PRODUCED BY KAARTHIKEYAN S – KARTHIK SUBBARAJ
CO – PRODUCED BY RANA DAGGUBATI – KALYAN SUBRAMANIAN
Production coordinator : R RAJ KUMAR – MADHAN SHANMUGAM
Production Manager : NIRMAL KUMAR
Executive Producer : ASHOK NARAYANAN
Associate Producer : PAVAN NARENDRA – ARULMOZHITHEVAN KALIMUTHU
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் ,நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் வெளிவந்துள்ள
‘நீளிரா’ ஒரு வெற்றி படமாக வந்துள்ளது.
கதை களம்
ஒரு இரவில் நடக்கும் கதை, படம் பார்ப்பவர்களுக்கு விழிகளின் ஓரம் ஈரம், இதயத்தில் ஒரு பாரம், ஏற்படுவது உறுதி!!
ஒரு திருமண வீடு, தவறுதலாக அந்த பகுதி க்கு,வந்த இந்திய ஆர்மி, இவர்களைத் தேடி வரும் புலிகள், இந்த மூன்று சம்பவங்களையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர்
படம் முழுவதும் ஒரு பதட்டமான நீண்ட இரவில் நடக்கும் சம்பவங்கள் மீது மையமாகிறது .
அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் ராணுவப் படையிடம் இருந்து தப்பிப்பார்களா? அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்குமா? என்பதை திகிலோடு சொல்லி இருக்கிறது.
நீளிரா” என்றால் நீண்ட இரவுகள். ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன? நடக்கும் என்பதை விழிகளில் ஈரத்தையும், இதயத்தில் பாரத்தையும், கலந்து கொடுத்திருக்கிறார். “மரணத்தை விட மரண பயம்தான் கொடுமையானது என்பதை. ஃபீல் குட் படமாக தந்திருக்கிறார்.
ஈழத்து வீடு, உணவு, வாழ்க்கை முறை போன்றவை ரியலாக காட்ட பட்டிருக்கிறது.
ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது.
அடுத்து என்ன? என்ற வகையில். ஒரு திரில்லர் ஃபீலிங் படம் முழுக்க தொற்றி கொண்டது. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருக்கும் திரைக்கதை. அடுத்து என்ன நடக்கும் ?என்ற எதிர்பார்ப்பு!!! குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற திக் திக் அனுபவம் எகிற வைத்துள்ளது.
ஈழத்தில் நடுவே வாழ்ந்த சாதாரண மக்கள் குண்டுகள் விழும் சூழ்நிலையில் எப்படி வாழ்ந்தார்கள். பயம், பதட்டம், குடும்ப வாழ்க்கை போருக்குள் காதல், திருமணம் போன்ற வைகள் எப்படி நடந்தது என்பதை இதுவரை யாரும் சொல்லாத வண்ணம் சொல்லி இருப்பது சிறப்பு!!
அந்த வீடு நினைவில் இருக்கும். வண்ணம் மனதில் பதிய வைக்கிறது படம்.
இயக்குநர் சோமிதரன் அவர்களே போருக்குள் வாழ்ந்த அனுபவம் கொண்டவர்
அதனால் படம் மிகவும் உண்மையான உணர்வுடன் உருவாக்கி இருக்கிறார்.
நடிகர் &நடிகைகள்
நடிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது நவீன் சந்திரா, இந்திய ராணுவ படையைச் சேர்ந்த கேப்டன் வேடத்தில் மனிதநேயமிக்க அதிகாரியாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
ரூபா கொடுவாயூர்,
தமிழினி என்ற கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ,மனதை உலுக்கி விடுகிறார்.
சித்து குமரேசன், மணப்பெண்ணாக ஏக்கம் ,பயம், கலந்து திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று கோணத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .மற்றும் சுவாதி கிருஷ்ணா வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு மரண பயத்தை கண்களில் வைத்துக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது கணவராக ‘கயல்’ வின்சென்ட், அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். விது,சனந்த் ,ஜெ.கே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது.
இயக்குனர்
கதை ,வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் சோ மிதரன். அவர் அந்த போர்க்கால சூழ்நிலையில் வாழ்ந்த அனுபவம் இருப்பதால் அதை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
நீளிரா’ ஒன்றரை மணி நேர படமாக கொடுத்து இருக்கிறார். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். ‘
ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.
நடிகர்கள் தேர்வு அந்த வீடு எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. வசனம் சிறப்பாக இருக்கிறது. எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்பீர்கள் ?என்ற வசனம் சிறப்பாக இருக்கிறது.??
அமைதிப்படை என்று சொல்லிக் கொண்டு வந்து நீங்களே அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை செய்கிறீர்கள்!!! என்று கேட்கும் வசனம் உலுக்கி விடுகிறது.
ராணுவம் கதவைத் தட்டுகிறார்கள் என்றவுடன், பெண்கள் இரண்டு மூன்று சட்டைகளை எடுத்துப் போடுகிறார்கள் என்று அந்த ஒரு காட்சியை படத்தின் உச்சமான காட்சி!! அப்படி, என்றால் பெண்கள் எந்த சூழ்நிலையில் அங்கு வாழ்ந்திருப்பார்கள் என்று அந்த ஒரு காட்சியின் மூலம் உணர்த்துகிறார்
இயக்குனர்.
இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் ,என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் .வேறு ஒரு விஷயத்தை சொன்ன விதம் கைதட்ட வைக்கிறது.
ஒளிப்பதிவாளர்
செல்வரத்தினம் பிரதீபனின், ஒளிப்பதிவு ,இருள் காட்சிகளையும், திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி, ஒரு மனதுக்குள் பதபதப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பாளராக, படத்தை ஒன்றரை மணி நேரம் மிகச் சிறப்பாக செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் திகிலின் உச்சம்.
இசையமைப்பாளர் கே ,பின்னணி இசை, படத்திற்கு மிகவும் உயிரோட்டமாகவும் பலமாகவும் இருந்தது.
மார்ட்டின், ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் .அந்த வீடு ,திருமண நிகழ்ச்சி, போர் பதற்றம் எல்லாமே அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்.
தினேஷ் சுப்புராயன் சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார். சண்டை காட்சிகள் இல்லை என்றாலும் பதற்றமும் பயமும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சுபைர் காஸ்ட்யூமராக, எல்லா கதாபாத்திரத்துக்கும் சரியான ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள், படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் 🌷
மொத்தத்தில் ஈழத்தில் ,நடந்த ஒரு நாள் இரவு திருமண வீட்டில் நடக்கும் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது, இதுபோல பல இரவுகள் அங்கு பெண்கள் அனுபவித்த கொடுமைகளை நினைக்கும் பொழுது மனம் பதறுகிறது, எத்தனை வலிகளை சுமந்து, அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை என்னும் பொழுது மனம் கனக்கிறது உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு நீளிரா “
இந்தப் படத்தை தயாரித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் கார்த்திகேயன், ராணா டக்குபதி,
அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது கிளாசிக் சினிமா🌷
