மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.
அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்,
குகன் சக்வர்த்தியார். திரைப்படக் கல்லூரியில் படித்தவர், அதனால்தான் 21 கிராப்ட்களையும் கையாண்டுள்ளார். ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல் எழுதியுள்ளார், தத்துவப் பாடலும் பாடியுள்ளார்
இந்தப் படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
குகன் சக்கரவர்த்தி யார்.
கதை களம்
தூத்துக்குடியில் வெள்ளைக்காடு என்ற பகுதியில் குறுநில மன்னராக இருப்பவர் சிவனாண்டி என்கிற அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தி யார்)
அவருடைய அன்புக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் எல்லோரும் இவர் மீது அன்பை பொழிகிறார்கள்.
பிளஸ் டூ படிக்கும் காயத்ரியை கடத்தல் கும்பல் கடத்தும் பொழுது, அண்ணாச்சி காப்பாற்ற, காயத்ரி அண்ணாச்சி மீது காதல் கொள்ள திருமணம் நடக்கிறது. முதல் இரவில் காயத்ரி போடும் நாலு வருட கண்டிஷனால் மனம் விரக்தி அடைகிறார்.
அண்ணாச்சி
அதன் பிறகு ஜெயக்குமார் மனைவியான பாலாமணி கடலில் சாகப்போனவரை காப்பாற்றுகிறார். பிறகு பாலாமணியும் அண்ணாச்சியும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர்.
அண்ணாச்சியிடம் வேலை செய்யும் வீரமணி அண்ணாச்சிக்கு துரோகம் செய்கிறார். அதன் பிறகு தோண்டியை வைத்துக் கொள்கிறார் அண்ணாச்சி .
மனைவியுடன் நன்றாக வாழ முடியவில்லை. பாலாமணியை இறந்து போன ஜெயக்குமார் பேயாக மிரட்டுகிறார் .என்ற விரக்தி ,அவர் எம்.பியாக போவதை அந்த ஊரில் உள்ள மந்திரி எதிர்க்கிறார் என்பதற்காக மந்திரியை தோண்டி வைத்து சாகடிக்கிறார். பாலாமணி அண்ணாச்சியின் குழந்தையை சுமக்கிறார் என்றதும் அந்த குழந்தையை கலைக்க சொல்கிறார் அண்ணாச்சி இதனால் பாலாமணி அண்ணாச்சி மீது வெறுப்பு கொள்கிறார்.
அதன் பிறகு அண்ணாச்சியும் காயத்ரியும் ஒன்றாக இணைந்தார்களா ?
பாலாமணியை மிரட்டியது ஜெயக்குமாரின் பேயா? அல்லது சூழ்ச்சியா ?
மந்திரியைக் கொன்ற அண்ணாச்சி மீது மக்கள் என்ன சொன்னார்கள்?
அண்ணாச்சிக்கு துரோகம் செய்த வீரமணியை கண்டுபிடித்து அண்ணாச்சி என்ன செய்தார்?
அப்துல் கலாம் ஐயா அவர்கள் “கனவு காணுங்கள் என்று சொன்னதை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என்று அண்ணாச்சி சொல்வது ஏன் ?
முதல்வருக்கு வங்காள விரிகுடாவை திராவிட விரிகுடா என்று பெயர் வைக்க கோரிக்கை வைத்தது ஏன் ?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லி !!அதன் முடிச்சுகளை அவிழ்த்து, படத்தை விறுவிறுப்பாகவும், ரசிக்கும் வண்ணமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் .பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. திரைக்கதை சீராக செல்கிறது .படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் கச்சிதமாக ரசிக்கும் பாணியில் கொடுத்தது மிகச் சிறப்பு
: குகன் சக்கரவர்த்தியார்
கதாநாயகனாக நடித்து ,இயக்கி உள்ளார். இவர், கின்னஸ் சாதனைக்காக இசை, ஒளிப்பதிவு, பாடல், நடனம், ஸ்டண்ட் உள்பட 21 திரைப்பட பொறுப்புகளை ஏற்று
ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் நடிப்பில் நவரசங்களை கொட்டி ,நம்மை வியக்க வைக்கிறார். அழுகை, சிரிப்பு, விரக்தி ,ஏமாற்றம், பயம் ,அச்சமின்மை என அனைத்து முக பாவங்களும் நம்மை கவர்ந்திருக்கிறது.
இசை நன்றாக இருக்கிறது. அவர் பாடிய தத்துவ பாடல் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல படைப்பாளி கிடைத்திருக்கிறார்.
சிவனாண்டி ,என்கிற அண்ணாச்சியாக படம் முழுக்க ஒற்றை ஆளாக படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார்.
கதாநாயகிகளாக ஜெயஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
மூவரும் காயத்ரி, பாலாமணி ,என அழகு பதுமைகளாக சிறப்பாக நடத்தி ருக்கிறார்கள்.
பொன்னம்பலம்,
கப்பார் பாண்டியாக
ஒரு சண்டைக்கு வந்து கர்ஜித்து இறந்து போய் விடுகிறார்.
வாசு விக்ரம், அண்ணாச்சியின் மாமனாராக வந்து மகள் வாழ்க்கையை நினைத்து அழுது புலம்புவது உருக்கம்.
வையாபுரி இதுவரை நடித்திராத பச்சைக்கிளி “என்ற வேடத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
“நான்கு வருட வாழ்க்கையை ஒரே நாளில் யோசிப்பதுபோல் இந்த படத்தின் கதை அமைத்துள்ளார் இயக்குனர். கிராமத்தில் நேர்மையாக வாழும் இளைஞன், ஒரு பெண் மீது காதல்வசப்படுவது, அந்த பெண்ணோ அவன் ஏழை என்பதால் உதாசீனப் படுத்த, இதனால் அந்த இளைஞன் இரவு-பகலாக உழைத்து பணக்காரன் ஆகிறான். என்பது
பின்னணி கதையின் சுவராஸ்யமான பகுதி.
தூத்துக்குடியை பின்புலமாக வைத்து
உருவான படம் என்பதால் சண்டைக் காட்சிகளுக்கு கேங்ஸ்டர் காட்சிகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது.
பெரும்பகுதி படப் பிடிப்பு கடலோர பகுதிகளில் நடத்தி
கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறார்கள்.
சென்னையில் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடங்களில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.. படத்தில் குதிரை, ஹெலிகாப்டர், மற்றும் யானைகளை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் கள்
அந்த காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது .படத்தை
ஐயா அப்துல் கலாம் அவர்கள் சமாதியில் மனைவியை கோயிலுக்கு போகலாம் என்று சொல்லிக்கொண்டு அவர் சமாதி தான் கோயில் என்று சொல்லி,அழைத்துச் சென்று படத்தை முடித்து இருப்பது சிறப்பு.
. 21 பொறுப்புகளை ஏற்று இயக்குனர் படத்தை கின்னஸ் சாதனைக்காக உருவாக்கி இருக்கிறார்.அவரது
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்.
