பராசக்தி”திரை விமர்சனம் – ரேட்டிங் 4-5/5

Movie Credits
Produced by: Aakash Baskaran
Expert Consultant Professor Dr. A Ramasamy
Production Design: M.R. Karthik Rajkumar
Production Executive: T. Hariharasudhan
Marketing Head: Manoj Maddy
Post Coordinator: Gunashekar M
Creative Producer: Dev Ramnath
Executive Producers: M.P. Senthel, Rhea Kongara

பராசக்தி”படத்தில் வரும் பீரியட் செட்டப், லொகேஷன், காஸ்ட்யூம் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.“சுதா கொங்கரா வின் வெற்றி படம் என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைலாக இருக்கிறது. இடைவேளை காட்சி அடிபொலி”, “அங்க தான் ஆரம்பிக்கிறது” படத்தின் வெற்றி!!!

1959, மற்றும் 1964 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக புறநானூறு”என்னும் பெயரில் இயக்கம் நடத்திய மாணவர்கள் அனுபவித்த இன்னல் பற்றிய கதை.

கதை களம்

(செழியன்)புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வருகிறார் .சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அப்படி ஒரு போராட்டத்தின் போது ஒரு ரெயிலை வழிமறித்து சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர்கள் எரிக்கிறார்கள். அப்போது அந்த ரெயிலில் பயணிக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை நடக்கிறது. இதில் ரவி மோகனின் விரல் பறிபோகிறது.

இதையே ரிவெஞ்ச்எடுத்து செழியனை தேடி வரும் ரவி மோகன் .

இந்த சூழலில் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்று முதல் போராட்டத்தை கைவிடுகிறார். ரயில்வே துறையில் இன்ஜினுக்கு கரி அள்ளி போடும் வேலையில் சேருகிறார். ஐந்து வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன் தம்பி அதர்வாவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கிறார். போராட்ட களத்தில் இருந்து தம்பியை பின்வாங்க செய்யும் முயற்சிகளில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
ஒரு புறம் ரவி மோகன் செழியனை கொல்ல துடிக்கிறார்.

மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பறிபோக, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்த ரவி மோகனும் அங்கு விரைகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா? சிவகார்த்திகேயனைரவி மோகன் சந்தித்தாரா?
ரத்னமாலா (லீலா) செழியன் காதல் என்ன ஆனது?
மொழி போராட்டம் நடத்திய மாணவர்கள் என்ன ஆனார்கள்?
பிரதமர் இடம் சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றாரா?

போன்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

பராசக்தி’ வெறும் மசாலா படமல்ல, இது ஒரு மாற்றத்திற்கான குரல். கமர்ஷியல் அம்சங்கள் மற்றும் கலைநயம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சமநிலையை சுதா கொங்கரா, சரியாகக் கையாண்டுள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், நல்ல சினிமாவை விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் ஒரு சிறந்த விருந்து.

சிவ கார்த்திகேயன்

செழியன் என்னும் பெயரில் கதையின் நாயகனாக (சிவகார்த்திகேயன்), ஒரு எளிய நடுத்தர வர்க்க இளைஞன். எதிர்பாராத சூழலில் சமூக அநீதிக்கு எதிராக அவர் எழுப்பிய குரல் டெல்லி வரை கேட்கிறது. அவர் பேசும் டயலாக் டெலிவரி, ரசிக்க வைக்கிறது. அவரின் கர்ஜனை ஓங்கி ஒலிக்கிறது.

இந்த படத்தில் சண்டை காட்சிக்காக சிரமப்பட்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சிகள், நடனம் ,மற்றும் தமிழுக்காக அவர் வாதாடுவது , தன் தம்பியை நினைத்து உருகுவது, என ஒவ்வொரு சீனிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அவர் மேக்கிங் ஸ்டைலில், ஹீரோயிசம் என்பது சண்டைக் காட்சிகளில் மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் வைராக்கியத்திலும் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். நகைச்சுவை நாயகனாக அறியப்பட்ட அவர், இதில் ஆக்ரோஷமான மற்றும் எமோஷனல் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, தீவிரமான பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சார் 🌷

ரவி மோகன்*

வான் அளவிய அதிகாரம் கொண்ட டெல்லி காவல்துறை அதிகாரியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்டிப்படைக்கும் ஒரு அசுரத்தனமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு அதிகாரியாக, எத்தனை உயிர் போனாலும் சரி, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.

