ஜாக்கி”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

Production House PK7 Studios LLP

🧑‍💼Producers Prema Krishnadas – C Devadas & Jaya Devadas

யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியான திரைப்படம், மதுரையின் கெடா சண்டை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது,

விறுவிறுப்பான கதைக்களம் திரைக்கதை தெளிவான நீரோட்டம், போல செல்லும் இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்.

: கதை களம்:

யுவன் கிருஷ்ணா (ராமர்) ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு தனது கிடா, காளியை அன்பாக வளர்த்து வருகிறார்.

கிடா ,சண்டை யில் ரிதான் கிருஷ்ணாஸ் (கார்த்தி) கிடாயை நாயகன் ராமரின் கிடவான காளி பந்தயத்தில் வெல்கிறது. மதுரை ஜாக்கி பதக்கத்தை நாயகன் வெல்கிறார்.

அது ராமருக்கும் கார்த்திக்கும் பகையாய் வந்து முடிகிறது.

இதற்கிடையில் அம்மு அபிராமியும், யுவன் கிருஷ்ணாவும் காதலிக்கிறார்கள்.

ரிதான் கிருஷ்ணாஸ் நாயகனின் ஆட்டுகிடாவான காளியை ,வென்றே ஆக வேண்டும் அந்த ஜாக்கி பதக்கத்தை மீட்க வேண்டும். என்று கங்கணம் கட்டிக்கொண்டு மீண்டும், ஒத்த பாளையத்தில் நடக்கும் கிடா சண்டைக்கு அழைக்கிறான்.

ராமர் மறுத்த போதும் அவனை சீண்டி பந்தயத்திற்கு சம்மதிக்க வைக்கிறான். அந்தப் பந்தயத்தில் ஆட்டுக்கிடாவான காளியின் மண்டை உடைந்து கார்த்தியின் கைவசம் ஆட்டுக்குட்டி காளி செல்கிறது.

உண்மையில் இங்கு ‘களம்’ என்பது கிடா சண்டையல்ல. மனித உணர்வுகளுக்கு இடையிலான போராட்டமே களம். கிடா, சண்டை சில இடங்களில் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால் மனித உணர்வுகளுக்கு இடையிலான போராட்டம்தான் படம் முழுதும் முன்வைக்கப்படுகிறது. இது எளிமையான நாயகனுக்கும் வசதி படைத்த வில்லனுக்கும் இடையிலான மறைமுக ‘பந்தயம்தான் இந்த போட்டியில் எப்படி வீழ்த்தப்படுகிறோம் என்பது ஆட்டுக்குதெரியாது. இந்த போட்டியில் அநீதியான விதிகளை உருவாக்குபவராக சிவபாலன் இருக்கிறார் பகையை நேரடியாக எதிர்கொள்ளாமல், தனது தந்திரங்களால் வீழ்த்த நினைக்கும் விளையாட்டுக்கான ‘சூதுகளம்’ இது.

திரைப்படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் அதன் மதுரைத்தன்மை. தென்மாவட்டத்தின் கிடா பந்தயத்துக்கு கொடூரத்தையும் வெளியில் அன்பொழுகத் திரியும் மனிதர்கள் எப்படி போட்டியில் வன்முறையில் ஊறிப்போனவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் முகத்தில் அறையும் எதார்த்தத்துடன் பதிவு செய்துள்ளது.

அதற்குப் பிறகு ராமர் காளியை மீட்டாரா?
தன் காதலியான அம்மு அபிராமியை கைப்பிடித்தாரா?

இறுதி பந்தயத்தில் கார்த்தியின் ஆட்டு கிடாவுடன் ,மோதி
மதுரை ஜாக்கி பட்டத்தை வென்றாரா ?என்பதே கதை களம்.

நடிகர்கள் &நடிகைகள்
யுவன் கிருஷ்ணா

ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கிடா பந்தயத்துக்கு தனது ஆட்டுக்கிடா ,காளி மீது உயிரையே வைத்திருக்கும் கதாபாத்திரத்தில், அற்புதமாக நடித்திருக்கிறார்.
காளி என் உயிர் டா!! என்று அதன் மீது பாசத்தை கொட்டி, ஆட்டுக்கும், தனக்கும் இருக்கும் உறவை அருமையாக சித்தரித்து இருக்கிறார்.

வில்லன் கார்த்தியை மீன் மார்க்கெட், என்று அழைத்து தன் சகோதரியின் மகள்காதுகளை சேதப்படுத்திய கரங்களை வெட்ட துடிக்கும் போதும் ,
சூதுவைத்து களத்தில் வென்று விட்டான். என்று கொதிக்கும் பொழுதும். தன்னுடனே இருக்கும் பெரிய சாமியை திட்டி அனுப்பி விட்டு, மீண்டும் காளியை காப்பாற்றி ய போது கட்டி அணைக்கும் பொழுது, நடிப்பில் இமயமான உயர்ந்து நிற்கிறார்.

ரிதான் கிருஷ்ணா

காப்ரா கார்த்தி, என்ற வில்லன் வேடத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் ரிதான் கிருஷ்ணாஸ்.

