29″திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

PRODUCERS: Kaarthikeyan S | Lokesh Kanagaraj
PRODUCTION HOUSE: STONE BENCH STUDIO & GSQUAD

PRODUCTION EXECUTIVE: G Duraimurugan
PRODUCTION CONTROLLER: GANESH PS
PRODUCTION COORDINATOR: Madhan Shanmugam
EXECUTIVE PRODUCER: M Ashok Narayanan
ASSOCIATE PRODUCER: Pavan Narendra
CO PRODUCERS: Kalyan Subramanian – Pradeep Kumar Boopathi

கதை களம்

29 வயதாகியும், தன்னுடைய அடையாளம் என்ன? என்று தேடிக் கொண்டிருக்கும் சேலத்தில் இருந்து சென்னை வந்து வேலை செய்து கொண்டிருக்கும் சத்யாவுக்கும்,
தன் அப்பா சின்ன வயதிலேயே ஓடிவிட்டதால், அம்மாவின் கனவை நிறைவேற்றி தனக்கு எதிர்காலத் தேவை என்ன? என்பதை அறிந்து கொண்டு, ஐஏஎஸ் ஆக, பார்ட் டைம் வேலை செய்து கொண்டு தன் கனவை நோக்கி பயணிக்கும் விஜிக்கும், நடக்கும் காதல், அந்த காதல் திருமணம் வரை போனதா? அல்லது பிரேக் அப் நோக்கி போகிறதா? என்பதை புதுமையான சிந்தனை யோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரத்ன குமார்.
29 வயது ஆகியும், பேச்சுலர் ஆக இருக்கிறேன். என்று புலம்பிக்கொண்டு காதலியை தேடிக் கொண்டிருக்கும் இன்றைய சராசரி இளைஞர்கள். அதற்கு மேல் யோசிக்காமல் தன்னுடைய எதிர்காலம் என்ன? தன்னுடைய இலக்கு என்ன? என்பதை யோசிக்காமல், ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள். ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது இதை ஒரு படமாக காதல் இனிய நினைவுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

படத்தில் பல எபிசோடுகள் வருகிறது.

