தமிழ் சினிமாவில் எப்போதாவது அபூர்வமான “குறிஞ்சி மலர் “போல
“காதல் “அவள் அப்படித்தான்”சேது”
போன்ற,
திரைப்படங்கள் வருவதுண்டு. அதுபோல வந்திருக்கும் படம் தான் “மாய பிம்பம்”
விளையாட்டாக பேசும் ஒரு வார்த்தை, எப்படி காதலர்கள் இருவர் வாழ்க்கையில் புயலாக மாறியது!! என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது இந்த “மாய பிம்பம்”
கடலூர் களமாகவும் அந்த மண்ணின் மைந்தர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்ட “மாய பிம்பம் “மற்ற பல படங்களைப் போல் அந்த மக்களின் வீர தீரச் சூர பராக்கிரமங்களை விதந்தோதவில்லை. மாறாக அங்கு வாழும் தப்பான தாய்க்கு பிறந்த ஏழைகுடும்ப பெண்ணுக்கும், மருத்துவக்கல்லூரி யில் படிக்கும் இளைஞனும் இடையில் அரும்பும் களங்கமில்லாக் காதலைப் பேசுகிறது. கூடவே சிதம்பரம் ஊர் மண்ணையும் மக்களையும் இயல்பான உணர்வுகளுடன் பதிவு செய்துள்ளது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கடைசி 15-20 நிமிடங்களில் நடப்பவை அனைத்தும் பார்ப்பவர்களை உறைய வைத்தது. ‘தப்பான குடும்பத்தில் பிறந்த நாயகி, கெளரவம் உந்துசக்தியாக இருக்கும் நாயகன் “சமூக யதார்த்தத்தை முகத்தில் அறைந்தார்போல் போட்டுடைக்கும் காட்சிகள் அவை.
மோகன் ,ரமேஷ், ஜீவா,
முரளி நால்வரும் நண்பர்கள்
மோகனுக்கு, பெண்களை பற்றி புரிதல் அதிகம். என்பதால் அவனை குருவாக நினைத்து மற்ற மூன்று பேரும் அவன் சொல்வதே வேத வாக்கு ,என்று நம்புகிறார்கள்.
பெண்களை எப்படி கணக்கு பண்ணுவது? பெண்களை எப்படி வசீகரம் செய்வது!! என்பதில் கில்லாடியாக இருக்கிறார் மோகன்.
ஆனால் ரமேஷ்க்கு அவன் செய்வது எதுவும் சரி இல்லை எல்லா பெண்களையும் தப்பாக நினைக்க கூடாது ,என்று எதிர்வாதம் செய்பவன்.
முரளி தனக்கொரு பிகர் கிடைக்காதா? என்று மோகன் சொல்வதெல்லாம் சொள்ளுவிட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரியில் ஒரு நர்சை காதலிக்கும் ஒரு இன்னசென்டான கதாபாத்திரம்.
ஜீவா இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கும் நாயகி சுமதிக்கும், காதல் ஏற்பட்டு நண்பன் மோகன் பேச்சைக் கேட்டு ஜீவா செய்யும் தவறு, இவர்கள் காதலை எப்படி பாதிக்கிறது!! என்பதை அவ்வளவு அழகாக சொல்லி, 2005உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும்
வந்திருக்கிறது.இந்தபடம்.
நடிகர்கள் &நடிகைகள்
இப்படத்தில் ஜானகி,(சுமதி)
என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .தப்பான தாய்க்கு பிறந்த ஒரே காரணத்துக்காக அவமானப்படுவதும், ஏழை குழந்தைகளுக்கு உதவிய நாயகனை கண்டு காதல் கொள்வதும்,
அவன் தவறான பாதைக்கு, அழைப்பதுகண்டு கண்டு கொதித்து எழுவதும், என நடிப்பில் அசத்தியிருக்கிறார் நாயகி ஜானகி.
