JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”.
தெளிவான திரைக்கதை, இனிமையான பாடல்கள், காசியின் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கும் கேமரா, நாயகனின் எதார்த்தமான நடிப்பு, நாயகியின் இளமைத்துள்ளும் காதல் நடிப்பு, அழகான மிடில் கிளாஸ் குடும்பம், அமைதியை இழந்து வாடும் கோடீஸ்வர குடும்பம், இப்படி எல்லோரையும் அழகாக நடிக்க வைத்து அற்புதமான படம் பார்க்க கொடுத்திருக்கிறார் இயக்குனர் கல்வியின் உன்னதத்தை உரக்கச் சொல்லும் இந்த படம். ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டிய படம்.
கதை களம்:
நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து, நல்ல சம்பளம் வாங்கி , அப்பா அம்மாவிடம் கொடுத்து அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன் நாயகன் சிவா, (ஆதவ் கிருஷ்ணா) அதே கல்லூரியில் படிக்கும் நாயகி பூஜா கோத்தாரி (சிம்ரன்) நாயகியின், சின்ன வயதிலேயே குழந்தையாக விட்டு விட்டு ஓடிப்போன அம்மா , நாயகி கல்லூரியில் படிக்கும், சீனியர் சிவாவின் நல்ல குணம் கண்டு சிவாவை விரும்புகிறாள். இது நாயகியின் அப்பா, மணிப்பாலுக்கு தெரிய வர, சிவா, பூஜா காதலை எதிர்க்கிறார் அவரது அப்பா.
மிடில் கிளாஸ் பையன் அவன் உன்னை எப்படி காப்பாற்றுவான் என்று அவர் காதலுக்கு குறுக்கே வருகிறார் .
மகன் சிவா காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் படவா கோபி, சீரியல் பைத்தியம் ஆன அவரது அம்மா வினோதினி, நாயகனின் தம்பி, இப்படி ஒரு அழகான குடும்பம் நாயகனுக்கு, தன் காதலன் தான் உலகம் என்று நினைக்கும் நாயகி அவனை கரை பிடிக்க வேண்டி ஓடிப்போன அம்மாவை தேடி காசிக்கு செல்கிறார். நாயகனையும் ,உடன் அழைத்து செல்கிறார். இதனால் நாயகி அப்பா நாயகன் தான், தன் மகளை கடத்திக் கொண்டு சென்று விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். காசிக்கு சென்ற பிறகு பூஜா காணாமல் போகிறார் ?என்ன நடந்தது?
பூஜா கடத்தப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கினாரா?
அவரது அம்மா பூஜாவிடம் என்ன சொன்னார் ?
அதன் பிறகு நாயகனின் நிலை என்ன ஆனது?
அவனுக்கு வேலை வந்த பிறகு அவனால் இன்டர்வியூ வில் கலந்து கொள்ள முடிந்ததா! காசி போலீஸாரால் நாயகன் எந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்? நாயகியின் தந்தையுடன் இருக்கும் சுனில் இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்து அமைந்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது இந்த படம்
நாயகனின் குடும்பத்தில், வினோதினியும், படவா கோபியும் காட்டும் ,அந்த பாசமான காட்சிகள். அப்பா மடியில் படுத்துக்கொண்டு மகன் தன் காதலை சொல்லும் விதம், நாயகி காதலிப்பதற்கு முன்பே ,நாயகனின் வீட்டுக்கு வந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது, நாயகியின் தோழியாக பிரியா ஐஸ்கிரீம் ஜொல்லு பார்ட்டியாக வருவது, பூஜாவின் பாட்டியாக நடித்திருப்பவர், நாயகி அப்பாவாக நடித்திருப்பவர், இப்படி எல்லோருமே தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நாயகன் ஆதவ் கிருஷ்ணா
அழகான முகம், அளவான நடிப்பு, படிப்பு ஒன்று குறிக்கோள் என்று காதல் பக்கம் போகாமல் ,அவர் நடித்திருப்பது சிறப்பாக இருக்கிறது.
காதல் வந்த பிறகு கடவுளே காதல் பண்ணினாலும், காலேஜ் வாசலில் காத்துக் கிட்க்கனும,என்று பேசி , வசனங்களால் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தன்னை ஒருதலையாக காதலிக்கும் நாயகியை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இருவரும் ஒரே சமயத்தில் விரும்பும் போது அப்படி ரசிக்க வைக்கிறது.
காசிக்கு சென்று பூஜாவை தேடும் போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் நாயகன்.