சேலம் சத்யாவின் ரூம் மேட் மதுரைமணி,
திருநெல்வேலி வசந்த் , மூவரும் அடிக்கும் ஊட்டி ரசிக்க வைக்கிறது. மணி உதவி இயக்குனராக ஒவ்வொரு கம்பெனியாக கதை சொல்லி ஓப்பன் பண்ணினா? என்று சொல்லும் காட்சியாகட்டும்,
திருநெல்வேலியை சேர்ந்த வசந்த் 100 இண்டர்வியூ அட்டென்ட் பண்ணியதற்கு, ஸ்வீட் பாக்ஸ் உடன் வளைய வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
அந்த
மனோரமா மேன்சனில் பாத்ரூமுக்கு வரிசையில் காத்திருப்பது, கானா பாட்டு பாடி மகிழ்வது, .
மகேந்திரன் வரும் காட்சிகள் ஏரியில் கல்லூரி கட்டிய அந்த போர்ஷனும், சரி கல்யாண வீட்டில் மகேந்திரன் சத்யாவை அவமானப்படுத்தும் காட்சிகளும், அந்த எபிசோடு ஜம்மென்று நிற்கிறது. அதே மகேந்திரன் சத்யாவை உண்டு இல்லை என்று பண்ண சத்யா மேலே முன்னேறிக் கொண்டிருப்பது திரைக்கதையின் உச்சம்.
சத்யா,விஜியிடம் தன் காதலை சொல்ல துடிக்கும் பொழுது, அந்த மழைக்காலத்தில்
பாதாள சாக்கடையில் இருந்து வாசம் வர காதல் காணாமல் போய்விடுவது ரசனைக்குரிய காட்சி.
கடற் கரையில் காதல் காட்சிகள்
மனதை ஜில் என்ற காற்றின் போல ரசிக்க வைக்கிறது..
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சத்யா சேலம் கிளம்ப, தன் தோழிகளுடன் பஸ் ஸ்டாண்டில் வந்து அக்கரையோடு, வழியனுப்பும் விஜியின் கதாபாத்திரம் உன்னதமானது .
தன் காதலிக்கு கடற்கரையில் பூ, வாங்கித் தந்து,
வீடு வரை காதலியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு போக, காதலி அந்த பூவை எடுத்து கீழே போட, காதலன் அந்த பூவை எடுத்து முகர்ந்து பார்க்கும் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசு.
கிராமத்தில் விவசாய வேலை செய்யும் நாயகனின், அம்மாவும் ,அப்பாவும் செய்யாத தவறுக்கு மகேந்திரன் அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதற்கு ,நாலு வருடம் பேசாத தாய் கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் சிறைக்கு சென்று பேசுவது, மகன் சொல்லிக்கொடுத்த படி அப்படியே சிரித்துக் கொண்டே வந்து மீடியாக்களிடம் கதறுவது ,என்று ஆதிரா “அம்மாவாக அசத்திஇருக்கிறார்.
நாயகன் தங்கி இருக்கும் நண்பர்கள் ரூமுக்கு வந்த நாயகி சமையல் செய்து, சாப்பிட வைத்து, ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும், நாயகன் நாயகி அணிந்திருக்கும் துப்பட்டாவில் ஹிந்தி வாசகம் கண்டு கேட்பது, அதற்கு நாயகி “தங்கத்தமிழ் இருக்க நமக்கு தொங்கும் மொழி எதற்கு” என்று பேசும்பொழுது க்ளாப்ஸ்!
அந்த மழை,அந்த முத்தம் ,அந்த காட்சிகள் மிக ரம்மியமான காட்சிகள்.
அம்மாவோடு பேசாவிட்டாலும் உடல் நிலை சரியில்லாமல் இருக்க அம்மாவை வந்து பார்த்து மடியில் தலை வைத்து அழ அம்மா தலை கோத எமோஷனல் நிறைந்த பாசமான காட்சிகள் .
மழைக்காலத்தில் இந்தி டீச்சர் ஏற்படுத்தி கொடுத்த இருவரின் உறவுக்கு அச்சாரமாக போய்விட, நாயகி மிகவும் எதார்த்தமாக எல்லாம் இதற்கு தான் டா” காதல், ரொமான்ஸ், தியேட்டருக்கு படத்துக்கு போவது, பைக்கில் ,மேடு பள்ளம் ஏறி இறங்குவது, என்று எல்லாம் இந்த ஒரு விஷயத்துக் காக என்று சொல்லும் புதுமைப்பெண் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு.
இப்படி படம் முழுக்க இளமை துள்ளும் இனிய நினைவுகளாக வசந்தம் தாலாட்டும் காதல் மொட்டு கவிழ்த்து விட்ட ரோஜாக்களாக, சான்றோன் எனகேட்ட காதலியாக, நிறைய காட்சிகளை உணர்ந்து ரசித்து உள்வாங்கி வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர்சிகரம் பாலச்சந்தர்,படமும் இயக்குனர் மகேந்திரன் படமும், பார்த்த உணர்வை கொடுக்கிறது இந்த 29 படம்”

நாயகன் & நாயகி

சத்யா ,என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக “விது கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். முதல் நிலை பட்டதாரி எனக்கு இப்படித்தான் வாழ வேண்டும். இப்படித்தான் உயர வேண்டும் .என்று சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை !!என்று புலம்புவது, நாயகி, பிரிந்து சென்ற பிறகு விரக்தியில் துடிப்பதும், நாயகியிடம், “உன் அம்மா இப்படி இருப்பாள்” அதனால் தான் உங்க அப்பா ஓடிவிட்டார்” என்று வார்த்தை விடுவதும், வேலையை விட்டு, கதறுவதும், சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ,
அவர் பேசுவது போல படம் நகர்கிறது. அந்த குரலுக்கும் ,ஆரம்பக் காட்சிகளுக்கும் அம்சமாக பொருந்தி இருக்கிறது.

சாதாரண ஒரு கிராமத்து இளைஞனாக வாழ்க்கை என்னவென்று தெரியாத ஒரு அப்பாவியாக காதலிசொன்ன பிறகு எதையாவது சாதிக்க வேண்டும் என்று அரங்கண்ணன் ஏரியை சுத்தம் செய்வது, பெரிய கல்லூரி வைத்திருப்பவருடன் மோதுவதும் கல்யாண வீட்டில் மகேந்திரன் உடன் வாதம் செய்வது ,என நாயகி உடன் ரொமான்ஸ் , அப்பா, அம்மாவுடன் எமோஷனல், என்று நடிப்பில் உச்சம் பெற்று இருக்கிறார் விது .

நாயகி ப்ரீத்தி அஸ்ராணி, அயோத்தி படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்த இவர் இந்த படத்தில் இன்னும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்
ஆரம்பக் காட்சியில் நாயகனுடன் கைகுலுக்கி, பின்பு நட்பு பாராட்டி, வேலை செய்து கொண்டு ஐஏஎஸ் எக்ஸாம் எழுதுவது அம்மாவுக்கு ஏற்ற பெண்ணாக நாயகனின் அப்பா அம்மாவோடு நெருங்கி பழகுவதும், நாயகனின் ரூமுக்கு தனியாக சென்று என்னை ஏதும் செய்து விடாதே” என்று விளையாட்டாக சொல்வதும் “பெண் என்றால் இவ்வளவுதான். நீ வானத்து மீன், மேகம் புள்ளிமான், என்று எல்லாம் வர்ணிக்க தேவையில்லை. இவ்வளவுதான் என்று சொல்லும் புதுமை பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். விஜி”என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். காதலன் தன் அப்பாவை பற்றி தவறாக பேசியதும். கொதித்து எழுவதும், அந்த கல்சுரல் நடன பார்ட்டியில் காதலனுக்கு முத்தம் கொடுத்து சத்யாவை காதலிக்கிறேன். என்று சொல்வதும். இந்தி டீச்சர்” மழையில் போக வேண்டாம், என்று சொல்ல ஒரே ரூமில் காதலனுடன் தங்குவது, என நாயகி அற்புதமாக நடித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக “ஆதிரா கிராமத்தில் சேவை செய்யும் விவசாயக் கூலியை சேர்ந்த இவர் இன்றைய கிராமப் புறங்களில் வாழும் பெண்களுக்கு, ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நாயகனின் அப்பா கதாபாத்திரம் படத்திற்கு “ஜம் என்று பொருந்தி இருக்கிறது. இயல்பாக நடித்திருக்கிறார்.

நாயகன் நண்பனாக வரும் மதுரை மணி உதவி இயக்குனராக ஆரம்பத்தில் கலகலப்பு உதவினாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனின் வெற்றிக்கு இவரும் ஒரு பங்கு என்று சொல்லலாம்.

பிரேம் ஒரே காட்சியில் வந்தாலும் கிளைமாக்ஸ் அழுது புலம்பி மகளிடம் மன்னிப்பு கேட்கும் பொழுது மனதில் இடம் பிடிக்கிறார்.

நாயகியின் அம்மா கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது மகளை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும் அந்த தாயின் கதாபாத்திரம் இன்றைய முன்னேறும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மகேந்திரனுக்கு நெகட்டிவ் கலந்த கதாபாத்திரம் அவருடைய கதாபாத்திரம் பணக்கார இளைஞர்களின் திமிரு, தெனவெட்டும், அவர் நடிப்பில் தெரிகிறது நன்றாக நடித்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் ரத்னகுமார்.
ஒரு சராசரி இளைஞனின் வாய்ஸில் கதை சொல்வது போல ஒவ்வொரு காட்சியும் அம்சமாக செதுக்கியிருக்கிறார்.
இவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கையாண்ட விதம். கைதட்ட வைக்கிறது. நாயகன் நாயகி மீது அதிக காதல் கொள்வதற்கும் பஸ்ஸுக்குள் இருவரும் காதலர்கள் பரிமாறிக் கொள்வதும். மழைக்காலத்தில் இருவரும் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்வது நாயகி ஐஏஎஸ் படிக்க ,நாயகன் நாயகி மீது மையல் கொள்வதிலேயே கவனமாக இருப்பதும், இந்த இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஒன்று சேர்த்து வைத்து வித்தியாசமான கோணத்தில் கதை எழுதி இருக்கிறார்.
காதலர்களை மட்டும் காட்டி இருந்தால் சலிப்பு தட்டும் என்பதற்காக எமோஷன் காட்சிகளோடு கிராமத்தில் ஏரூ சுத்தம் செய்வது, கிராமத்தில்” ஒரு பணக்கார பையனுக்கும், நாயகனுக்கும், ஏற்படும்” ஈகோ மோதல் என்று திரைக்கதையில் வித்தியாசமான களம் கண்டிருக்கிறார் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் .