முகபாவனையும், அந்த கல்லமில்லா சிரிப்பு, பாசத்துக்காக ஏங்கும் அந்த விழிகளும், நாயகன் எங்கு அழைத்தாலும் அவன் மீது இருக்கும் அன்பால்!! ஏன் என்ற கேள்வி கேட்காமல் அவனைப் பின் தொடர்வதும், என நவரசங்களையும் பொருந்திய நாயகியாக ஜானகி மனதில் பதிகிறார்.
ஆகாஷ்,
(ஜீவா) என்ற கதாபாத்திரத்தில் சின்ன வயது அஜித்தை ஞாபகப்படுத்துகிறார். கல்லூரி போகிறேன் என்று அப்பா, அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, சிதம்பரம் வரை சுமதியை அழைத்துச் செல்வதை குடும்பத்தினருக்கு தெரிய வர,அவன் மீது குடும்பத்தார். கோபமாக இருப்பதை கண்டு தவிப்பதும், ,அதை போனில் நண்பனிடம் சொல்லி அழும் பொழுது குடும்பமே வந்து கட்டிக் கொள்ளும் போதும் ,
கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கிறது.
நாயகியின் நிலைமையைப் பார்த்து உரு குலைந்து கிடக்கும் அவளை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு, அழும் காட்சிகளிலும், அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
விளையாட்டாக பேசிய ஒரு வார்த்தையை காதலிஎடுத்துக் கொண்டு, அவனுக்காக உயிரையே கொடுக்க முயற்சி செய்யும், அந்த டைரியை படித்துவிட்டு களங்கும் பொழுது நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.
ராஜேஷ்,(முரளி)
என்ற கதாபாத்திரத்தில் இன்னசென்டாக தனக்கொரு காதலி கிடைக்க மாட்டாளா? என்று ஜொள்ளு விடும் நண்பனாக அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார் .
ஆஸ்பத்திரியில் அந்த நர்ஸ் உடன் ஏற்படும் காதல் காட்சி தியேட்டரில் கலகலப்பை ஏற்படுத்துகிறது அந்த கட்சியை இயக்குனர் இன்னும் கொஞ்சம் அதிகம் வைத்திருக்கலாமே!!!
.அருண்குமார் (ரமேஷ் )
என்ற கதாபாத்திரத்தில் மோகன் சொல்லும் பெண்களைப் பற்றிய புரிதலுக்கு அவர் கொடுக்கும் விளக்கம் அவர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
ஹரி கிருஷ்ணன் (மோகன்) என்ற கதாபாத்திரத்தில் பெண்களின் கண் அசைவுகளை கண்டு கரெண்ட் ,மீட்டர் என்று செம ஜாலியான நாயகனாக நண்பர்களில் ஒருவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகன் ஜீவாவுக்கு தவறான அட்வைஸ் கொடுத்து செக்கப், பிக்கப் ,என்று கதையின் திருப்பு முனையாக இவர் கதாபாத்திரம் பலமாக அமைந்துள்ளது.
இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
இன்று இளைஞர்கள் ஒரு சில பேர் இவரை ஒட்டி இருக்கிறார்கள் என்பது உண்மை.
மற்றும் ஜீவாவின் அப்பா, அம்மா, இருவரும் நடிப்பும், ஜீவாவின் அண்ணன் சுரேஷ் வேடத்தில் நடித்திருப்பவர். ஜீவாவின் அண்ணியாக வரும் மணிமேகலையும், வர்ஷாவாக நடித்திருக்கும் குழந்தையும், நாயகியின் தோழியாக வரும் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும், இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். அனைவர் நடிப்பும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. வித்தியாசமான படைப்பாக இதுவரை கேள்வி பட்டிராத ஒரு காதல் படமாக வந்திருக்கிறது.
2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் காவியத்தை எதார்த்தமாக கொடுத்து இருக்கிறார்.
பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுக்கும் ராணியின்குழந்தை
காட்டப்படும் போது ,
இடைவேளை காட்சி யில் நாயகன் நாயகி பிரிவது,
நண்பர்கள், ஜாலியாக அரட்டை காட்சிகள் ,
நாயகியை பிரிந்து நாயகன் மஞ்சள் குப்பம் போகும் காட்சி, அங்கு சுமதி என்னவானார் என்ற கேள்வியை எழுப்புவது?
