இன்னர்வியூ நிறுவனம் சார்பில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கும்
“அனந்தா” திரை படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடித்த ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ உள்பட பல படங்களை இயக்கிய, சுரேஷ்கிருஷ்ணா. இவர் புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
ஐந்து விதமான கதை களம் கொண்ட இப்படம் பல காட்சிகளில் மனதை
ஈரப்படுத்தி செல்கிறது.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம் புட்டபர்த்தி. தற்போது இக்கிராமம் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்றிருப்பதற்குக் காரணம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்றால் மிகையில்லை.
பகவான் சாய் பாபாவின் மீது அதீத பற்றுகொண்ட பக்தர்களால் புட்டபர்த்தியில் பாபாவுக்காக கட்டப்பட்டுள்ள ஆசிரமம் `பிரசாந்தி நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது. அமைதி தவழும் நிலையம் என்பதே இதன் பொருள்.
நாட்டின் மிக முக்கிய சுற்றுலா யாத்திரை தலங்களில் ஒன்றாக புட்டபர்த்தி விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சாய் பாபாவின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
ஒருகாலத்தில் பெயரே கேள்விப்படாத மிகவும் சின்னஞ்சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தியில் இன்று, விமான நிலையம், பன்முக நவீன தொழில்நுட்ப மருத்துவமனை, புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் என ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நகரமாக மாறி விட்டது.
சாய் பாபாவின் அருளைப் பெறுவதற்காக அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்து காத்திருக்கிறார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற தன்னலமற்ற தொண்டர்களும், ஊழியர்களும் பாபாவின ்
அருளைப் போற்றி பஜன் உள்ளிட்ட பாடல்களைப் பாடுவதுடன், தினமும் வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை போதிக்கும் கொள்கைகளின்படி சாய் பாபாவின் போதனைகளும் விளங்குகின்றன. உண்மை, நேர்மை, அமைதி உலக மக்களிடத்தில் அன்பு, சாத்வீகம் போன்றவையே பக்தர்களுக்கு பாபாவின் போதனைகளாக உள்ளன.
இதை எடுத்துச் சொல்லும் விதமாக வந்திருக்கும் படம் தான் “அனந்தா”
இதில் ஜெகபதி பாபு,
(வரதன்) என்ற கதாபாத்திரத்தில் மும்பையில் வாழும் ஒரு தொழிலதிபராக கடவுள் மீது பற்றறவராக இருக்கிறார்.
அவருக்கு வங்கிக் கொள்ளையர்களால் ஏற்படும் சோதனைகளின் மூலம் சத்யசாய் பாபாவின் அருளை உணர்கிறார்.
சுகாசினி மணிரத்னம், காசியில், வாழும் அன்னபூரணி ,என்ற கதாபாத்திரத்தில் கங்கையில் விழுந்த தன் மகன் உயிரை காப்பாற்ற துடிக்கும் தாயாக அற்புதமாக நடித்திருக்கிறார் மருத்துவரால் கைவிடப்பட்ட 10 வயது சிறுவன் சத்திய சாய்பாபாவின் அருளால் உயிர் பிழைக்க, சுகாசினி பாபாவின் அருளை எண்ணி உருகுகிறார். ஒய்.ஜி.மகேந்திரன்,
மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் தன் மனைவி சீதாவின் மீது, உயிரையே வைத்திருக்கும் அவர் திடீரென ஒரு நாள் சீதா (ஸ்ரீரஞ்சனி)
இறந்து விட,
சத்ய சாய்பாபாவை வெறுக்கிறார். அதன் பிறகு நிழல்கள் ரவி, அழைப்பின் பேரில் புட்டபர்த்தி செல்லும் அவர், தன் மனைவி பாபாவின் அருளால் எப்படி தன்னுடைய துயரங்களை வெளி காட்டாமல் வாழ்ந்திருக்கிறார். என்று சொல்லி ஒய் ஜி மகேந்திரன் அழுது புலம்பும் காட்சிகள் பார்ப்பவர் மனதை கரைத்து விடும்.
தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, (வாசுதேவன் என்ற வேடத்தில் எல்லோரையும் புட்டபர்த்திக்கு அழைத்து பாபாவின் அருளை நீங்கள் பெற்ற தருணத்தை சொல்லுங்கள் என்று கேட்கும் விதம் பரவசம் கொள்ள வைக்கும்.ரசிக்க வைக்கிறது அவர் நடிப்பு.
ஸ்ரீ ரஞ்சனி,(சீதா என்ற கதாபாத்திரத்தில் ஒய் ஜி மகேந்திரன் மனைவியாக ,ஓரிரு காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார் .
அபிராமி வெங்கடாசலம் சென்னையில் மயிலாப்பூரில் வாழும் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில், பரதநாட்டிய கலைஞராக மிக முக்கியமான ஒரு போட்டியில் கலந்து கொள்ள மேடையில் நடந்து வரும்போது அவர் கால் அடிபட்டு நடனம் ஆட முடியாது என்று சூழ்நிலையில் பாபாவின் திருநீரை காலில் பூசிய பிறகு நன்றாக நடனமாடி பரிசு வாங்குகிறார். இந்த காட்சிகள் உணர்ச்சிமயமாக இருந்தது.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவாக்க பட்டுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.
வசனம் மிகவும் சிறப்பாக இருக்கிறது பாடல்களும் ரசிக்க வைக்கிறது.
யாரை அழைப்பேன் பாபா” என்ற பாடல் பல இடங்களில் மெலோடி ஆக வந்து ரசிக்க வைக்கிறது
காலம் என்னை கைவிடலாமா” என்ற பாடலும் மிகவும் உருக வைக்கிறது.
இப்படத்துக்கு தேவா இசை அமைத்திருக்கிறார்.
மெலோடி பாடல்கள், பின்னணி இசையும், தெய்வீகமான இசையை நம் காதுகளில் ரீங்காரம் இட வைக்கிறது.
அற்புதமான பாடல்கள்.
படம் முடிந்த பிறகு சாய்ராம், பாடல் எல்லோர் மனதையும் கண்களையும் குளமாக்கும்
தேவா, இவருக்கு துணையாக ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
புட்டபர்த்தி சாய்பாபா கோயிலை படமாக்கிய விதத்திலும்,காசியில் சுகாசினி போர்சனை படமாக்கிய விதத்திலும், கலிபோர்னியாவில் வாழும் ஜான் அவரின் கதையை படமாக்கிய விதத்திலும், கேமரா மிகத் துல்லியமாக அற்புதமாக படம் பிடித்திருக்கிறது.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா,
யதார்த்தம், உணர்ச்சி, தெய்வீக ஆற்றல் ஆகியவற்றுடன் ஐந்து கதைகளை இப்படத்தில் சொல்லி இருக்கிறார்.
சத்ய சாயி பாபாவின்
மேன்மையை அவரின் புனித அவதாரத்தை, விளக்கும் வகையில் தெளிவான கதையில் சிறப்பாக இயக்கி இருக்கிறார் காட்சிகள் ஒவ்வொன்றும், கவனமாக கையாண்டிருக்கிறார்எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.
Singers: Hariharan, Mano, Chinmayi, Gayatri & Kunal
இவர்கள் குரலில் பாடல்கள் தெய்வீகமாக இருக்கிறது. ரசிக்க வைக்கிறது. உருக வைக்கிறது.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் படத்தை இரண்டு மணி நேரம் கச்சிதமாக செதுக்கியிருக்கிறார். படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பும் காரணம்.
வாசுதேவனின் ,ஆர்ட் டைரக்டர் பணி
அற்புதம். பாபா கோயிலை காட்டும் பொழுதும் ,காசியில் காட்டும் பொழுதும், மயிலாப்பூரில் நடன மேடை காட்டும் பொழுதும், ஆர்ட் டைரக்டர் அருமையாக பணி புரிந்திருக்கிறார்.
கலா மாஸ்டரின் நடனப் பயிற்சி அபிராமி ஆடும் பரதநாட்டியம் ரசிக்க வைக்கிறது.
தஸ்த்தாவின்,
ஆடை வடிவமைப்பு நடித்த அனைவருக்கும் சிறப்பாக பொருத்தமாக இருக்கிறது.
Executive Producers: Kavin KR & Chidambaram M
Tamil Dialogue & Lyrics: Pa. Vijay
Telugu Lyrics: Ramajogayya Sastry
Telugu Dialogue: Dr. P. Rajendra Kumar
Hindi Lyrics: Sameer Anjaan
Hindi Dialogue: Soundararajan & Sumit Tiwari
Subtitles: Rekhs
DI: Reel Boys
Colourist:
என அனைவரும் இந்த படத்திற்காக நல்ல உழைப்பை கொடுத்து, ஒரு வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறார்கள் .
தமிழில் இது போன்ற ஒரு தெய்வீகமான படத்தை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது.
அடிதடி ,வெட்டு ,குத்து என்று எல்லா படங்களிலும் பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு, இந்த படம் நல்ல பக்திகரமான, மனதை சாந்தப்படுத்தும் படமாக, மனதை கவரும் படமாக வந்திருக்கிறது. அனைவரும்” ஓடிடி தளத்தில் இதைக் கண்டு களிக்கலாம்
இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்கள்
ரியாஸ் அகமது அவர்கள். மற்றும்
பாராஸ் அகமது அவர்கள்.
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.🙏🌷