DIRECTION TEAM: Vignesh Ravichandran, T.M. Sendhil Kumar Nesan, Saravanan Rajadurai, Ibrahim Mohammed, Akash Balaji, Vishnu Vijayan, Aravind Raj Mohan, Sharook Sherief, Balaji Viswanathan

-இவர்கள் எல்லோரும் ஒரு வெற்றி படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சான்ரோல்டனின்
இசையில், “வானம் பொழிந்தது “பாடல் இனிமை.
மற்றும் மெலடி காதல் பாடல்களும் இந்துஸ்தானி இசையும் ரசிக்க வைத்தது
பின்னனி இசை பிர மாதம்.
பாடல்களை உமா தேவியும் பாக்கியம் சங்கரும் எழுதியிருக்கிறார்கள். பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு அருமை
கலர் கரெக்ஷன் படத்தின் மூடுகேற்ப அமைத்திருப்பது பாராட்டுக்குரியது பஸ் ஸ்டாண்ட், அண்ணா டவர், கிராமத்து ஏரி, நாயகியின் வீடு, கல்ச்சுரல் பார்ட்டி, என்று ஒவ்வொரு இடத்திலும் கேமரா சுழன்று சுழன்று அருமையான காட்சிகளை நம் மனதில் பதிய வைத்திருக்கிறது.

சதீஷ்குமாரின், படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்
காட்சிகளை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும், நமக்கு கொடுத்திருக்கிறது அவருடைய படத்தொகுப்பு.
சண்முகராஜா ஆர்ட்
டைரக்டராக அருமையாக அவருடைய பணியை செய்திருக்கிறார். நாயகியின் வீடு, நாயகனின் ரூம், கல்ச்சுரல் பார்ட்டி, கிராமத்து ஏரிக்கரை, கல்யாண வீடு ,என ஒவ்வொரு இடத்திலும் அவருடைய கை வண்ணம் பளிச்சிடுகிறது.
காஸ்ட்யூம் டிசைனர் பிரவீன் ராஜா.

டான் அசோக் சண்டை பயிற்சியாளராக, சிறையில் நடக்கும் அந்த சண்டை காட்சி
பரபரப்பாக்க படமாக்கி இருக்கிறார்.

ஷெரீப் ,மற்றும் லீலாவதி, நடனப் பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார்கள் .
கல்ச்சுரல் பார்ட்டியில் நடக்கும் அந்த நடனம் செம!! கிராமத்து கல்லூரியில் நடக்கும் ,நடனம் சரி ஆரம்பத்தில் நாயகன் மஸ்த்து என்ற பாடலுக்கு ஆடும் நடனம் சரி, அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
வினோத் ஒப்பனை யாளாராக, பணிபுரிந்து இருக்கிறார் .ஒரு ஐஏஎஸ் பெண்ணுக்கு உண்டான ஒப்பனையும் ,சராசரி கிராமத்து இளைஞன் சென்னைக்கு வந்த பிறகு அவனுக்கான ஒப்பனை ,என்று இரண்டுமே வேறுபட்டு நன்றாக செய்திருக்கிறார் .
COLORIST: G. Balaji
VFX: Hocus Pocus
SOUND DESIGN: Kewyn Frederick என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர் சதீஷ்குமார் (S2meedia)

படத்தைநல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், இரண்டு உச்சம் தொட்ட இரண்டு இயக்குனர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் நண்பனுக்காகவும். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன் நண்பன் நாயகன் விது வுக்காகவும், நல்ல ஒரு சிறப்பான கதையை தேர்வு செய்து அதற்கு சரியான தொழில்நுட்பக் கலைஞர்களை பணியாற்றசெய்து, ஒரு வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ரத்தினகுமார் இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து, ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார், அவருக்கு நமது வாழ்த்துக்கள்🌷
இயக்குனரின்: ரத்ன (மேயாத மான், ஆடை புகழ்) படம் போல இப்படமும் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
இதில் நடித்த
விது, ப்ரீத்தி அஸ்ரானி, மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா
ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
: 29 வயதான சத்யா என்ற இளைஞன், IAS அதிகாரியாக விரும்பும் 21 வயது விஜி மீது காதல் கொள்வதையும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களையும் விவரிக்கிறது.இந்த படம் இளைஞர்களை நிச்சயம் இந்த படம் கவரும் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்🌷