அதர்வா

சிவகார்த்திகேயன் தம்பியாக, துரை என்ற கதாபாத்திரத்தில், துள்ளலாக, துடிப்பு மிக்க இளைஞனாக, உயிரை கொடுத்தாவது தமிழைக் காக்க வேண்டும் .என்று சொல்லும் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார் .நடிப்பு சூப்பர்!!!
எனர்ஜி பூஸ்ட் இளைஞனாக வந்து கவர்கிறார்,

ஸ்ரீலீலா

தமிழுக்கு அறிமுகம், நல்ல நடிப்பு, ஆனால், முதல் பாதி இவர்-சிவகார்த்திகேயன் ரொமான்ஸ் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸில் ஸ்ரீலீலா ஸ்கோர் செய்கிறார்.

தெலுங்கு பெண்ணாக வந்தாலும் தமிழை நேசிக்கும் அந்த கதாபாத்திரம் நம்மை கவர்கிறது நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

இயக்குனர்

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்றாலும் முடிந்தவரை ஹீரோயிச திரைக்கதையைத் தவிர்த்ததற்கு இயக்குநர் சுதாவைப் பாராட்டலாம். கடைசியில் வெற்றி யாருக்கு என முன்பே தெரிந்திருந்தாலும் அதை சுவாரஸ்யமாகச் சொன்னவிதத்தில் கவர்கிறார் சுதா.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதை. ஒரு சமூகப் பிரச்சினையை கையில் எடுத்தாலும், அதை போதனை செய்யும் விதமாக சொல்லாமல், ரத்தமும் சதையுமான மனிதர்களின் வலியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அவருக்கு வசனம் எழுத உதவி செய்திருக்கிறார்கள்

Additional Screenplay: Ganeshaa
Additional Dialogues: Madhan Karky, Shan Karuppusamy
நல்ல வசனங்கள்.

இசை அமைத்துள்ளார் ஜீ வீ

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. ஒவ்வொரு காட்சியின் தீவிரத்தையும் இசை அப்படியே கடத்துகிறது.

பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது எழுதியவர்கள்.

Lyrics: Yugabharathi, Ekadesi, Arivu, Kaber Vasuki, Jayashree Mathimaran

ஒளிப்பதிவு ரவி.கே.சந்திரன்

ஒளிப்பதிவு ,படத்தின் களத்தை மிகவும் எதார்த்தமாகவும், அதே சமயம் பிரம்மாண்டமாகவும் காட்டியுள்ளது.

சண்டை பயிற்சி

சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சி, கிளைமாக்ஸ் சண்டை காட்சி, அனல் பறக்கிறது படம் முழுக்க மாணவர்கள் வன்முறை களம் தீ பிடிக்க சுப்ரீம் சுந்தர் வெகு நுட்பமான வடிவங்கள் மூலம் அசுரத்தனமாக நிரூபித்திருக்கிறார்.

சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

ஆர்ட் டைரக்டர்

படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் ஆர்ட்டைரக்டர் அண்ணாதுரை, தான் அந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்று, கண்களை குளிர்ச்சியாகவும் பரவசப்படுத்தி இருக்கிறார் .

காஸ்டியூம் : அருண் மோகன் ,
காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா,

அருமையான ஆடை வடிவமைப்பு ,நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து செல்கிறது.

நடன பயிற்சி:

Brinda, Kruti Mahesh, Anusha Viswanathan

ஒப்பனை

Hair & Make-Up: Serina, S. Shyed Malik

மக்கள் தொடர்பாளர்கள்:
சதீஷ் &சிவா(AIM) அவர்கள்.

மொத்தத்தில் தமிழ் மொழியை காப்பாற்ற, உயிரையும் நீத்த மாணவர்கள் புரட்சியை இன்றைய இளம் தலைமுறையினர், அறிந்து கொள்ள, ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவருக்கு வாழ்த்துக்கள்🌷