நடிகர் விஜய் ராகவேந்திரா நடிப்பில் ,தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள கிரைம், திரில்லர் திரைப்படம்.
2021-ல் வெளியான ‘சீதாராம் பெனாய்’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த படம்.
அதிரடி க்ரைம் த்ரில்லர் படமான Case of Kondana -தந்த தேவி பிரசாத் ஷெட்டியின் முந்தைய த்ரில்லர்.
Seetharam Benoy Case No 18 – சீதாராமின் முதல் பாகம். Godhi Banna Sadharana Mykattu – விஜய் ராகவேந்திராவின் சிறந்த நடிப்பில் வெளியான சிறந்த படம் .
மீண்டும் இருவரும் இணைந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
கதைக்களம்
கா்நாடகாவின் Malnad பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் நடக்க, Anegedde காவல்நிலையத்தில் தொடர் கொலைகளை துப்பு துவங்குகிறார் சீதாராம்.
யார் செய்தது !!.இந்த கொலைகள் என்று துப்பு துலக்க,இது ஒரு சைக்கோவின் செயல் என்று கண்டுபிடிக்கிறார்.
சீதா ராம். தொடர்ச்சியாக,
ஜெயா அண்ணா, மற்றும் காவல் துறை அதிகாரி வசந்த், அசோக் இப்படி மூன்று கொலைகள் நடக்கிறது.
பள்ளி ஆசிரியர் செபாஸ்டியன் , தன் மகள் கிரேசி, தவறான ஒருவனை காதலித்து விட்டாள் என்று அவனை கொலை செய்து விட்டு, காவல் நிலையத்தில் அவன் தினமும் தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுக்கிறார். சீதா ராம் அதை விசாரிக்கும் பொழுது ,அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர்தான் இந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர், என்று அவரை கைது செய்கிறார்கள்.
இனி என்ன நடக்கும் என்று யோசிக்கும் பொழுது, அப்பொழுது ஒரு சைக்கோ கொலைகாரன், கொலை செய்வது போல காட்டுகிறார்கள். அதிர்ச்சி படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல ,
இடைவேளைக்குப் பிறகு அச்சுதானன், அவரது மகள் காவியா,மஞ்சா
இருவருக்கும் என்ன நடந்தது? காவல்துறையில் பணிபுரியும் ரத்தினம்மாள் இறந்து போன பிறகு அவரது மகன் என்னவானார்? சைக்கோ கொலைகாரனை சீதாராம் கண்டுபிடித்தாரா? அவரது அக்கா கணவரை சைக்கோ கொலைகாரன் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சிக்கிறான்!! அதை தடுத்து நிறுத்தி காப்பாற்றினாரா?
சீதாராம் !!
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த” செகண்ட் கேஸ் சீதாராம்”
அக்கா தம்பி, பாசம் மஞ்சாவின், நிறைவேறாத காதல், அச்சுதானன் செய்த துரோகம், என்று படம் முழுக்க, அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற ஆர்வத்தை தூண்டி, திரைக்கதை சீராக வேகமாக பயணப்படுகிறது.
எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து வயதானவர்களை குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) ஒருவன்தான் இதனைச் செய்கிறான். என விசாரணையில் இறங்குகிறது சீதாராம் டீம் அவன் கொலை செய்யும் முறை பீதியை கிளப்புகிறது எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘
நெஞ்சை உரைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறிச் செயல்களைத் தடுக்கிறதா,? காவல்துறை!! கொலைகாரன் உண்மையில் யார், ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்கிறது!! ‘செகண்ட் கேஸ் சீதாராம்.
நாயகன் விஜய் ராகவேந்திரா
அனுபவம் வாய்ந்த நடிப்பு, அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் புதிதாக இருப்பது அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது. காவல்துறை அதிகாரியாக அவர் கையாளும் விதம், எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கையாளுவது, என அனைத்து இடங்களிலும் தனது நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மன நல பாதிப்பு
கொண்ட நபர் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பு மூலம் கண் முன் நிறுத்துகிறார்
கோபால் கிருஷ்ணா. சிறு சிறு முகபாவனைகளில் கூட கவனம் செலுத்தி நடித்து போட்டி போட்டு நடித்திருக்கிறார்.
மற்றும் மற்றும் தேஷ் பாண்டே , அச்சு தானனாக, நடித்தவர் மஞ்சாவாக நடித்தவர்.
காவியாவாக நடித்தவர். என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் தேவி பிரசாத் ஷெட்டியின் முந்தைய த்ரில்லர். படமான Seetharam Benoy Case No 18 – சீதாராமின் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் ,எமோஷனல் கலந்து சொல்லி இருக்கிறது ,அக்கா தம்பி ,பாசத்தை அருமையாக உணர்த்துகிறது ,
இயக்குனர் எடுத்துக்கொண்ட கதையை, நேர்க்கோட்டில் பயணித்து, சரியான நபர்களை தேர்வு செய்து, சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சைக்கோ கொலைகளை மையமாக வைத்த க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர், ஜானர் திரைப்படங்கள் பல வந்திருந்தாலும், இந்த கதையை இயக்குநர் தேவி ஸ்ரீ பிரசாத் ரெட்டிமற்றும் எழுத்தாளர் வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறார்கள்.
கொலையாளியை கண்டுபிடிப்பது தான் கதை என்றாலும், அதை சொன்ன விதம், படத்தில் இடம்பெறும் கதபாத்திரங்களை வடிவமைத்த விதம், ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் எதிர்மறை குணங்கள், அவற்றை கொலை வழக்கின் விசாரணையோடு பயணிக்க வைப்பது போன்ற விஷயங்கள் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது
இசை நவ்நீத் ஷாம் பின்னணி இசை அமைத்துள்ளார் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசை பக்கபலமாக இருக்கிறது அவ்வப்போது வரும் மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது . பின்னணி இசை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஆச்சார்யா
முழு படத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளை மிக தெளிவாக படமாக்கி இருக்கிறார் .
படம் முழுவதும் திரைக்கதை மற்றும் காட்சிகளின் வேகம் குறையாதபடி படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்தின் தொகுப்பாளராக பணியாற்றிய Shashank Narayan
ஆர்ட் டைரக்டராகவும், மற்றும் படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். பவானி சங்கர் ,இவர் பணி சிறப்பாக இருக்கிறது
படத்தில் படத்தில் ஒப்பனையாளர் அருமையாக பணி புரிந்திருக்கிறார். கொலை செய்யப்படும் நபர், கை, கால்கள் இரும்பு சங்கிலியால் முறுக்கப்பட்டு, முகம் எல்லாம் சிதைக்கப்பட்டு, பார்ப்பதற்கே மிகவும் அருவருக்கத்தக்க
வகையில் ,மேக்கப் போட்டு அசத்தி இருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளர், சிறப்பாக எல்லா நடிகர்களுக்கும் பொருத்தமான ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார்.
Colorist: Liju Prabhakar
Marketing Head : Srivathsa P M / Shridhar Shivamogga
C.G.I : Stone Arc studios
PRO : Sri vengades
என, அனைவரும் ஒரு வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்.
படம் தொடங்கிய உடனே ,நம்மை கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குநர் படம் முடிவடையும் வரை ஒவ்வொரு காட்சியையும், பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார். இறுதிக் காட்சியை நெருங்கும் போது கூட நம் கண்கள் திரையை விட்டு விலாகதவண்ணம் திரில்லர் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சினிமா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் இந்த ‘ க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.
இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷
