தடயம் பிப்ரவரி 27, 2026 முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது
*Story, Written & Directed Navinkumar Palanivel
Producer – Ajey Krishna
Executive Producer – S. Saravana Kumar
Creative Producer – R. Saravanan*
கதை களம்
.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியில் நடந்த உண்மையான கொலை வழக்குகளின் அடிப்படையில்.
உருவாக்க பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த கிராமத்தில் கணவன் ,மனைவிஎன, நான்கு பேர் கொலை செய்யப்படுகிறார்கள். மனைவியின் தாலி கயிறையும், கணவனின் அண்ணா கைறையும், மட்டுமே கொலை செய்தவர்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள். சுவற்றில் ஒரு கேள்விக்குறி எழுதப்பட்டிருக்கிறதுஅது யாருக்கு?
காவல்துறைக்கா? அல்லது மக்களுக்கா? என்ற கேள்வியை எழுப்பி விட்டு செல்கிறார்கள்!!!
புதிதாக வேலைக்கு சேர்ந்த காவல்துறை அதிகாரி லட்சுமி, ஒரு டீம் அமைக்கிறார் .
அதில்
எஸ்.ஐ. அதியமான்
இணைத்து
கொலைகள் குறித்த விசாரணையைத் தொடங்குகிறார்கள், ,அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்,
இந்தக் குற்றக் கதை 1999 இல் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால் உண்மை சம்பவத்தை நேரில் பார்ப்பது போல இருந்தது.
நள்ளிரவில் நடக்கும் கொடூரமான கொலைகள், .
அந்த கொலைகளை செய்தது யார்? அவர்கள் நோக்கம் என்ன ?எதற்காக இப்படி செய்கிறார்கள் ?அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்களா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களா? அல்லது பழிக்கு பழி வாங்குகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்த தடயம்.”
அதிகாரம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை சீரழித்தால் ,அவன் திருப்பி அடித்தால்
என்ன ஆகும்!! என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது இந்த”தடயம் ” அடுத்தடுத்து கணவன், மனைவியை குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) இரண்டு பேர் இதனைச் செய்கிறார்கள்.
என விசாரணையில் இறங்குகிறது உள்ளூர் போலீஸ்.
தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர்களை தேடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்களே இந்த `தடயம் “
நடிகர்கள் & நடிகைகள்
சமுத்திரக்கனி
இதுவரை போலீஸ அதிகாரியாக, 40 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இந்த படத்தில்
மூளை ஷார்ப்” பாடி வீக்” ஆன காவல் துறை அதிகாரி யாக,விரக்தியான மனநிலையில் ,
எந்நேரமும் டீக்கடையில் ,
டீயில்
பிஸ்கெட் தொட்டு சாப்பிட்டுக் கொண்டு, சலிப்பானவராக, மூணார் ரமேஷிடம் திட்டு வாங்கிக் கொண்டு, நடித்திருக்கிறார்.
இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
கொலை காரனை பார்த்து, இப்படி
ஊரையே சுடுகாடு ஆக்கிட்டீங்களே”
என்று கேட்கும் காட்சியாகட்டும், ஜீப்பை தள்ள முடியாமல் ,சலித்துக் கொள்ளும் காட்சி ஆகட்டும் ,ஏழைக் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாகட்டும், மூணார் ரமேஷ் மேலதிகாரியிடம், திட்டு வாங்கிக் கொண்டு விழிப்பதாகட்டும், கொலை செய்த இடத்தில் சென்று தடைகளை சேகரிக்க அவர் காட்டும் அந்த பாவனையாகட்டும், அதியமானாக வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.
ஷிவதா
திருமணம் நிச்சயக்கப்பட்ட வராக,
காவல்துறை அதிகாரி லட்சுமி வேடத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சமுத்திரக்கனி மீது சலித்துக் கொள்ளும் அவர், அதன் பிறகு சமுத்திரக்கனியின் கதையை கேட்டு அவர் திறமைக்கு மதிப்பு கொடுத்து அவரையும் டீமில் சேர்த்துக்கொண்டு கொலைகளை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி நடிப்பு கச்சிதமாக இருக்கிறது ,
மூனார் ரமேஷ்
டி.எஸ்.பி வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் .
சிவதாவுக்கு ஆரம்பத்தில் தரும் மரியாதை, கொலைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்பொழுது ஏற்படும் மேல் அதிகாரியின் சலிப்பு, சமுத்திரக்கனியின் மீது இயல்பாகவே அவருக்கு வரும் கோபம் ,இப்படி,சிறை திரைப்படத்திற்கு பிறகு தடயத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மற்றும் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள்.
போலிஸ் ஆக நடித்த
விசாகன் ,
வில்லனாக ரவி வேடத்தில் நடித்த ப்ரேம்,
பார்வையாலே மிரட்டி, காவல்துறைக்கு சவால் விடும் சூரிய நாராயணனாக வரும்,புஷ்பா படத்தில் நடித்த
ராஜ்,
தீபா, மற்றும் வேல் முருகன் ,
அழகம் பெருமாள்,
புலி பாண்டி,
சுந்தர பாண்டியன், பிரேம் ,அபிஷேக்,
ஜோசப் ஜார்ஜ்,
ரவிச்சந்திரன்,
கார்த்தி, சுபர்ணா,
தயாளன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இயக்குனர் நவீன் குமார் பழனிவேல்
1995 மற்றும் 1999 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அருமையாக எடுத்து, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து, படமாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர்
காவல்துறை அதிகாரிகள். சமுத்திரக்கனி, சிவதாவும்,
புலனாய்வில் காட்டும் சாதுரியம் கதா பாத்திரங்களை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விதம் இயக்குனரின் திறமையை காட்டுகிறது .அதே சமயம், கதையின் ஓட்டத்தில்
முதல் பாதியிலேயே முடிச்சுகளை அவிழ்த்துவிட்டதால் (?) இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்றே தொய்வைச் சந்திக்கிறது. இருப்பினும் வெறுமனே பார்வையாளர்களைப் பயமுறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் குற்றத்தையும், குற்றத்துக்கு முந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில்
இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்
இரண்டு கொலைகாரர்களும் ஏன்? கொலைகாரர்கள் ஆனார்கள்!! என்பதை எமோஷனல் கலந்து சொல்லி இருப்பதில், மனித நேயத்தையும் குழைத்து கொடுத்திருக்கிறார்.
பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.
கொலை நடந்த இடத்தில் பயங்கரத்தைக் காட்டி ,
காட்சியின் தன்மையைப் பிரதிபலித்து, வில்லன் யாரென்று தெரிவதற்கு முன்பே அலற வைத்திருக்கிறது
திரை க்கதை .
இருப்பினும் அறிமுக இயக்குநர் சீரியல் கில்லர்களை நியாயப்படுத்தாமல் குற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து ஒரு பக்குவமான ஆரோக்கியமான உரையாடலை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதைத் தன் இரண்டு பிரதான பாத்திரங்கள் வழியேவும் பேசியிருப்பது புத்திசாலித்தனமான முடிவு !!
இயக்குனருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
இசை
விபின் பாஸ்கர், இது இவரது மூன்றாவது சீரீஸ்.
பின்னணி இசை.
பிரமாதமாக இருக்கிறது.
இசை தேவையில்லையென நிசப்தமாக அவர்விட்ட இடங்களும் காட்சியின் அழுத்தத்தை மேலும் கூட்டி இருக்கின்றன.
ஒளிப்பதிவாளர்
கே.கே இவரது ஒளிப்பதிவில்
டீக்கடை,
கொலை நடந்த இடத்தில்,
கதையின் சூழல், தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும் ஒளிப்பதிவு சிறப்பு.
ஆந்திர பார்டரையும்
தமிழ்நாட்டையும் இணைத்து கேமரா அலற வைத்திருக்கிறது.
சவுண்ட் டிசைன் ரின்
திடீர் திடீரென வரும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது. .
எடிட்டர் தினேஷின்
படத்தொகுப்பு
காட்சிகள் கோர்வையாக
இருக்கிறது .
திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.
ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது
கோரமான
கொலைக் காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பிராஸ்தெடிக் மேக்-அப்.
ஆர்ட் டைரக்டர் பணி நன்றாக இருக்கிறது .
மற்றும் இரவு பகலாக உழைத்து இருக்கிறது இந்த டீம்
.
Production Designer – Manikandan Chandrasekar
Sound Design – Arul Murugan
VFX & CGI Animation – Daniel
DI – Naveen Sabapathy (Shade69)
Online Editor – Yuvaraj Kodiraja
Co-Director – Viswanathan Pugalendhi
Associate Directors – Anandkumar, Yukesh Ramalingam, Daniel, Siva G, MC Kanmani
Assistant Directors – Pragadeesh Malayappan, Bharath Palaniyappan, Ajish, Sarath Kumar RG
Additional Cinematography – Mohankumar Palanivel
Assistant Cinematography – Raj Kumar, Abdul Rahman,
மொத்தத்தில் இயக்குனர், ஒரு உண்மை கதையை தேர்வு செய்து, குற்றங்களின் பின்னணியை மனித நேயத்தோடு அணுகி, அதிகார வர்க்கத்தின் முகமூடியை கிழித்திருக்கிறார். எளிய மனிதர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினால், அவர்கள் வாழ்க்கை கந்தலாகி விடும். ஆனால் அவர்கள் திருப்பி அடிக்கும் பொழுது, இந்த சமுதாயம் தாங்காது என்பதை இந்த தடயம்” மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது “ஜீ 5 தமிழ்” தொடர்ந்து வெற்றி தொடர்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த தடயம் “பெரும் வெற்றி அடையும் என்பது உறுதி
வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா🙏🌷