நாயகனைப் பற்றி அவர் அப்பா விடம் அவரது நண்பர் சிதம்பரத்தில், உன் மகன் ஒரு பெண்ணுடன் பைக்கில் போனதை பார்த்தேன் “”என்று சொல்லும் பொழுது ஜீவாவின் அப்பா, அம்மா இருவரும் நாடகம் நடிக்க, அது உண்மையாக மாறும் அந்த காட்சிகள்.
இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு ஏராளமான அருமையான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.துணைப் பாத்திரங்களும் பார்வையாளர்களின் நினைவில் வலிமையாக பதியும் படியாக அவற்றை மெனக்கெட்டு வடிமைத்திருக்கிறார் உதாரணத்திற்கு பாலசந்தரின் திரைப்படங்களைக் கவனித்தால் ஒவ்வொரு சிறிய பாத்திரத்திற்கும் பிரத்யேகமான குணாதிசயத்தைத் தந்து அவற்றை பார்வையாளர்களால் மறக்க முடியாதபடி செய்து விடுவார்.
அப்படி வடிவமைத்து இருக்கிறார்.இயக்குனர் .படம் முழுக்க வாழ்வியல் சார்ந்த எதார்த்தங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசிக்க தோன்றவில்லை!! படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து, கதையோடு ஒன்றிணைத்து, கண்களில் நீரை கசிய விட்டு, அப்ளாஸ்களை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
வாழ்த்துக்கள் சார்!!
இசையமைப்பாளர் நந்தாவின்இசையில்
“எனக்குள்ளே”பாடலும், நெஞ்சுக்குள் மாற்றம் என்ற பாடல் ரசிக்க வைத்தது.
படத்தொகுப்பாளர் வினோத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் எட்வின் பல காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் இரவு நேரத்தில் பஸ்ஸில் போகும் நாயகன் மற்றும் கோயில் ,மலைகள், மழை காட்சிகள் என பிரமாதபடுத்தி இருக்கிறார். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.
பாடல்கள் வரிகள் ரசிக்க வைக்கிறது.
மார்ட்டின் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். கோவிலில் அந்த தொங்கு பாலம், மற்றும் பல காட்சிகளில் அவரது கை வண்ணம் பளிச்சென்று தெரிகிறது.
ஸ்ரீ கிரிஸ் நடன பயிற்சியாளராக அழகாக பணிபுரிந்து இருக்கிறார் .
ஆரம்ப பாடலில் நண்பர்கள் நால்வரும் ஆடும் நடனம் ரசிக்க வைக்கிறது.
நாயகிக்கு காதல் வந்த பிறகு அந்த காட்சியிலும் ரசிக்க வைக்கிறது.
ஒப்பணையாளர் எல்லோருக்கும் நன்றாக ஒப்பனை செய்துள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சியில் சுமதி என்ன ஆனார் என்று காட்டும் பொழுது அவரது ஒப்பனை படம் பார்ப்பவர்களை உலுக்கி விடுகிறது.
ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா (AIM)
மக்களிடம் படத்தை நன்றாக கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த மாய பிம்பம்”பெண்கள் மீது இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ள தவறான புரிதலையும் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் நண்பன் ஒருவன் உசிப்பிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் என்பதையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதையும், காதலர்களுக்குள் நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்பதையும், சொல்லி இருக்கிறது இந்த படம்.
இது போன்ற படங்கள் வெற்றி பெற்று திரையரங்கில் வசூல் குவிக்கும் பொழுது மலையாள சினிமாக்களை ஓரம் கட்டிவிடும் இயக்குனர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்று பெருமைப்படலாம். எனவே அற்புதமான இந்த திரைக்காவியத்தை மக்கள் கொண்டாட வேண்டும். கண்டு களிக்க வேண்டும். இப்படம் வெற்றியடைய வேண்டும் என்பது கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள். வெல்லட்டும் “மாய பிம்பம்”🌷
அன்புடன்” கிளாசிக் சினிமா ” விஜய கோபால்.🙏