நல்ல வரவு நல்ல நடிப்பு படம் முடியும்போது ஒரு துள்ளலான பாட்டுக்கு நடனம் போட்டு அசத்தியிருக்கிறார். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் .
புதிய நாயகி சிம்ரன் அத்வானி ,படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. .
நாயகி பூஜா ,என்ற கதாபாத்திரத்தில் அழகாக வந்து அவ்வப்போது கவர்ச்சி காட்டி, காதலன் தன்னை காதலிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டு, சினுங்கும் போதும், பட்டாம்பூச்சியாக பரவசமாக தெரியும் பொழுதும் ,படம் முழுக்க இளமை தென்றலாய் வசந்தத்தை அள்ளி தெளித்து இருக்கிறார், பாடல் காட்சிகளில் அவ்வளவு நெருக்கம் சிம்ரன் நல்ல வரவு .
மிடில் கிளாஸ் ஃபேமிலி வெறுக்கிறார் நாயகி அப்பா, தப்பா போன நாயகி அம்மா,
மகன் மீது கர்வம் கொண்ட அப்பாவாக படவாகோபி, காதலை ஆதரிக்கும் மகன்மடியில் படுக்க நீ எதை செய்தாலும் சரியாக இருக்கும் என்று மகனுக்கு ஆறுதல் சொல்லும் நடிப்பு நயம் .
வழக்கமான அம்மாவாக, சீரியல் பைத்தியமாக வரும் வினோதினி நாயகி பூஜாவின் பாட்டியாக நடித்திருப்பவர். என அனைவரும் படத்திற்காக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
காசி க்குஅம்மாவை தேடி பூஜா போன பின் கதையில் ஒரு பரபரப்பு.
பூஜாவின் அம்மா நான் இரண்டாவது கணவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நிம்மதியாக இருக்கிறேன் என்று நினைக்காதே!! அமைதியாக இருக்கிறேன். அமைதிக்கும், நிம்மதிக்கும் வெகு தூரம் என்று மகளிடம் புத்திமதி சொல்லும் இடம் சிறப்பான காட்சியாக அமைந்திருக்கிறது.
காசி அம்மாவை சந்தித்து பேசும் அம்மா சூழ்நிலையில் எதுவாக தப்பா முடிவெடுக்காதே யோசிச்சு முடிவு எடு இன்று ஒரு தாயின் அறிவுரை ரசிக்க வைத்தது மழை அடிக்குது துள்ளல் பாடல். பட்டாம்பூச்சி மிடில் கிளாஸ் ஃபேமிலி என்பதால் வெறுக்கிறார். நாயகின் அப்பா பிடிவாதமாக கடைசி வரை இருந்துவிட்டு கடைசியில் மனம் திருந்துவது சிறப்பு
அவர் உடனே கூட இருந்து சகுனி வேலை செய்யும் சுனில் என்ற கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் ஒரு அழகான கதை காதல் கதையை தேர்வு செய்து, அதை சுவையாக சொல்லி இருக்கிறார். காட்சிகளை நகர்த்திய விதம், திரைக்கதை சீராக செல்கிறது. அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்த விதம் .பாடல் கட்சியை படம் ஆக்கிய விதம், இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பான காட்சிகளை கொண்டு சென்றது என்று முதல் படத்திலேயே முத்தான இயக்குனராக பெயர் எடுத்திருக்கிறார்
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா
தீஞ்சுடரே ,பாடலும் மழை அடிக்குது பாடல் ,அழகான டியூன் போட்டு இருக்கிறார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
பாடலாசிரியர் சினேகன் அவர்கள், மிக அழகான பாடல் வரிகள் தந்து இருக்கிறார்.மற்றும் அருண் பாரதியின் அற்புதமான பாடல் வரிகள் மற்றும்
ப்ரமோ பாடல் ரசிக்க வைக்கிறது
இயக்குனர் சரண் இந்த படத்தில் பாடலாசிரியராக பங்கு பெற்றிருக்கிறார் பாடல் வரிகள் இளமைத்துள்ளல்.
ஒளிப்பதிவு அருமை . காசி அழகை அள்ளி வந்திருக்கிறது கேமரா, பாடல் காட்சிகள், கல்லூரி ,மற்றும் காசி ,என்று கேமரா சிறப்பாக படம் பிடித்திருக்கிறது.
நடன இயக்குநர், ஆர்ட் டைரக்டர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் ஒப்பனையாளர், மற்றும் சண்டை பயிற்சி அமைத்தவர் என ,தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா(AIM)
வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷
