காட்டாளன்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

அதிரடி திரைப்படமான மார்கோ’ படத்தை அடுத்து ‘காட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார்.
படம் முழுக்க வரும் சன்டை காட்சி அனல் தெரிக்கிறது 👍

🧶இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வில்லனிடம் மாட்டிய ஏழை மக்களை காப்பாற்றவும், யானைத் தந்தத்தை
போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கடத்திச் செல்வதும், வில்லன் ரெட்டியின் தம்பியை சாகடிப்பதும், இலங்கையில் நடக்கும் அந்த சண்டை காட்சிகளிலும், கடலில் நடக்கும் சண்டை காட்சி, கிளைமாக்ஸ் காட்சியில் ரெட்டியிடம், மாரியிடம் போதும் போதும் கடுமையான உழைப்பை கொடுத்து அற்புதமாக நடித்து இருக்கிறார் 👍
நாயகன் ஆண்டனி பேச்சு மிக குறைவு ஆனால் செயல் அதிகம் என்பது போல் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டு என்பது போல் மாரியின் திட்டத்தை நிறைவேற்றி கொண்டே போகிறார், அதிலும் இடைவேளை காட்சி இறந்தவர்கள் உடலில் தந்தங்களை கடத்தும் காட்சி, போலிஸ் வந்ததும் வரும் டுவிஸ்ட் என கொஞ்சம் சுவாரஸ்யம்.👍

🪩 நடிகைதுஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதிரடி சண்டைக் காட்சியில்,லூசி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.

🌄தெலுங்கு நடிகர் சுனில்,
மாரி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக பார்வையாலேயே மிரட்டி, யானை தந்தங்களை திருடி, ஒரு டானாக வலம் வருகிறார் .
காட்டில் தந்தங்களை கடத்தும் கேங்ஸ்டர், சுனில் அவருக்கு இதுபோல் கதாபாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல, மாரியாக மிரட்டியுள்ளார்,

🧶கபீர் துகான் சிங்
ரெட்டி என்ற, கதாபாத்திரத்தில் மாரியை அழிக்க நினைத்து ,தன் தம்பியை இழந்து, ஆண்ட னியைகொல்ல துடிக்கும் வித்தியாசமான வேடத்தில் மிரட்டி இருக்கிறார்.
மற்றும்
🌄ராப்பர் பேபி ஜீன்,
ராஜ் திரண்டாசு,
பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹரிஷ் நெல்சன் நாடார் என்ற இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

🌄தாய்லாந்தில் இதன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு
புகழ் பெற்ற தாய்லாந்து படமான ‘ஓங்க்- பேக்’ படத்தின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவருடைய குழுவினர் இந்தக் காட்சிகளை அமைத்துள்ளனர்
அந்த சண்டைக் காட்சிகள் அதிரடியாக இருக்கிறது.👍
இதில் ஓங்க்- பேக்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற யானையான பொங், இதிலும் நடித்துள்ளது.

,🧶காட்டாளன்’ படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். இவர் லியோ காப்ரல் என்கிற கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டலாக வருகிறார்.

🪩படம் முழுக்க: ஆக்ஷனில் போகும் இப் படத்தின். Antony Vargheseக்கு செம மாஸ் இன்ட்ரோ, ஸ்டைலிஷ் ஷாட்ஸ், ரவி பஸ்ரூரின் BGM — இவைகள்தான் படத்தின் பெரிய பலம். முதல் பாதி நல்ல டென்ஷனுடன் போகுது, குறிப்பாக யானை தந்தம் கடத்தல் பின்னணி வேற லெவல் ஃபீல் கொடுக்குது.
. “மாஸ்” காட்சிகளுக்காக நிறைய சீன்கள் build up மாதிரி மட்டும் இருக்கும். Emotional connect கொஞ்சம் weak. “style அதிகம்,
நல்ல விஷயங்கள் 👍
Antony Varghese screen presence fire
Ravi Basrur BGM theatre-la goosebumps
Cinematography & action blocks top notch
Dark gangster universe vibe
style presentation
Overall
மாஸ் ஆக்ஷன், violence, stylish gangster படம் பிடிக்கும் என் பவர்களுக்கு செம டிரீட்👍. Strong story expect இல்லை என்றாலும் விறுவிறுப்பாக இருக்கிறது.👍.