தன்னுடைய ஆட்டுக்கிடா, பந்தயத்தில் தோற்றுவிட்டது. என்று கொந்தளிக்கும் பொழுதும், நாயகன் ராமரை பழிவாங்க துடிக்கும் பொழுது, வீடு தேடி சென்று ராமரை, தேடி விட்டு அவர் சகோதரியும், சகோதரி மகள் இனியாவையும் மிரட்டி விட்டு வரும் பொழுதும், கிளைமாக்ஸ் காட்சியில் தன் தவறை உணர்ந்து நாயகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும், மிரள வைக்கிறது அவர் நடிப்பு, படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பு மிகப்பெரிய பலம்.

அம்மு அபிராமி

மீனாட்சி ,என்ற கதா பாத்திரத்தில் அழகான நாயகியாக வந்து போகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனுக்கு என்கரேஜ் செய்து ஜெயிக்க வைக்கும் இவரது கதாபாத்திரம் சிறப்பு சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றும் இப்படத்தில் நடித்த சர்க்கரை, என்ற கதாபாத்திரத்தில் மது சூதனராவ், பெரியசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்தன் மோகன் ,நாயகனின் சகோதரியாக சரண்யா ரவி, அய்யாவு வேடத்தில் நடித்த பத்மன், நாயகனின் நண்பனாக வரும் யோகி, சாய் தினேஷ் , சிதம்பரம், பிரவீன், ஆதவ் ,ஈஷா ஆகியோரும் தங்கள் நடிப்பில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்ஆட்டுக்கிடாவாக, வரும் காளி மனதில் நிற்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

உதயகுமாரின், ஒளிப்பதிவு மதுரை யானைமலை ,ஒத்த பாளையம் ,மற்றும் கிடா பந்தயம் நடக்கும் இடம், என எல்லா காட்சிகளையும் அழகாகவும் ,பந்தய போட்டிகளை விறுவிறுப்பாகவும் சண்டைக்காட்சிகளில் அனல் தெரிவிக்க படமாக்கி இருக்கிறார்.

ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளர்
காரணம்.

🎶 சக்தி பாலாஜி இசையில் தென்னாட்டு சிறுக்கி,  மற்றும் அலங்காரி, பாடல் ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில், பின்னணி, இசை மிரட்டலாக இருக்கிறது.

சினேகன் ,லோகேஷ், லாவர்தன் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

பாப்பநாடு உதயகுமார் , ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் நாயகனின் வீடு, மற்றும் பந்தயம் நடக்கும் இடம், மதுசூதன் ராவ் மகள் திருமணம்நடக்கும் இடம், கோயில் என ஆர்ட் டைரக்டரின், கைவண்ணம் அருமையாக இருக்கிறது.
அசார் ,ராதிகா, ரிச்சி நடன பயிற்சியாளராக பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நடனம் ரசிக்க வைக்கிறது.

பிரபு ஜாக்கி ,சண்டை பயிற்சியாளராக விறுவிறுப்பான சண்டைக்களம் அமைத்திருக்கிறார் .

பாண்டியராஜனின் ஒப்பனை எதார்த்தமாகவும், கதைக்களத்தை சார்ந்திருக்கிறது, அம்மு அபிராமியின் ஒப்பனை ரசிக்க வைக்கிறது.

குழந்தை இனியாவுக்கும், சரண்யா ரவிக்கும் எளிமையான அந்த ஒப்பனை மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

மற்றும் இந்த படத்தின் வெற்றிக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

🎭Creative Producer – RP. Bala
🔊Sound Mix – MR.Rajakrishnan
🔊 Dialogues: Dr. Pragabhal, Suriya Pandiyan, Surya Bala
Costume Designer – Joshua Maxwel J
Chief Associate Director – Unais.S
Sound Design – Vicky
Colorist – Ranga
Studio – Prasad Lab
: 🐐🔥 – Ranga
Studio – Prasad Lab
Production Controller – S.Sivakumar
Production Executive – S.Rajkamal
Publicity Designs & Motionposter – Kanni Studio
Singers – Kapil Kapilan [Thennattu Siruki], Sathya Prakash, Rakshita Suresh [Alangaari], Vrusha Balu [Madura Pura Rani]
Operative Cameraman – L.K. Keerthi Basu
Associate Cameraman- Murali Sankar
Assistant cameraman
Rajesh Ravikumar, M.G. Ishaq
Stills – V.S Anandhakrishna, Theni Anbu
Pratheesh Sekhar-kerala
CO – Art Director – K. Ashokan
PK7 Studio LLP Managers – Rahul Anjumoorthy , Mukund. G
Associate Directors – Shafin Sulfiker, Shiva
Assistant Directors – Abu, MI. Abimanyu
Assistant Art Directors – G. Guhan, M. Bala mathavan, S. Arun Sundaresan, P. mukilan
DIT – Flash Storage
Team Head : Swathik Raj S
DIT – S Jagadeesan Arulraj, Christy
Digital marketing :
Abijith Joju Kerala
Vision events promotions
Sadam Shariff PK7 Team
Starzone.live
Digital Entertainment Company
Cinerush

என்று இந்த படத்திற்கு நிறைய பேர் திரைக்கு முன்னாலும் ,திரைக்கு பின்னாலும், தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள் .அந்த உழைப்புக்கே ற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும் .ஒரு விறுவிறுப்பான பந்தயக்கதை, நிச்சயம் மக்களை கவரும்.

செடி, கொடிகளை தின்னுகின்ற செம்மரி ஆடு!வெற்றிக்கொடி நாட்டி விட்டதென்று கொண்டாடுகிறது தமிழ்நாடு”

இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் திரு. நிகில்முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்🙏