KJB டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ’ஹாட் ஸ்பாட் 2much ‘ வித்தியாசமான படமாக வெளிவந்துள்ளது.
முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக இருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.
இந்த ப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அனைவர் நடிப்பும், இயல்பாகவும், எதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது.
”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போலவும் அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.
படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கும் திரை க்கதை. இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவராசியமான திருப்பங்களுடன் தந்து இருக்கிறார் இயக்குனர். இந்த படத்திலும் இயக்குநராக நடித்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்
கதை களம்
இயக்குனரின் வித்தியாசமான பார்வை, எதிர்காலத்தின் மீது இருக்கும் தெளிவான நோக்கம். இவைகள் இந்த படத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முதல் பாகம் மாதிரியே இந்த படமும் “ஒரு இயக்கத் தயாராக இருப்பவர், தயாரிப்பாளரிடம் கதை சொல்றார்” என்ற ஃபார்மாட்டில்தான் போகுது. ஆனா இந்த தடவை பேசப்படுற விஷயங்கள் இன்னும் கொஞ்சம் தீவிரம். வித்தியாசமான ஒரு கருவை கையில் எடுத்து, சமூகத்தில் பேசத் தயங்குற விஷயங்கள், ரசிக வெறி, பெண்ணின் சுதந்திரம், நாகரிகம் – மரியாதை, தலைமுறை இடைவெளி, காதல், டைம் டிராவல் வரை எல்லாத்தையும் காமெடி + சீரியஸ்னு கலந்து சொல்ற முயற்சி.பாராட்டதக்கது. ஹாலிவுட் பாணியில் இயக்குனர் கதை சொல்லும் பாங்கு மிகவும் ரசிக்க வைக்கிறது.
ரசிக வெறியை மையமாக்கிய கதையில, அந்த வெறி எந்த அளவுக்கு போகுது, அது வாழ்க்கையை எப்படிச் சீரழிக்குது என்பதை எம்.எஸ். பாஸ்கர் மிரட்டலான நடிப்புல அழுத்தமா காட்டுறாங்க. ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் மாதிரியான இளைஞர்கள் “பட்டும் திருந்தாத ரசிகர்கள்” மாதிரி நடித்திருப்பது படத்தின் பலம்
உணர்ந்து.நடித்துள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறையினர், ‘என் உடை, என் சுதந்திரம்’ன்னு பேசுற பெமினிச் சிந்தனை, கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்–பெண் எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களை சஞ்சனா திவாரி – தம்பி ராமையா அத்தியாயம் வழியா தெளிவா சொல்றாங்க. அந்த அப்பா–மகள் உறவுல இருக்குற சங்கடம், சமூக அழுத்தம் எல்லாம் ஓரளவுக்கு வேலை செய்கிறது
படத்தில் வரும் அந்த எபிசோட் அருமையாக இருக்கிறது. வெல்டன்.
பெண்ணியம் மற்றும் ,ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் மனதை புரிந்துக் கொள்ளாத இளசுகள், காதலின் தற்போதைய நிலையை எண்ணி கவலை கொள்ளும் ஆண்கள், ஆகிய மூன்று தரப்பினரையும் அலசும் வெவ்வேறு கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம் உலகளவில் பேசுபொருளாக உள்ள ஒரு விசயத்தை பற்றி அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
மக்களுக்குபுரிய வைக்க முயற்சிக்கிறார் ? என்பது தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.
ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே கைகொடுக்கிறது அதே சமயம், முதல் பாகத்தைப் போல் பெரும் சர்ச்சையாக அல்லாமல், ஒரு எல்லைக்குள் வலம் வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், பேசும் ஒவ்வொரு பிரச்சனையிலும், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசி, நடுநிலையாக நின்றிருக்கிறார்.
நியாயத்தை புரிய வைத்துள்ளார் என்று சொல்லலாம்.
கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போதைய காதலின் நிலையையும், பெண்களின் மனங்களையும் நினைத்து கவலை கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அவரது நண்பராக நடித்திருக்கும் அமரனின் டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கிறது.
அழுத்தமான கதாபாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது அதிரடியான செயல் மூலம் 2கே கிட்ஸுகளுக்கு அதிரடியான அறிவுரை வழங்கி தம்பி ராமையா அதிர்ச்சியளித்திருக்கிறார்.
நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்
சதிஷ் ரகுநாதன் இசையில் , பீஜியம் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
யு.முத்தையனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விசயங்களை சுவைபட சொல்வதோடு, அதில் இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும் நியாயத்தை சமமாக பேசி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்.
இவர் சிந்தனை சமூக பிரச்சனைகளை விவாதிப்பது மட்டும் இன்றி, அதில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து பார்வையாளர்களிடம் பல கேள்விகளை முன் வைத்து, சூடான விவாதங்களும், கேள்விகளும் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருப்பது பாராட்டுக்குறியது
அடியே, திட்டம் இரண்டு படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கி ,தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
’ படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ‘
மக்கள் தொடர்பாளர்
வேலு, படத்தை மக்களிடம் கொண்டு போய் நல்ல முறையில் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த படம். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்துக்களை, சொல்லி இருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்.