கதை களம்

(சுனில்) காட்டில் யானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து இலங்கைக்கு இல்லீகல் ஆக ஏற்றுமதி செய்து வருகிறார்,
காட்டில் வாழும் அந்த பகுதி மக்களையும் அடிமை போல நடத்தி வருகிறார்.

இவர் தன்னை எதிர்ப்பவர், லாபத்தில் பங்கு கேற்பவர் என யாரையும் பார்க்காமல் கொன்று குவிக்கிறார்.

தன்னுடன் 40 வேட்டைக்கார்களை வைத்து இந்த தந்தங்களை கடத்துகிறார், அவர்களை மிக மோசமாக அடிமை போல் நடத்துகிறார், அப்போது எப்படியாவது மாரி-யை வீழ்த்த வேண்டும் என அந்த ரெட்டி நினைக்கிறார்.

அதே நேரத்தில் மாரி-க்கு ஆப்போசிட் கேங் ஆன ரெட்டி கேங் எப்படியாவது மாரியை வீழ்த்தி கார்டல் கிங் ஆக முயற்சிக்க, அப்போது தான் நாயகன் ஆண்டனி எண்ட்ரி. அவரோ உலகில் எந்த பிரச்சனை வந்தாலும் ஒற்றை ஆளாக தீர்க்கும் ராக்கி பாய் போல் வருகிறார்.

அவரின் உதவியுடன் மாரி பல தந்தங்களை கடத்த, அந்த வேட்டைகாரர்கள் மாரி-யை வீழ்த்த ஆண்டனியிடமே உதவி கேட்கிறார்

🧶கொத்தடிமைகள் போல் நடத்தப்படும் அந்த பகுதி மக்கள் மீட்க்கப்பட்டார்களா?

🧶ரெட்டி கும்பல் மாரியை வீழ்த்த போடும் திட்டம் நிறைவேறியதா?

🧶சைனி என்ற அந்த குழந்தை இறப்புக்கு காரணமான மாரியை, ஆண்டனி பழி தீர்த்தாரா?

🧶ரெட்டியின் தம்பியை கொன்றதற்காக ஆண்டனியை, ரெட்டி பழிவாங்கத் துடிக்கிறார் .அது நிறைவேறியாதா ?

🧶காட்டுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில் யார்? வெற்றி பெற்றார்கள்!! என்பதில் அதிரடியாக சொல்லி இருக்கிறது இந்த *காட்டாளன்”🧶

.
🧶: Banner : Cubes Entertainments
Produced by : Shareef Muhammed

🧶கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் Paul George
படம் முழுக்க அதிரடி காட்சிகளை, சகட்டுமேனிக்கு சளிப்பு திட்டாமல் திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார்.

🧶Music by : Ravi Basrur
Additional song by : B. Ajaneesh Loknath
படத்தின் பி. ஜி.எம் எகிர வைக்கிறது துள்ளலாக இருக்கிறது.

🧶Dialogues : Unni R
ரசிக்க வைக்கிறது .
குறைவான வசனம் என்றாலும் நிறைவைத் தருகிறது.

🧶DOP : Renadive
Additional DOP : Chandru Selvaraj, Sudeep Elamon
படம் முழுக்க ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறது. தாய்லாந்தில் நடக்கும் அந்த சண்டை காட்சி கேமராவின் கோணம் மிகவும் கவனத்தை ஈர்க்கிறது.

🧶Editor : Shameer Muhammed
செம சார்ப்பாக பணத்தை செதுக்கியிருக்கிறார் இரண்டு மணி நேரம் என்றாலும் சூப்பர் பாஸ்ட்

🧶Stunts : Action Sandhosh , Kecha Khamphakdee
சண்டைக் காட்சிகளை இவர்கள் வித்தியாசமாக அமைத்து கைதட்டுகளை வாங்கி இருக்கிறார்கள்.

🧶Writers: Paul George , Joby Varghese , Jero Jacob
மூவரும் சேர்ந்து தெளிவான திரைக்கதையில், படத்தை பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

🧶Costume : Dhanya Balakrishnan

🧶Makeup: Ronex Xavier

🧶VFX : 3 Doors
Colourist : Srik Varier

🧶மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள். படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். 👍

🧶தமிழில் புகழ்பெற்ற நிறுவனமான
ஏஜிஎஸ் சினிமா இந்த படத்தை வெளியிடுகிறது. அவர்கள் படத்தை வெளியிட்டாலே படம் வெற்றி தான் இந்த படமும் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கிறது.👍