கதை களம்
👽போதை பொருள் விற்பனை செய்து வரும்
வர்கீஸ் ,ஜெயராம், ஊர்வசி குடியிருக்கும் பகுதியில் மிக மோசமான ஒரு கேங்ஸ்டர், கொலைகாரன். அவனுக்கு ஜெயராம்,
ஊர்வசி தம்பதி யின் இளைய மகள் மதுமதி மீது மயக்கம். அவரை தொந்தரவு செய்கிறான்.
வர்கீசை கொலை செய்து விடலாமா? என்று யோசிக்கிறது அந்த குடும்பம்.
அதன் பிறகு தீடிரென
வர்கீஸ் கொலை செய்ய பட ,ஜெயராம்.ஊர்வசி மற்றும் அவரது இரண்டு மகள்கள் சந்திக்கும் சிக்கல்களே கதை!
🌸பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதியினர் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா)
இவர்களில் யார் கொலை காரர்.
🌚பராசக்தியின் காதலன் சிற்றரசு, இந்த கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார்? அவர் யார்? என்பது ட்விஸ்ட்
😎காவல்துறை அதிகாரி, மிஷ்கின் இதை எப்படி துப்பு துலக்குகிறார்?
அவர் ஆமை வேகத்தில் இந்த கொலை வழக்கை ஆராய வேண்டிய அவசியம் என்ன?
👍கோவியர் என்னும் தமிழ் குமரன் மேலதிகாரியிடம் சொல்லி ,அவர் தன்னுடைய பாணியில் துப்புதலக்குகிறார் .
அவருக்கு துப்பு கிடைத்ததா?
🌚இதற்கிடையில் வர்கீஸ் அம்மா காயத்ரி ,பரிமளா குடும்பத்தை பழிவாங்க புறப்படுகிறார்!! அவரும் கொல்லப்படுகிறார்!!
அவரை கொலை செய்தது யார்?😨
😨இப்படி கொலைகளுக்கு மேல் கொலை நடக்கிறது!! இதை செய்தவர்கள் யார்? பக்ஸ் ,சிங்கம் புலியும், நாங்கள்தான் கொன்றோம்!! என்று சொல்கிறார்கள்? ஆனால் அவர்கள் இல்லை!!
🥵 சென்ராயன் ஒரு பக்கம் தன் வன்மத்தை தீர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்!? அவரும் இல்லை!!
அப்படி என்றால் வர்கீஸ் காதலித்து ஏமாற்றிய கோமதி வர்கீசை கொன்றாரா?
🪩இப்படி
எதிர்பார்ப்பு உண்டாக்கி, படம் விறுவிறுப்பாக ரெக்க கட்டி பறக்கிறது.
🔥படத்தின் ஆரம்பத்தில் ஜெயராம் பெயர் பரிமளா என்பதும் ஊர்வசியின் பெயர் சுதந்திரம் என்பது புதுமையாக ஆரம்பிக்கிறார் இயக்குனர்.
