லீடர்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

தூத்துக்குடியில் ஒரு ஹார்பர்-ல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. மகள் மட்டுமே உலகம் என தூத்துக்குடியில் வாழ்ந்து வரும் சக்திவேல் (லெஜண்ட் சரவணன்), அங்கு மெக்கானிக்காக இருக்கிறார். துறைமுகத்திற்கு வருபவர்களின் வாகனங்களைப் பழுது பார்ப்பதே இவரின் பிரதான வேலை.

துறைமுகத்தில் பல்வேறு கிரைம் விஷயங்கள் நடப்பதாக அறியும் காவல் அதிகாரி ஆண்ட்ரியா,(இந்திரா) அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போராடுகிறார். அதற்காகத் தினமும் துறைமுகத்திற்கு வந்து போகும் சக்திவேலிடம் ,உதவி கேட்கிறார். அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்ந்து வரும் சக்தி வேல் ஆண்டிரியாவுக்கு உதவி செய்ய மறுக்கிறார்.

இன்ஸ்பெகர் ஆண்ட்ரியா!! அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என எண்ணி.

சக்தி வேலை தன் பதவியை வைத்து தனக்கு உதவி செய்யும்படி சரவணன் மகளை மறைத்து வைத்து விட்டு, சால்ட் தான் உன் மகளை கடத்தினான் என்பது போல் திசை திருப்பி அவர் கையாலேயே அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.

அது தான் படத்தின் திருப்பம். ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை, சரவணன் தான், எதற்காக இப்படி செய்தார், ஏன் செய்தார்? என்பதை புதிதாக வந்த எஸ்.பி.இடம் ஆண்ட்ரியாவின் தந்தை சத்திய மூர்த்தி விளக்கும்பொழுது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த திருப்பு முனையாக அமைந்தது. என்று சொல்லலாம்.

இதன் பிறகு, சக்திவேல் வாழ்க்கையில் வரும் மாற்றங்கள் என்ன, அவரின் உண்மையான அடையாளம் என்ன, எதற்காகத் துறைமுகம் அருகில் அவர் வேலை செய்கிறார் !!என்பதே துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் ‘லீடர்’ படத்தின் கதை.

விறுவிறுப்பாக, பரபரப்பாக, ஆரவாரத்தோடு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் நாயகன் லெஜன்ட் சரவணன்

நாயகன் லெஜன்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணன், லீடர் படத்தில் சக்தி வேல், மற்றும் பொன் மாறன், என்று இரண்டு விதமான ததாபாத்திரங்களில்தனது முதல் படத்தை விட இந்த படத்தில் 100% நல்ல கம்பேக்கை கொடுத்துள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார்.

மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் .என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன். அருமையாக நடித்திருக்கிறார். அலட்டி கொள்ளாத அந்த நடிப்பு மனதில் நிற்கிறது.

எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் விசில் பறக்க சிங்கநடை போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்.

மனுஷன்நடிப்பில் மாஸ் காட்டியிருக்கிறார். லியோ, ஜெயிலர், விக்ரம் படங்கள் அளவுக்கு தன் படம் வெற்றி பெறும் என லெஜண்ட் சொன்னது . நிஜம் . படம் தீயாக இருக்கிறது.

ஒரு புதிய ஆக்ஷன் ஹீரோ தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார்

ராபர்ட் & டெவில் என நடிப்பில் கார்ப்பரேட் வில்லனாக சந்தோஷ் பிரதாப், மிரட்டலாக நடித்திருக்கிறார். திடமான உடல் தோற்றம், ரக்கெட் லுக் எனத் தன் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார். கையில் வாட்ச் பாம் கட்டி, கவுண்டவுன்ட் கொடுத்து துரோகிகளை கொலை செய்யும் இடத்தில் திக் திக்!!

நேர்மையான காவல் அதிகாரி (பக்தவச்சலம்) என்ற கதாபாத்திரத்தில் ஷ்யாம்,
சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா

(இந்திரா) என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாகப் பாயல் ராஜ்புட் பிளாஷ்பேக் சண்டைக் காட்சிகளில் ,காதல் காட்சிகளில், அசத்தியிருக்கிறார்

காமெடி ரகளை செய்யப் விடிவி கணேஷ், அந்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார்.

பாகுபலி பிரபாகரன் சால்ட் வேடத்தில் மிரட்டி இருக்கிறார்.

மற்றும் லால், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன் என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் தங்கபழம், துர்கா இருவரும் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்கள். மற்றும் பத்மன், யோகி ராம், வேலருணாச்சலம், நிரஞ்சன் தாமஸ், அறந்தாங்கி நிஷா, ஆதித்யா கதிர், படவா கோபி, அசோக் பாண்டியன்,
சோபன் பாபு, பாத்திமாவாக விஜயலட்சுமி, டீம் லீடர் குமார் நடராஜன், ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்குனர்

கமர்ஷியல் களத்தில் விறுவிறுப்பாக ஒரு மாஸ் படம் கொடுத்திருக்கிறார்.இயக்குநர் துரை செந்தில்குமார். அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைந்துள்ளார்.

ஒரு பக்காவான ஸ்பை த்ரில்லர் படத்தை லெஜண்ட் சரவணாவை வைத்து கொடுத்ததற்கே இயக்குநர் துரை செந்தில்குமாரை பாராட்ட வேண்டும்.

டாப் ஹீரோக்கள் படம் போல திட்டமிட்டு பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை படமாக கொடுத்து இருக்கிறார். கடைசி வரை அனைத்து ரசிகர்களும் எங்கேயும் சலிப்புத் தட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல், ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைத்து கிளைமேக்ஸ் வரை சர்ப்ரைஸ் வைத்து ஒரு டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தனது எழுத்திலும் இயக்கத்திலும் துரை செந்தில்குமார் கொடுத்துள்ளார்.

நிச்சயமாக இவ்வளவு டிவிஸ்ட் எதிர் பார்க்க வில்லை.

நொடிக்கு நொடி திருப்பம் பாராட்டுக்கள். இயக்குனர் அவர்களுக்கு. சண்டை, சேஸிங், ப்ளாஸ்டிங் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளின் பிரம்மாண்டம், வரிசை கட்டும் கொலை கள், கண்களை பதிக்கச் செய்யும் ஆக்‌ஷன் த்ரில்லராக விரிகிறது படம். அதற்கு சண்டை இயக்குனர் மகேஷ் மாத்யூ, பங்கு பலம்.ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ஆக்சன் காட்சிகளில் மெனக்கெட்டு இருக்கிறார் வெளிப்புற படப்பிடிப்பில் கேமரா அள்ளி வந்திருக்கிறது அதன் கோணத்தை.

எடிட்டிங், பிரதீப் ஈ ராகவ் கச்சிதமாக செதுக்கி இருக்கிறார். பின்னணி இசை தந்திருக்கும் ஜிப்ரான் ஆகியோரின் கூட்டுழைப்பு மிரட்டலாக கைகொடுக்கிறது. துரைராஜ், ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் அருமை.

காஸ்ட்யூம் ரங்கசாமி, ஒப்பனையாளர் சக்தி வேல், பணி அற்புதமாக இருக்கிறது.

பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தது எழுதியவர்கள். கபிலன்,விவேகா, மோகன் ராஜ்.

சாணக்யா வின் நடனம் ரசிக்க வைக்கிறது.

மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், இந்த லீடர் “வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துகிறது கிளாசிக் சினிமா 🌷