விக்கி, என்கிற
விக்ரம் நாராயண் (ஷர்வானந்த்) ஒரு திறமையான பைக் ரைடர். அவரோட அப்பா சுனில் நாராயண் (ராஜசேகர்) ஒரு முன்னாள் இந்திய பைக் ரேஸ் சாம்பியன். தன் மகனை உலக சாம்பியனா பார்க்கணும்னு ஆசைப்படுகிறார். விக்ரமும் இந்திய அளவுல ஒரு போட்டியில் ஜெயிக்கிறார். ஆனா, திடீர்னு பைக் ரேஸ்ல இருந்து விலகிடறார். காரணம், அனன்யா (மாளவிகா நாயர்) மேல வர்ற காதல்.
இது ஒரு பைக்கர் வாழ்க்கையை மையமாக வைத்து, அவருடைய பயணம், சவால்கள், மற்றும் தனிப்பட்ட உணர்வுகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நண்பர்கள், காதல், மற்றும் சுய தேடல் (self-discovery) ஆகியவை கதையின் முக்கிய அம்சங்கள்.படத்தின்பலம் , ஷர்வானந்தின். ரேஸிங் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. எமோஷனல் காட்சிகள் மனதை டச் செய்கிறது. இன்டர்வெல் ட்விஸ்ட், இரண்டாம் சூப்பர்!!. அப்பாவுக்காக ஷர்வானந்த் மறுபடியும் ரேஸ்ல இறங்குவது அப்பா-மகன் பேரன் என்று பாசம்னு கதை நகருவது திரைக்கதை வெற்றி க்ளைமாக்ஸ் மனசை கனமாக்குது.
நாயகன் & நாயகி
ஹீரோ சர்வா தனது கதாபாத்திரத்தில் decent-ஆ perform பண்ணிருக்கார். சில emotional scenes நல்லா வேலை செய்திருக்கிறார்
விக்கி கேரக்டர்ல ஷர்வானந்த் நல்லா பொருந்திப் போறார். ஒரு புது ஷர்வானந்த்தை பார்க்க முடியுது.
காதல் காட்சிகளில் எமோஷன் காட்சிகளில் மகனுடன் பாசத்தை காட்டும் போது தன்னை வெறுத்து ஒதுக்கும் அப்பாவிடம் ஏன்? என்று புரியாமல் விரக்தியில்! தவிக்கும் பொழுது! பைக் ரேஸில் கடும் உழைப்பை கொட்டி அருமையாக நடித்திருக்கிறார்.
சுனில் நாராயண் கேரக்டர்ல ராஜசேகர் செம ஸ்டைலிஷா, கச்சிதமா இருக்கிறார்.
மகனிடம் கண்டிப்பு எதிரிகளின் சூழ்ச்சியில் ,சிக்கி சின்ன பின்னமாகும் பொழுதும் முகத்தை கோபமாக வைத்திருக்கும் ராஜசேகர், பேரன் வந்த பிறகு அவனுடைய கொள்ளை சிரிப்பில் மயங்கி சந்தோசமாக இருக்கும் காட்சிகள் அருமை.
படத்தின் இன்னொரு ஹீரோ மாதிரி தெரியுறார். ஹீரோயின் மாளவிகா நாயருக்கும் ,நல்ல ஸ்கோப் இருக்கு.
கணவனை பைக் ரேஸில் இருந்து விலகச் செய்து, சராசரி பெண் போல
யோசித்து ,பின்னர் கணவரை வெற்றி அடையச் செய்யும் நல்ல ஒரு கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார்.
துளசி, அம்மாவாக
பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷர்வானந்த் மகனா நடித்த குழந்தை படத்துக்கு ஒரு ஹைலைட்.
நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார்
ராஜ சேகர்
அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது.
அதுதான் சர்வானந்த் மகன் கதாபாத்திரம் ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அன்வர் , இந்திரன் கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள்.
ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு
ஷர்வானந்த், ராஜசேகர்
செய்யும் சைகைகள், முகபாவனைகள் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் மாளவிகா நாயர், வெற்றியைக் காணத் துடிக்கும் போதும் உடல்மொழியும், தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘
ஜிப்ரானோட பின்னணி இசை படத்துக்கு பெரிய ப்ளஸ்.
செம விறுவிறுப்பு செம ஸ்பீடு
படத்தின் உயிர்நாடி பின்னணி இசை தான் மிரட்டி இருக்கிறார்.
ஜே.யுவராஜின் கேமரா வொர்க் கலர்ஃபுல்லா இருக்கு.
தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது.
ஜெர்மனியில் நடக்கும் பைக் ரேச்சலும் சர்வானந்த் பைக் ரேஸ் காக பயிற்சி எடுக்கும் காட்சிகளிலும் அன்பருடன் மோதும் காட்சிகளிலும் கேமரா ஒர்க் அற்புதமாக இருக்கிறது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
எடிட்டிங்செம கொஞ்சம் ஷார்ப்
காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கி இருக்கிறார்.
இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர்
படம் ரொம்ப ரிச்சா இருக்கு. இயக்குனர் அபிலாஷ் ரெட்டி யின் உழைப்பு படம் முழுக்க நன்றாக தெரிகிறது., அதை சொன்ன விதம் வித்யாசமான ஃபார்முலா நிறைவு படத்துல சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கு
நிறைய ஹோம் ஒர்க் செய்து இருக்கிறார்.
ஒரு வெற்றி படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கலந்து கொடுத்து இருக்கிறார்..
ஷர்வானந்த்-மகன் காட்சிகள், ரேஸிங் எபிசோடுகள், க்ளைமாக்ஸ், ஜிப்ரான் இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு.
படம் முழுக்கவே விறுவிறுப்பான தருணங்கள் அப்பா-மகன் எமோஷன் க்ளைமாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஹாலிவுட் படத்தைபார்த்த ஃபீல் வருது.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
மொத்தத்தில் பைக்கர்” ரேசில்
முந்துகிறது🌷
