வித் லவ் (With Love ) “திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love ) திரைப்படம். பள்ளி காலத்து இளமை நினை வுகளை ,அசை போட வைக்கிறது . வசந்த காலத்தில் பூத்த வண்ண மலர்கள் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி உற்சாக சாரலாக பண்ணீர் தெளிக்கிறது. நினைத்தாலே இனிக்கும் வகையில் படம் பார்ப்பவர்களை மெய் மறக்கச் செய்து ஒவ்வொருவரின் பள்ளி வாழ்க்கையை அசை போட வைக்கிறது இந்த படம்..

கதை களம்

சத்யா ,தினேஷ் நண்பர்கள். மோனிஷா, வேணு சந்தியா, மூவரும்தோழிகள். இவர்களுக்கு இடையே ஏஞ்சலாக அனுஷா வருகிறார்.இதில் பாலாஜி என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. பள்ளி ஆசிரியர் சாமிநாதன் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்

இவர்கள் எல்லா கதாபாத்திரத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து ,கதையை புதுமையாக, வித்தியாசமாக, இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் வரிசையில் ,மதன் சொல்லி இருக்கிறார் அத்தனையும் புதுமை, அத்தனையும் இளமை, அத்தனையும் கவிதை, காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறது.

பள்ளி பருவத்தில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி, காதல், ஏக்கம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர் மதன். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.

நாயகன் நாயகி இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்!
சத்யா ,மோனிஷா காம்பினேஷன் படத்துக்கு இளமையையும், கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘

சத்யா அக்கா வற்புறுத்தி மோனிஷாவை பெண் பார்க்க போகிறார். அங்கு இருவரும் மனம் விட்டு பேச தங்கள் பள்ளி பருவத்தில் நடந்த காதல் கதையை பகிர்ந்து கொள்ள …சத்யாவுக்கு ,அனிஷா மீது காதல் ,மோனிஷாவுக்கு . பாலாஜி மீது காதல். சத்யா நண்பன் தினேஷ் ,அனிஷா இருவரும் காதலிக்க, சத்யா துடித்து போகிறார்.

மோனிஷா, தோழி சந்தியா செய்த சின்ன தவறான செயலால் பாலாஜி மோனிஷா வை ஏறெடுத்துப் பார்க்க மறுக்கிறார் .இப்படி இருவர் காதலும் சொல்ல படாத காதலாக மாறி விட , இப்போது இருவரும் தங்கள் பழைய காதலர்களை சந்திக்க புறப்பட்டு திருச்சிக்கு செல்கின்றனர். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே கதை களம்

நடிகர்கள்&நடிகைகள்
அபிஷன் ஜீவிந்த்

சத்யசீலன்,என்ற கதாபாத்திரத்தில் கலக்கிவிட்டார்.

நமது பள்ளி நினைவுகளை, மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கிறது அவரது நடிப்பு. கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதம், எமோஷனலான காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் மிரட்டி விட்டார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம்இயக்குனராக கவனம் ஈர்த்த இவர் இதில் நாயகனாக நடித்துள்ளார்.

புதுமையான உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருந்தது.அவர்நடிப்பு அபிஷன் ஜீவிந்த் கலக்கிட்டீங்க .

பக்கத்து வீட்டு பையனை பார்ப்பது போல ஒரு தோற்றம் வெள்ளந்தியான பேச்சு வெகுளியான தோற்றம் அச்சு அசலாக சத்யா, கதாபாத்திரத்திற்கு 100% பொருந்தி போகிறார்

அனஸ்வரா ராஜன்

மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு ஃபயர் பெண்ணியம் அழுத்தமாகப் பேசப்பட்டுள்ளது. நல்ல நடிப்பு. செம ஸ்கோர் செய்திருக்கிறார்.

காவ்யா

அனிஷா ,என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். அவரின் வசீகர சிரிப்பு, வெள்ளந்தியான பேச்சு,சத்யாவை மட்டுமல்ல நம்மையும் கவர்ந்திழுக்கிறார். சத்யா, அனிஷாவுக்கு திருமணம் ஆன பிறகு ,தேடி வந்து காதலை சொல்லும் பொழுது “ஏன்டா முதலிலேயே சொல்லலை “என்று கேட்கும் பொழுது மனதை வென்று விடுகிறார். அனிஷா மறக்க முடியாத கதாபாத்திரம். அற்புதமான பாத்திரப்படைப்பு.

சரவணன்

பள்ளி ஆசிரியராக சாமிநாதன், என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் சத்யாவிடம், அடி வாங்கிவிட்டு திரும்பத் திரும்ப அவரைப் பார்த்துக் கொண்டு செல்வதும் பிறகு ,மன்னிப்பு கேட்க வரும் சத்யாவை கட்டித்தழுவுவது, என மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

மற்றும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் , தேனி முருகன் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர்

லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார். ஃபீல் குட் படமாக வந்திருக்கிறது. இயக்குநர் மதன் தனது அறிமுக படத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ளார். நிறைய இடங்களில் மனதை தொட்டு விட்டு செல்கிறார். இயக்குனர் ஜேம்ஸ் உடன், சத்யாவும் தினேஷும், சண்டை போடும் காட்சி, அவள் வருவாளா? என்ற பாடலை அற்புதமாக சரியான இடத்தில் புகுத்தி இருப்பது, “உன் அப்பாவிடம் ஒரு நாளாவது பேசி இருக்கிறாயா” என்று மோனிஷா கேட்பது!!

நாயகனின் அப்பா தேனி முருகன், உன் அம்மாவை மறக்க முடியவில்லை நாலு பேருக்கு சாப்பாடு போட்டால்தான் நிம்மதி!!! என்று சொல்லும் காட்சி, இப்படி எத்தனையோ காட்சிகளில் குட்ஃபீலை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், மற்றும் மகேஷ் ராஜ் என இருவருக்கும் வாழ்த்துகள். நல்ல படத்தை கொடுத்ததற்காக…

இசை அமைப்பாளர்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் , இசை மேஜிக்கல் செய்து உள்ளார் .

“அழகாகத்தான் சிரிச்சா லே ”
“அய்யய்யோ காதலே” ”
“மறக்க முடியாத மனசு”
“காதல் மழை “என சூப்பரான ஆல்பம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பாடல்களை மோகன்ராஜன், உமாதேவி, மதன் எழுதியிருக்கிறார்கள் பாடல்கள் ரசிக்க வைக்கிறது .

ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமை. K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார்
அரங்க அமைப்புக்கள் சூப்பர்!!

ஆடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார். எல்லோருக்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது ஆடை வடிவமைப்பு.

நடன பயிற்சி அமைத்திருக்கிறார் சந்தோஷ். “அய்யய்யோ காதலே” என்ற பாடல் நடனம் ரசிக்க வைக்கிறது.

Action: PC Stunts
Sound Mixing: Suren.G
Sound Design: Suren.G – S. Alagiakoothan
DI: Mango Post
Colorist: Suresh Ravi
CG: Rajan
Dubbing Studio: Sounds Right Studio
Dubbing Engineer: Hariharan Arulmurugan

என ,அனைவரும் இந்த வெற்றி படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் கொண்டாடும் வண்ணம் வெற்றி கிடைத்திருக்கிறது. நிச்சயம் இளைஞர்கள் கொண்டாடுவார்கள்.

அவள் வருவாளா? என்ற பாடல் தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்பார்கள் என்பது உறுதி !!

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் மக்களிடம் படத்தை நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்🌷