😎இயக்குனர் மிஷ்கின் என்டிரியாகும் காட்சி ,
தீபாவளி அன்று எண்ணை தேய்த்து லுங்கி கட்டிக்கொண்டு, காக்கி சட்டை போட்டு கொண்டுவரும் காட்சி புதுமை.👍
நடிகர்கள் & நடிகைகள்
🌸,ஜெயராம், போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு, அது நடக்காததால் தன் குடும்பத்துக்குள்ளேயே துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறார். இன்னசெண்டாக சிரித்துக் கொண்டே தன் மகள் ,மனைவி மீது சந்தேகம் படுவதும், தன் மச்சினன், தம்பி மீது, சந்தேகப்படுவது வர்க்கீஷ் செய்யும் தொந்தரவை தாங்க முடியாமல் தவிப்பதும் ,என மனுஷன் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.👍
💩நடிப்பு ராட்சசி என்று கமலஹாசனால் பாராட்டப் பெற்ற
ஊர்வசி, இந்தப் படத்தில் அனாசயமாக அற்புதமாக கலகலக்க வைக்கிறார்👍 .அவர் அப்பாவியாக ஒவ்வொரு வசனமும் பேசிவிட்டு தன் கணவன் கோபப்படுவதை கண்டு சமாளிப்பதும் இயக்குனர் மிஷ்கின் டம் ,அதிக பிரசிங்கையாக பேச, மிஷ்கின் தலைவலி தைலம் எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொள்ள ஊர்வசி,அதற்கு நன்றாக மூக்கை உறிஞ்சுங்கள். என்று சொல்வதும், ஜெயராம் எடுத்த பட்டுப்புடவையை விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைவதும், மகள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ள கோபப்படுவது!! என ஒவ்வொரு காட்சியிலும் ஊர்வசி ஜொலிக்கிறார் 👍
😨சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,
பராசக்தி என்ற கதாபாத்திரத்தில், தைரியமிக்க பெண்ணாக வர்க்கிஷிடம் மோதி அவனை கொலை செய்ய திட்டமிடுவதும்,
காதலனிடம் கொலை செய்ய முடியுமா என்று கேட்டு,
அதற்காக காய் நகர்த்துவதும் ,என கதாபாத்திரத்தில் இவர் முதன்மைப்பெருகிறார்.👍
🔥 அனந்திகா
அக்காவிடம் அடிக்கடி சண்டைக்குப் போகும் இவர் வர்கீஸ் செய்யும் தொந்தரவால் ஒரு நிமிடம் மனம் சஞ்சலப்பட்டு அவரையே காதலித்து விட்டேன் என்று சொல்ல முற்படும் பொழுது இவருடைய கதாபாத்திரம் இந்த காலத்து பெண்களின் மனநிலையை காட்டுகிறது👍
😎இயக்குனர் மிஷ்கின் எம்பெருமான் என்ற கதாபாத்திரத்தில், படம் முழுக்க,லூட்டி அடிப்பதும், கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைப்பதும், என படத்தின் முதல் சல்யூட் இவருக்கு தான். 🔥
💩நடன இயக்குனர் சாண்டி, வர்கீஸ் கதாபாத்திரத்துக்கு மிகக் கட்சிதமான தேர்வு .அவருடைய மொழியும், பேயாக வந்து மதுமிதாவை மிரட்டுவதும்,💩 அடாவடியும், லோக்கல் ரவுடியை அச்சு அசலாக காட்டுகிறது .🔥
🤓ஊர்வசி குடியிருக்கும் வீட்டு உரிமையாளராக யோகிபாபு,
மோட்டார் போட்டு தண்ணீர் கீழே போய்க் கொண்டிருப்பதைக் கண்டு சளிப்பதும், குடும்பமே எஸ்கேப் ஆகிவிட்டார்கள். என்று மிஸ்கின் இடம் போட்டு கொடுப்பதும், படம் முழுக்க இவர் வரும் இடங்களில் கலகலப்பு,
மற்றும் சனல் குமார்.
சென்றாயன். காயத்ரி, சிங்கம்புலி, பக்ஸ் பூர்ணிமா ,
ஆதித்யா, தமிழ் குமரன் என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்👍
ஹைலைட்ஸ்.
💩எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளும் அக்கா தங்கை .
😨இவர்களுக்கு வரப்போற கணவன்மார்கள் என்ன பாடுபடப் போறாங்களோ என்று நினைக்கும் அம்மா.
🥵வாடகை வீடு.
இவர்களின் அலட்சியங்களால் டென்சன் ஆகும் வீட்டு ஓனர் (யோகிபாபு)
🌚அப்பாவியாக தோன்றும் ஒருவனை அக்கா காதலிக்க, தங்கையை ஒரு போதைப் பொருள் கடத்தல், அடிதடி ரவுடி (நடனம் சாண்டி) விரட்டி விரட்டி லவ் டார்ச்சர் கொடுக்கிறான்.
💩 தைரியசாலி அக்கா ரவுடியை மிரட்டுகிறார்
👽 ரவுடியின் அடாவடி ஆத்தா மகனின் காதலுக்கு ஆதரவு.
🌚ரவுடியின் தொல்லைகள் அதிகரிக்க, பேசாமல் ரவுடியை கொலை செய்யலாமா? என்று பெண்ணின் குடும்பம் யோசிப்பது😨
🥵கணவன், மனைவி, அக்கா பராசக்தி, , தங்கை மதுமிதா நால்வரும் தங்களுக்கு யாரோ ஒருவர்தான் ரவுடியை கொலை செய்து விட்டதாக ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது
👁️ரவுடியை கொன்றது யார் ?
பரிமளா குடும்பமா? சென்ராயனா? காயத்ரியா? சிங்கம் புலி? பக்ஸா?
சனல் குமாரா ? கோமதியா?
இப்படி ஒவ்வொருவர் பக்கமும் இயக்குனர் கேமராவை திருப்பி
விறுவிறுப்பாக பரபரப்பும் ஏற்படுத்தி இருக்கிறார். கடைசி வரை யூகிக்க முடியாத அந்த ட்விஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் உருக்கமாகவும், நாட்டுக்கு தேவையானதாகவும் அமைந்தது. படத்தை தூக்கி நிற்கும் கிளைமாக்ஸ்👍
தொழில்நுட்ப கலைஞர்கள்
👑கதை ,வசனம், எழுதி லைக்கா வோடு இணைந்து தயாரித்து, படத்தை இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
படத்தின் மிகப்பெரும் வெற்றியே திரைக்கதை தான். அதை சரியாக கையாண்டிருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். படத்தில் ரசிகர்கள் அடுத்து என்ன என்று சிந்திக்க வேண்டிய காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
மிக நேர்த்தியான ஒரு ஸ்கிரீன் ப்ளேயை கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். அந்த குடும்பத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என ஆடியன்ஸுக்கு சஸ்பென்ஸ் வைத்ததிலேயே பாண்டிராஜ் ஜெயித்து விட்டார் 👍
🌸படத்தில் பின்னணி இசையை
பார்க்ன் பிரமாதமாக
கொடுத்து இருக்கிறார் .👍
காணாயோபாடல்இனிமை
🌸ஜார்ஜ் வில்லியம் ஒளிப்பதிவு மிக அருமை.
.
👑படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ்
படத்தை விறுவிறுப்பாக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்.
🪩ராமலிங்கம் ஆர்ட் டைரக்டராக, பணி புரிந்திருக்கிறார். ஊர்வசியின் வீடு, வர்கீசன் வீடு, கேரளாவில் நடக்கும் சம்பவம் என எல்லா இடங்களிலும் இவர் கைவண்ணம் நன்றாக இருக்கிறது
🌄கலை கிங்ஸ்டன் சண்டை பயிற்சியாளராக நேர்த்தியாக கையாண்டு உள்ளார்.
👑சாண்டியும், பாபா பாஸ்கரன் நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். சாண்டி ஆடும் அந்த கோமதியுடன் நடன பயிற்சி சூப்பர்.
🌸காஸ்ட்யூம் டிசைனராக பூர்ணிமா ராமசாமி .
காஸ்ட்யூமராக, நட்ராஜ், பணி
புரிந்திருக்கிறார் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, என அனைவருக்கும் உடைகள் தேர்வு கட்சிதம்.👍
🔥Audiography : M.R. Rajakrishnan
VFX Producer : B.R. Venkatesh
DI : Knack Studios
Colourist : Prasath Somasekar
Stills : Theni Murugan
PRO : Sathish&SIVA (AIM)
👑என எல்லோரும் ஒரு வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍 வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் பரிமளா &கோ🌸
