு பாராட்டத்தக்கதாக இருந்தது.
இப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் ‘பொறியாளன்’, ‘சட்டம் என் கையில்’ படங்களுக்கு இசையமைத்தவர்.
பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.
ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோகேஷ் இளங்கோவன். இவர் ‘நாய்சேகர்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், ‘ஹர்ஹரா’ படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர்.
ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது.
பிரேம் .B படத்தொகுப்பு செய்துள்ளார்.இவர் செல்வா ஆர்கே – யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.
படத்தின் வெற்றிக்கு பல தொகுப்பாளர் தான் காரணம் என்பதை சொல்லி இருக்கிறது இந்த படம்.
.கலை இயக்குனராக ஜெய் ஜெ.திலீப்,
பணி புரிந்து இருக்கிறார் சிறப்பு.
நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார். இப்படி புதுமுகங்களையும் அனுபவ சாலிகளையும் இணைத்துப் படக் குழு, அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரவீன். கே .மணி.
இவர் இறுதிப் பக்கம் என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்து இப்படம் மூலம் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.
படம் கதையை சொன்ன விதத்திலும் சீராக கொண்டு சென்ற விதத்திலும் ஒரு பாலியல் தொழிலாளியின் வேதனை வழிகளை சொன்ன விதத்திலும்
இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.
காஸ்ட்யூம் டிசைனர் சிந்து,
ஒப்பனை
யாளர்: ஸ்வேதா இந்து,
Audiography: Ghatam Siva
DI: Vinayagam
Storyboard Artist: Chandran
Publicity Designer: Lakshmanan
Subtitles: Salesh Dipak Fernando
CGI JR: Harish
Executive Producer: Mano ve Kannadhasan
Production Executive: A. Henry Kumar
Associate Director: Mano Jeyam
Assistant Directors: Akshay Santhu, Jiiva SJ
Art Assistant: Ajay
Associate Cinematographers: Vignesh Krishnan, Prasanna Mahadevan
என ,இந்த திரைப்படத்தின் வெற்றிக்காக திரைக்கு முன்னாலும், திரைக்குப் பின்னாலும், பலர் கடுமையான உழைப்பை தந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் .
மக்கள் தொடர்பாளர்
சக்தி சரவணன்
“டியர் ரதி”ஒரு வெற்றி படமாக அமைய கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷🙏
