மோகன் ஜி இயக்கியுள்ள”திரௌபதி 2. இந்தப் படத்தில் ,ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரக்சனா இந்துசூடன், ‘திரௌபதி தேவி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை களம்
சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான்.. இதை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்க, இதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த தரமான சம்பவங்கள் என்ன?
என்பதையும்,14ஆம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட ரத்த சரித்திரத்தை உள்ளடக்கிய இந்துஸ்தானின் கலாச்சார பரபரப்பில் சுல்தானியர்கள் நிகழ்த்திய ஒரு தீராத அதிர்வை சொல்கிறது .
திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு நல்லாட்சி குறைந்த பொய் சாலா பேரரசர் மூன்றாம் வல்லாளவை மையப்படுத்தி கதை நகர்கிறது .
பேரரசிற்கு விசுவாசமான சிற்றரசராக விளங்கிய சேந்தமங்கலம் காடவராயரின் அசைக்க முடியாத நம்பிக்கையும் வீரமும் இந்த படத்தின் கதை கருவாக இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
ஒரு மன்னனுக்கும் சிற்றரசனுக்கும் இடையிலான அந்த உன்னத விசுவாசம் படம் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது .
முதல் பாதி சீன்கள் எல்லாம் வேகமாக நகர்ந்தது. டக்குனு முடிஞ்சது போல் இருந்தது. திரை க்கதை மற்றும் பாடல்கள் பல சீன்களுக்கு நல்ல உயிரோட்டமாக இருந்துது. கடைசியில் வரக்கூடிய திரௌபதி போர்ஷன் நல்லா பண்ணிருந்தாங்க. சில ட்விஸ்டுகளும் படத்தில் இருக்கு. மேக்கிங் பொறுத்தளவில் ஏஐ, லைவ் லொகேஷன், சிஜி என எல்லாத்தையும் போட்டு மேக் பண்ணிருக்காங்க.. லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் நன்றாக உள்ளது.
வரலாற்றின் கசப்பான பக்கங்களை கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அணுகாமல் மறைக்கப்பட்ட உண்மைகளை இன்றைய தலைமுறைக்கு தெளிவுபடுத்தும் வரலாற்று படமாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் வசனம் நன்றாக இருக்கிறது.
” எங்கிருந்தோ வந்த வர்கள் நம்மை ஆள நாம் தான் காரணம் நமக்குள் இருக்கும் பிரிவினையை சொல்கிறார் இயக்குனர் .
“ஒரு தேசம் மேன்மைப்படுவது ஆண்களால் மட்டுமல்ல பெண்கள் செய்யும் தியாகத்தினாலும் இன்றி பெண்களைப் போற்றி இருக்கிறது இந்த படம்.
“பெண்மையின் வீரத்தையும் எடுத்துக்காட்டுவதாக நிறைய காட்சிகள் அமைந்திருக்கிறது .
நடிகர்கள் & நடிகைகள்
ரிஷி ரிச்சர்ட்
தனித்துவமான நடிப்பில் படத்துக்காக, அவர் காட்டிய அர்ப்பணிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது. வெளிநாடுகள் சென்று பயிற்சி எடுத்து வந்து .
சண்டைக் காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பாக நடித்திருக்கிறார்.
தன் மனைவியே
தன் மீது சந்தேகம் பட்டதற்காக தன் உயிரைக் கொடுக்கும் அந்த காடவராயன் கதாபாத்திரம் அவர் நடிப்பில் ஜொலிக்கிறது.
மற்றும்
வீரசிம்மன் என்ற தளபதி கேரக்டரில் வரும் ரிச்சர்ட் நடிப்பு, சண்டைக்காட்சிகள், ராஜ விசுவாசம், எதிரிகளை புத்திசாலிதனமாக அணுகும் விதம் ரசிக்க வைக்கிறது.
நட்டி நட்ராஜ் மன்னராக வந்து மூன்றாம் வல்லாளராக அசாத்தியமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தன் தளபதி மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர் திரௌபதியை மணமுடிக்க உத்தரவிடுகிறார்.
80 வயது அரசராக மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் நட்டி நடராஜ் .
நாயகியாக ரக்ஷனா இந்து சூட்டன்
படத்தின் பலம் இவருடைய அழகு, டயலாக் டெலிவரி, வீரம், கணவனே துரோகம் செய்தாலும் அவனை தள்ளி வைப்பது, பிறகு தவறு செய்து விட்டோம் என்று துடிப்பது ,என படத்திற்கு 100% பொருந்தி இருக்கிறார்
அருமையாக நடித்திருக்கிறார். திரௌபதிக்கேற்ற வீர தீரமான முகம் அவர் நடிப்பில் ஜொலித்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்து தனக்கு துரோகம் செய்த தாரா சூதனை பழிவாங்கி, மதுரை சுல்தானை பழி வாங்கும் காட்சியில் திரௌபதி நடிப்பு அற்புதம்
அவர் கேரக்டர், அவர் வீரத்துடன் செய்யும் விஷயங்கள், கிளைமாக்சில் அவர் பொங்குவது மெய்சிலிர்க்க வைக்கிறது. வீர தமிழ் பெண்ணாக அவர் காண்பிக்கப்படுவது சிறப்பு.
மற்றும்
வில்லன்களாக வரும் டில்லி சுல்தான் (சிராக் ஜானி), மதுரை தம்பானி (தினேஷ் லம்பா), தேவகிரி சுல்தான் பல்வான் ஆகியோர் நடிப்பு, அவர்கள் செய்யும் செயல்கள், டயலாக் ஆகியவை உண்மையிலே 3 பேர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் நடிப்பு அப்படி. அந்த காலத்தில் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்து இருக்கிறார்கள். தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற எப்படியெல்லாம் மக்களை, ஆட்சியாளர்களை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். மத மாற்றங்கள் எப்படி நடந்தன என்பதை பல சீன்களின் விரிவாக சொல்லியிருக்கிறார் மோகன்.ஜி.
மற்றும் வேலராமமூர்த்தி ராஜநாயகம் கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் கம்பீரமாக நடித்திருக்கிறார்.
.ஜி.மகேந்திரன் சம்பந்தப்பட்ட ஆன்மிக சீன், அந்த ராமர் பாடல் பக்தி பரவசம்
இயக்குனர்
இயக்குனர் மோகன் ஜி, இந்தப் படத்துக்காக கடும் உழைப்பை கொட்டி உருவாக்கி இருக்கிறார். பிரமாண்டமான படம் எடுக்க வேண்டும் என்று அவரின் கனவு நனவாகி இருக்கிறது.
14 ம் நுாற்றாண்டில் டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட அவர் தம்பி பல்வான், மதுரையை ஆண்ட தம்பானி ஆகியோரால் வட தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள். மதம் மாற மறுத்த மக்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்கள். இவர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடியவர்கள் யார்? அவர்களுக்கு நேர்ந்த கதி ஆகியவற்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மதம்
மாறினால் வரி கட்ட வேண்டாம் .என்று ஆசை காண்பிக்கப்பட்டார்கள். மதம் மாற வைக்க, அன்றைய ஆட்சியாளர்களை எப்படி சித்ரவதை செய்தார்கள். என்பதை பல வரலாற்று சம்பவங்களுடன், நெஞ்சு பதைக்கும்படி சொல்லியிருப்பதில்
இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.
பிலிப் பார் சுந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் காட்சிகளை படமாக்கிய முறையில் சிலிர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
பார்வையாளர்களை நிச்சயம் வியக்க வைத்திருக்கிறது விசுவலாக பல ஆச்சரியங்களும் சிலிர்ப்பான சில விஷயங்களையும் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குறிப்பாக போர் சூழ்ச்சிகளை மிக எதார்த்தமாக அதைவிட சமரசம் என்று சொல்லி இருக்கிறார் .அந்த காலத்துக்கு அழைத்துச் சென்று படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
ஜிப் ரனின், இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். பின்னணி, இசை படத்தை தூக்கி நிறுத்திருக்கிறது.
, எம்கோனோ பாடல் ஓகே.
அந்த சுல்தான் அரண்மனை பாடல் சூப்பர் !!
ஆர்ட் டைரக்டர்
14 நுாற்றாண்டு கோட்டை, படைகள், அரண்மனை, போர், கோயில்கள் ஆகியவற்றை கமலின் ஆர்ட்
ஒர்க் சூப்பர்!!!
சுந்தரின் சண்டைக் காட்சிகளும் ஓகே.
புத்திசாலிதனமான
சண்டைக் காட்சி அமைப்பு பல இடங்களில் கைதட்டல் வாங்க வைக்கிறது.
ஒப்பனையாளர் கச்சிதமாக பணி புரிந்திருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு கச்சிதமாக இருக்கிறது.
மொத்தத்தில்
திரைக்கதையில் விறுவிறுப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் பரபரப்பு.
சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பு. வரலாற்று படம் என்றாலும் ஒரு வித முழு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
அரசர், தளபதி, உறவுமுறை, குடும்பம் அவர்களின் கேரக்டரில் திருப்பங்கள், பரபரப்பு அனல் தெறிக்கும் வசனங்கள் நிறைந்து காட்சிகள் போராடிக்காமல் இருக்கிறது . இந்திய, தமிழக வரலாற்றின் இன்னொரு பக்கத்தை, மதத்தின் பெயரில் மக்கள், அரசர்கள் அனுபவித்த கொடுமைகளை துணிந்து சொன்ன விதத்தில், மதத்தை, மக்களை காக்க பலர் செய்த தியாகத்தை விவரித்து சொன்ன விதத்தில் திரெளபதி 2 முக்கியமான படமாக அமைகிறது.
வெற்றி பட்டியலில்
மக்கள் தொடர்பாளர்கள்
திரு.சுரேஷ்சந்த்ரா&
திரு. அப்துல் நாசர் அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌷
